62.. 3.. நோட் பண்ணீங்களா.. அப்பட்டமா தெரிஞ்சு போச்சே.. கமுக்கமான பாஜக.. அதுக்குன்னு இப்படியா செய்வது
சென்னை: எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ஆளுமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாகவே கருதப்படுகிறது.. மற்றொரு புறம் ஓபிஎஸ் மேலும் பலவீனப்பட்டுள்ளதாகவே கணிக்கப்படுகிறது.. நேற்றைய நிகழ்வில் இதை உணரவும் முடிகிறது.
யார் அதிமுகவை கைப்பற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லை.. நாளுக்கு நாள் எடப்பாடி - ஓபிஎஸ் இரு தலைவர்களுக்குள் முட்டல் மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
அதிலும் நேற்றைய தினம், பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு சென்னை வந்திருந்த நிலையில், இவர்கள் 2 பேரின் பிளவுகள், மேலும் அதிகரித்து காணப்பட்டது அப்பட்டமாக தெரியவந்தது.
எடப்பாடி கிளம்பும் வரை வெளியிலேயே வரலயே.. பின்னர் மேடையேறிய ஓபிஎஸ்.. பாஜக கண் அந்தப் பக்கம்? ஆத்தீ!

எடப்பாடி பழனிசாமி
பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு, இவர்கள் 2 பேரும் சந்தித்து கொள்ளவேயில்லை.. நேற்றைய தினம், எப்படியும் இவர்கள் சந்தித்து கொள்வார்கள் என்றே கணக்கு போடப்பட்டது.. ஒருகட்டத்தில், எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்துக்கு வரமாட்டார் என்றும் செய்திகள் கசிந்தன.. காரணம், எடப்பாடி பழனிசாமியின் மனைவி தொற்று பாதிப்பு சிகிச்சையில் உள்ளதால், கடந்த 4 நாட்களாகவே, யாரையும் சந்திப்பதை எடப்பாடி தவிர்த்து வருவதாக சொல்லப்பட்டது.. அதனால், டெல்லிக்கு தம்பிதுரையை தன்னுடைய பிரதிநிதியாக அனுப்பி வைத்ததைபோல, இந்த கூட்டத்துக்கும் வேறு யாரையாவது அனுப்பி வைப்பார் என்றே சொன்னார்கள்.

ஹோட்டல்
ஆனால், அப்படி எதுவும் இல்லை.. அனைத்து யூகங்களையும் தவிடுபொடியாக்கிவிட்டு, நிகழ்ச்சி நடக்கும் ஸ்டார் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார்.. அதேபோல, டெல்லியில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மனு தாக்கலின் போது ஓபிஎஸ் நேரிலேயே சென்றிருந்தார்.. அதனால், திரௌபதி சென்னை வரும் நிலையில், ஓபிஎஸ் முதல் ஆளாக செல்வார் என்று கணிக்கப்பட்டது.. இந்த எண்ணமும் தவிடுபொடியானது.. திரௌபதி வரும் வரையில், ஆளுக்கு ஒரு பக்கம் ஹோட்டல் ரூமில் தனித்தனியாக காத்திருந்தனர்.

ஹோட்டல் ரூம்
பிறகு, எடப்பாடி தனது ஆதரவாளர்களுடன் சென்று உட்கார்ந்தார்.. திரௌபதி முர்முவுக்கு சால்வை போர்த்தி அதிமுக சார்பாகவும் ஆதரவு தெரிவித்தார்.. ஆனால், எடப்பாடி சென்ற பிறகுதான் திரௌபதியை சந்திக்க அரங்கிற்குள் நுழைந்தார் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ்.. இந்த சம்பவம் 2 விதமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.. ஒன்று அதிமுக சார்பாகவும், மற்றொன்று பாஜக சார்பாகவும் இந்த நிகழ்வு பார்க்கப்பட்டும் வருகிறது.

எடப்பாடி பிளான்
அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பலத்தை அந்த மேடையில் காட்டி உள்ளார்.. தன்னுடைய 62 அதிமுக எம்எல்ஏக்களுடன் மேடை ஏறி, ஆதரவு தெரிவித்து உரையும் நடத்தி உள்ளார்.. ஒவ்வொரு விஷயத்திலும் எடப்பாடியின் உறுதிப்பிடிப்பு தெரிவது போலதான் இந்த விஷயத்திலும் தெரிகிறது.. அதேசமயம், ஓபிஎஸ் இந்த விஷயத்திலும் பலவீனப்பட்டுள்ளதாகவே உணர முடிகிறது..

பின்னடைவு
டெல்லி வரை ஓடோடி சென்று, திரௌபதிக்கு ஆதரவு காட்டியவர், நேற்யை தினம் முதல் நபராக சென்றிருக்க வேண்டும்.. மாறாக, மேடையில் ஓபிஎஸ் வராமல், தனியாக ரூமில் இருந்தது, அவர் கட்சியில் மேலும் பலவீனமாக இருப்பதை உணர்த்துவதாக தெரிகிறது.. எடப்பாடி சென்ற பிறகு, தனியாக வந்தது கிட்டத்தட்ட பின்னடைவு போலவே பார்க்கப்பட்டு வருகிறது... இது ஒரு சாதாரண நிகழ்வு என்றாலும், தான் தனித்து விடப்பட்டிருப்பதை போல ஓபிஎஸ் காட்டிக்கொள்ள முயல்கிறாரா? என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

தனிமேடை
மேலும் கூட்டம் முடிந்தபிறகு, ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்று செய்தியாளர்களிடம் அழுத்தந்திருத்தமாக ஓபிஎஸ் சொல்லிவிட்டு சென்றாலும், ஒரு கூட்டணி கட்சி தலைவர் போல, தனியாக மேடையில் ஏறியதை, ஏற்க முடியாததாகவே உள்ளதாக சலசலப்புகள் எழ ஆரம்பித்துள்ளன.. மரியாதை நிமித்தமாகவும், யதேச்சையாகவும் கூட இந்த தலைவர்கள் சந்தித்து கொள்ளாதது, இவர்களின் விரிசலை அதிகப்படுத்தி காட்டியதுடன், கிட்டத்தட்ட பலப்பரீட்சை போலவே அமைந்துவிட்டதாக தெரிகிறது.. அந்த பலப்பரீட்சையில் எடப்பாடியே வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

மெஜாரிட்டி
பாஜகவை பொறுத்தவரை, ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் 2 பேரின் விவகாரங்களில் தலையிடவில்லை.. ஒதுங்கியே இருக்கிறது.. இத்தனை நாளும் பாஜக தலையிடாத நிலையில், திரௌபதி சென்னை வருகையை ஒட்டி, இவர்கள் 2 பேரையும் ஒன்று சேர வைக்கும் முயற்சியையாவது பாஜக எடுத்திருக்கலாம் என்கிறார்கள்.. ஆனால், கடைசிவரை இவர்கள் விஷயத்தில் பாஜக தலையிடவில்லை..

சலசலப்புகள்
என்ன இருந்தாலும், 2 தலைவர்களையும் ஒரே மேடையில் உட்கார வைக்க முயற்சியையாவது எடுத்திருக்கலாமே என்ற முணுமுணுப்புகள் கிளம்பாமல் இல்லை.. அதேசமயம், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் சம அளவிலேயே பாஜக கருதுவதாக தெரிகிறது.. அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியே தங்களுக்கே வர வேண்டும் என்பதிலும், பாஜக இப்படி கவனமாக இருக்கலாம் என்கிறார்கள்.. எப்படி பார்த்தாலும், இத்தனை நாளும் கட்சிக்கு உள்ளே புகைச்சல் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று பொதுவெளியில் வெடித்து கிளம்பி விட்டது அதிமுகவின் பலவீனத்தையே பிரதிபலித்துவிட்டது..!