சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அறிவாலயத்தில்.. ஸ்டாலின் காதில் கிசுகிசுத்த வைகோ.. டக்கென முகம் மாறிய முதல்வர்.. இதுதான் விஷயமே

: அறிவாலயத்தில் ஸ்டாலினிடம் வருத்தப்பட்டாராம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டாலினின் முகம் மாறும்படி, அப்படி என்ன விஷயத்தை சொன்னார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.. என்ன நடந்தது?
இந்த முறை, திமுக ஆட்சியை பிடித்ததில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி கொண்டிருக்கிறது.. இதில், சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் நிறையவே புகார்கள் திமுக தரப்பில் சொல்லப்பட்டன.

செம டேஸ்ட்.. பலா மரத்தில் 2 கால்களை வைத்து.. அப்படியே கெத்தாக பழத்தை பறித்த யானை! வியந்த கோத்தகிரிசெம டேஸ்ட்.. பலா மரத்தில் 2 கால்களை வைத்து.. அப்படியே கெத்தாக பழத்தை பறித்த யானை! வியந்த கோத்தகிரி

அதிலும், கூட்டணி கட்சிகளே இந்த அதிருப்திளை பகிரங்கமாக தெரிவித்தன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் திமுக தன் தரப்பில் ஆட்களை நிறுத்தி வெற்றியும் பெற வைத்துவிட்டது..

 ஓபன் டாக்

ஓபன் டாக்

மேலும் இதில் வெற்றி பெற்றவர்கள், தலைவர்களாகவும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.. இதனால் கூட்டணி தலைவர்கள் மனம் நொந்து போனார்கள்.. இந்த விஷயத்தை எப்படி ஸ்டாலினிடம் சொல்வது என்று அனைவருமே கையை பிசைந்தனர்.. அப்போது திருமாவளவன்தான் ஓபனாகவே, தன்னுடைய வருத்தத்தை செய்தியாளர்கள் முன்பு போட்டு உடைத்தார்..

 ராஜினாமா

ராஜினாமா

திருமாவளவன் மீடியாவில் இப்படி பேசியதை ஸ்டாலினே நேரடியாக பார்த்தார்.. இதற்கு பிறகுதான் அதிர்ந்து போன முதல்வர், உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகளை எச்சரித்தார்.. அவர்களை கண்டித்தார்.. மொத்த பேரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அறிவாலயம் வந்து சேர வேண்டும் என்று உத்தரவிட்டார்.. இதையடுத்து, அந்த நிலைமை மெல்ல மெல்ல சீரானது.

 வைகோ

வைகோ

இப்போது விஷயம் என்னவென்றால், அந்த பிரச்சனை முழுமையாக சரியாகவில்லையாம்.. காரணம் வைகோதான் இந்த விஷயத்தை இப்போது ஆரம்பித்துள்ளார்.. வைகோவை பொறுத்தவரை, கொஞ்ச நாட்களாகவே உடல்நிலை சரியில்லை என்றாலும், அதற்காகவே தீவிரமான பிரச்சாரத்தை இந்தமுறை சட்டமன்ற தேர்தலில் மேற்கொள்ளவில்லை என்று சொல்லப்பட்டாலும், வழக்கத்துக்கு மாறான உற்சாகத்தை இழந்து காணப்பட்டாராம் வைகோ.

அறிவாலயம்

அறிவாலயம்

மற்றொருபக்கம் அவருக்கு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உட்கட்சி பிரச்சனையும் தலைதூக்கி உள்ளது.. வாரிசு அரசியலை அன்று எதிர்த்துவிட்டு இன்று கையை பிசைந்து நிற்கும் சூழலுக்கு வைகோவுக்கு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.. இந்நிலையில், அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சமீபத்தில் சந்தித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ... மிகவும் உற்சாகமின்றி இருந்துள்ளார் வைகோ..
இதை கவனித்துவிட்ட முதல்வர் ஸ்டாலின், மிகவும் அக்கறையாக வைகோவிடம் உடல்நலம் குறித்து விசாரித்திருக்கிறார்.. அதன் பிறகு அரசியல் ரீதியாக சில விசயங்களை இருவரும் பேசியிருக்கிறார்கள்

 வார்னிங்

வார்னிங்

அப்போது வைகோ சில விஷயங்களை மனம்விட்டு முதல்வரிடம் சொன்னாராம்.. "உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற திமுகவினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நீங்கள் எச்சரிக்கை செய்தீர்கள். ஆனா, மதிமுகவுக்கு எதிராக நின்று ஜெயித்தவர்கள் ராஜினாமா செய்யவில்லை" என்று வருத்தப்பட்டாராம் வைகோ. வைகோ சொன்னதை முழுமையாக காது கொடுத்து கேட்டுக் கொண்டாராம் முதல்வர் ஸ்டாலின்.. ஆஹா... அப்படின்னா, "இருக்கு"... கண்டிப்பா இருக்கு... அவங்க எல்லாருக்கும் இருக்கு...!

English summary
Did mdmk Vaiko tell Stalin about DMK executives and what happened in anna arivalayam அறிவாலயத்தில் ஸ்டாலினிடம் வருத்தப்பட்டாராம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X