சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்படியா.. துரைமுருகனுக்கு போன் போட்டாரா முக. அழகிரி.. டி.ஆர்.பாலுவை மட்டும் வாழ்த்தலயாமே.. உண்மையா?

Google Oneindia Tamil News

சென்னை: "அதென்ன, துரைமுருகனுக்கு மட்டும் முக அழகிரி வாழ்த்து சொல்லி இருக்காரே... டிஆர் பாலுவுக்கு ஏன் சொல்லவில்லை" என்ற சந்தேகம் கலந்த பூகம்பம் ஒன்று அறிவாலயத்தை வட்டமிட்டு கொண்டிருக்கிறதாம்!

திமுகவில் பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.. இதற்காக திமுகவே பூரிப்பில் திளைக்கிறது... பல்வேறு கட்சியினர் இவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

இந்நிலையில், ரொம்ப காலமாக அமைதியாகவும், ஒதுங்கியும் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி, துரைமுருகனுக்கு போன் போட்டு வாழ்த்துக்களை சொல்லி உள்ளார்.. "எல்லாம் நல்லது நடக்கும்.. பொறுமையாக இருங்க" என்றும் சொன்னாராம்.. ஆனால், டி.ஆர்.பாலுவுக்கு வாழ்த்து எதுவும் சொல்ல காணோம்... இதுதான் ஏன் என்று தெரியவில்லை.

"தமிழகத்திலும் பாஜக ராஜாதான்" எச். ராஜாவே சொல்லிட்டார்.. திமுக, அதிமுக கேட்டுச்சா?!

 துரைமுருகன்

துரைமுருகன்

துரைமுருகனை பொறுத்தவரை, கலைஞரின் செல்லப்பிள்ளை.. இளைஞனாக இருந்தபோதிருந்தே கருணாநிதி வீட்டுக்கு உரிமையுடன் சென்று வருவார்.. அதனால், சிறுவர்களாக இருந்த அழகிரி, ஸ்டாலின் முதல் எல்லாருக்குமே துரைமுருகன் மீது தனி பாசம் .. அப்போதிருந்தே, துரைமுருகன் மீது அழகிரிக்கு இயல்பாகவே ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிட்டது உண்மைதான்.

 நோ கமெண்ஸ்

நோ கமெண்ஸ்

அதேபோல, துரைமுருகனுக்கும் அழகிரி என்றால் பிரியம் அதிகம்.. எத்தனையோ, முறை அழகிரியின் பரபரப்பு பேட்டிகள், உள்ளிட்ட பல விவகாரங்கள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும்போதெல்லாம், "ஸாரி.. நோ கமெண்ட்ஸ்" என்று இரண்டு கைகளையும் தூக்கிவிடுவார் துரைமுருகன்.. எந்த எதிர்மறை கருத்தையும் சொல்ல மாட்டார்.

 அழகிரி

அழகிரி

பொதுவாகவே, ஆரம்ப கட்ட, அடிமட்ட தொண்டர்கள் என்றால் அழகிரிக்கு ரொம்ப இஷ்டம்.. கஷ்டப்பட்டு மேலே உயர்பவர்களை கைதூக்கி விடுபவரும்கூட.. எத்தனையோ பேரை உயர்த்தியும் விட்டவர்.. அந்த நன்றியை பலர் இன்னமும் இவரிடம் மறக்கவில்லை.

 துரைமுருகன்

துரைமுருகன்

இடையில் வந்தவர்கள், திடீரென கட்சிக்குள் வந்தவர்கள், தடாலடியாக பொறுப்பில் உயர்ந்தவர்களை ஒருபோதும் அழகிரி ஊக்குவிக்க மாட்டார்.. அந்த வகையில் துரைமுருகனை அழகிரிக்கு பிடித்திருக்கலாம், ஒரே தொகுதியில் விடாமல் நின்று போட்டியிட்டு ஜெயித்து வருபவர் என்ற ரீதியிலும் அவரை பிடித்திருக்கலாம்.. அதனாலேயே அவருக்கு மட்டும் வாழ்த்து சொல்லி இருக்கலாம் என்கிறார்கள்.

 டிஆர். பாலு

டிஆர். பாலு

இதில்தான் டிஆர் பாலு வித்தியாசப்படுகிறார்.. துரைமுருகன் போல ஆரம்ப காலத்தில் இருந்து அவர் திமுகவில் இல்லை.. குடும்ப ரீதியான சிபாரிசுகள் அவருக்கு நிறைய இருந்திருக்கிறது... அடிக்கடி தொகுதிகள் மாறியும் போட்டியிட்டவர்.. எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்டாலினுடன் நெருக்கமாக இருப்பவர், இந்த காரணமும் அழகிரிக்கு இடித்திருக்கலாம்... எத்தனையோ அடிமட்ட தொண்டர்கள், இளைஞர்கள் இருக்கும்போது, டிஆர்.பாலு தன் மகனுக்கும் எம்எல்ஏ சீட் வாங்கி தந்ததும், அழகிரிக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்திவிட்டதாக சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள்

இன்னும் கொஞ்ச நாளில் தேர்தலும் வரப்போகிறது.. அழகிரியின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே வெளிப்படையாக குரல் கொடுக்கவும் தொடங்கியுள்ளனர்.. "தலைமையேற்க வா" என்ற போஸ்டர்கள் மதுரை மண்டலத்தை தாண்டி, வெளியே வந்து, கொங்குவில் எதிரொலித்து கொண்டிருக்கிறது.. இதைவிட ஒருபடி மேல போய், "கலைஞரின் தொண்டர்களை காப்பாற்று" என்றெல்லாம் போஸ்டர்கள் அடித்து ஒட்ட ஆரம்பித்துவிட்டனர்.

Recommended Video

    'வணக்கம்..ம்மா.. ஸ்டாலின் பேசறேன்'.. சோஷியில் மீடியாவில் படு வைரலாகி வரும் ஆடியோ
     என்ன விஷயம்?

    என்ன விஷயம்?

    இப்படிப்பட்ட சமயத்தில்,"கொஞ்சம் பொறுமையாக இருங்கள், நல்லதே நடக்கும்" என்று துரைமுருகனிடத்தில் அழகிரி போனில் சொன்னதாக கூறுகிறார்கள்.. இது உண்மையோ, பொய்யோ தெரியவில்லை.. ஆனால், வாழ்த்து சொல்வதானால், பொறுப்பேற்கும் 2 பேருக்குமே அழகிரி சொல்லி இருக்க வேண்டும்.. அல்லது 2 பேருக்குமே சொல்லாமலாவது இருந்திருக்கலாம்.. இப்போது ஒருத்தருக்கு மட்டும் சொன்னது ஏன்? ஏதாவது காரணமா? பின்னணியில் ஏதாவது தடாலடிகள் உள்ளதா? அல்லது வேண்டுமென்றே ஒரு சீண்டலை செய்திருக்கிறாரா அழகிரி? என்றெல்லாம் எதுவுமே தெரியவில்லை.

    English summary
    Did MK Azhagiri greet Duraimurugan over phone?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X