டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. "அவர்" தூங்குறாரு.. ஸ்டாலினிடம் பேச துடித்த ஓபிஎஸ்? இரவில் நடந்த பகீரத மூவ்?
சென்னை: அதிமுக பொதுக்குழுவை எப்படியாவது தடுத்து நிறுத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் முயன்று வருகிறார் என்பது எல்லோரும் அறிந்த தகவலே.. இதற்காக நேற்று இரவு மிக தீவிரமான சில முயற்சிகளை எடுத்து இருக்கிறாராம் ஓபிஎஸ்.. அதிலும் முதல்வர் ஸ்டாலின் தரப்பையே ஓபிஎஸ் தரப்பு அணுகியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.. அப்படி என்ன நடந்தது?
அதிமுக பொதுக்குழு கூட இன்னும் 24 மணி நேரம் கூட முழுமையாக இல்லை. நாளை இந்நேரம் அதிமுக பொதுக்குழுவில் காரசார விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும். நாளைய பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டால் பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் ஆகிவிடுவார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின் சசிகலா வகித்த பொறுப்பை.. எடப்பாடி வசப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூதராய் ஓ.ராஜா! அப்படியே ’அங்கே’ பயணம்! ’ஒற்றை தலைமை சசிகலா’ தீர்மானம்! கடைசியாய் தயாரான அணுகுண்டு!

எடப்பாடி பொதுச்செயலாளர்
அதிமுக உட்கட்சி விவகாரங்கள், அடுத்தடுத்த சந்திப்புகள், மாற்றங்களும் இதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. வரிசையாக எடப்பாடி தரப்பிற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில்.. எடப்பாடி கிட்டத்தட்ட வெற்றிகோட்டிற்கு மிக அருகில் வந்துவிட்டார். இந்த நிலையில்தான் அதிமுக பொதுக்குழுவை எப்படியாவது தடுத்த நிறுத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக முயன்று வருகிறார். ஒரு பக்கம் பொதுக்குழுவிற்கு எதிராக இன்று வழக்கு விசாரணை நடக்க உள்ளது (இது ஓபிஎஸ் தொடுத்த "நேரடி" வழக்கு அல்ல).

ஆவடி போலீஸ்
இன்னொரு பக்கம் நேற்று ஆவடி போலீசிடம் இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் முறையிட்டார். இந்த கூட்டம் காரணமாக பாதுகாப்பு பிரச்சனை, சட்ட ஒழுங்கு பிரச்சனை, கலவரங்கள் ஏற்படலாம் என்பதால் கூட்டத்திற்கு அனுமதி தர கூடாது என்று ஓபிஎஸ் முறையிட்டார். நேற்று பிற்பகலில் ஓபிஎஸ் தரப்பு இந்த கோரிக்கையை வைத்தது. இந்த நிலையில் போலீஸ் மூலம் பொதுக்குழுவுக்கு தடை பெற்றுவிட நேற்று இரவு பகீரத முயற்சியை எடுத்துள்ளார் ஓபிஎஸ்.

ஸ்டாலின் முயற்சி
முதல்வர் ஸ்டாலினிடம் பேசிவிட வேண்டும் என்று துடியாய் துடித்துள்ளார் ஓபிஎஸ் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானர்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலின் தொடர்பு அவருக்கு கிடைக்கவில்லை. உயர் அதிகாரி ஒருவர் மூலமாக ஸ்டாலினின் கவனத்துக்கு ஓபிஎஸ்சின் முயற்சி சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து எப்படியாவது அவரிடம் போனில் பேசலாம் என்று ஓபிஎஸ் முயன்று உள்ளார். ஆனால் காய்ச்சலில் அவதிப்பட்ட ஸ்டாலின் சீக்கிரமே உறங்க சென்று விட்டார்.

தூங்குகிறார்
அதனால், அந்த அதிகாரியிடம், முதல்வர் தூங்குகிறார் ; டிஸ்டர்ப் செய்ய முடியாது என "குடும்பத்தினர்" தரப்பு சொல்லிவிட்டது. இதனை ஓபிஎஸ்சிடம் தெரிவித்து விட்டார் அந்த அதிகாரி. இதனால் ஓபிஎஸ் உடைந்து போனதாக கூறப்படுகிறது. கடைசி அஸ்திரமும் போய்விட்டதே. ஆளும் தரப்பு நம்முடன் இருந்திருந்தால் ஏதாவது செய்து இருக்கலாமே என்று வருந்தி இருக்கிறார். ஆனால் முதல்வரை நேரடியாக ஓபிஎஸ்ஸால் தொடர்பு கொள்ளவே முடியவில்லையாம்.

உறவுக்காரர் முயற்சி
அதே சமயம் நேற்று இரவும், இன்று காலையும் முதல்வர் ஸ்டாலினின் "உறவுக்காரர்" ஒருவர் மூலம் ஓபிஎஸ் மகன் எடுத்த முயற்சிகளும் தோற்றுப் போய்விட்டன. இன்று விடியற் காலையில், ஓபிஎஸ் கொடுத்துள்ள புகார் மீது என்ன முடிவெடுப்பது என்று அதிகாரிகள் தரப்பில் ஸ்டாலினிடம் கேட்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலினோ, "இதில் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை காவல் துறை மேற்கொள்ளட்டும்" என்று சொல்லியுள்ளார் ஸ்டாலின்.

ஸ்டாலின் முயற்சி
அதன்படியே போலீஸ் நடந்து கொண்டது என்கிறார்கள். அதன்படியே அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை கோரிய ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை நிராகரித்து போலீஸ் உத்தரவிட்டுள்ளது. தனிநபரின் உள் அரங்கத்தில் கூட்டம் நடப்பதால் அனுமதி மறுக்க முடியாது என போலீஸ் பதில் அளித்துள்ளது. இதனால் அரசு தரப்பில் இருந்து தனக்கு சப்போர்ட் வரும்.. முதல்வர் தரப்பு ஏதாவது செய்யும் என்று எதிர்பார்த்த ஓபிஎஸ்ஸுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது என்கிறார்கள்.