சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிட்நைட்டில்.. "அவரை" ரகசியமாக சந்தித்தாரா ஓபிஎஸ்.. பற்றவைத்த "புள்ளி".. நெருப்பாய் தகிக்கும் அதிமுக

மிட்நைட்டில் நீதிபதியை ஓபிஎஸ் சந்தித்ததாக எடப்பாடி ஆதரவாளர் குற்றம்சாட்டுகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக உட்கட்சி பிரச்சனை, சட்டரீதியாக செல்ல ஆரம்பித்துள்ள நிலையில், புதுபுது புகார்கள் இரு தரப்பில் இருந்தும் வெடித்து கிளம்பி உள்ளன.

Recommended Video

    OPS மீது Jayakumar பகிரங்க குற்றச்சாட்டு! ADMK கூட்டத்தில் நடந்தது என்ன? | *Politics

    அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை தீவிரமடைந்துள்ளது... ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமியை நியமிப்பதற்கான ஏற்பாடுகளில் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆக.6-ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்; ஜூலை 5-ல் வேட்புமனுத் தாக்கல்- தேர்தல் ஆணையம் ஆக.6-ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்; ஜூலை 5-ல் வேட்புமனுத் தாக்கல்- தேர்தல் ஆணையம்

    ஆனால், இதற்கு ஓபிஎஸ் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.. மேலும், இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

     எகிறி அடிக்கும் எடப்பாடி

    எகிறி அடிக்கும் எடப்பாடி

    இதனால் அதிமுக ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது.. இரு தரப்புமே கோர்ட்டை நாடி உள்ளனர்.. ஓபிஎஸ் இந்திய தேர்தல் ஆணையத்துக்கே புகாரை கொண்டு போய்விட்டார்.. இதனால், இந்த விவகாரம் எங்கு போய் முடியுமோ என்று தெரியவில்லை.. மற்றொரு பக்கம், இரு தரப்பு ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை அதிமுக ஒன்றிய கழக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

     திருவாடானை

    திருவாடானை

    எடப்பாடி தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற தீர்மானமும் இங்கு நிறைவேற்றப்பட்டன. இதற்கு பிறகு, அகில உலக எம்ஜிஆர் மன்றத்தின் இணைச்செயலாளர் கே.சி. ஆணிமுத்து செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, ஓபிஎஸ் மீது சரமாரியான புகார்களை அள்ளி வீசினார்.. "எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என்று பொதுக் குழுவில் உள்ள 98 சதவீதம் பேர் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்... திருவாடானை தொகுதியிலும் எடப்பாடிக்குத் தான் ஆதரவு அதிகம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

     எடப்பாடி ஷாக்

    எடப்பாடி ஷாக்

    ஓபிஎஸ்ஐ நாங்கள் வெறுக்கிறோம்.. இதற்கெல்லாம் காரணங்கள் இல்லாமல் இல்லை.. அவர் பின்னால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே இருக்கிறார்கள்... ஆனால் எடப்பாடி பழனிசாமியிடம் அப்படி இல்லை.. சாதி ரீதியாக இல்லாமல் கட்சியை சீராக கொண்டு போவார்... அதனால்தான் நாங்கள் ஓபிஎஸ்சை வெறுக்கிறோம்.. அதுமட்டுமல்ல.. ஜெயலலிதா இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால், துரைமுருகனுக்கு ஓபிஎஸ் சால்வை போடுவாரா? அப்படி போட்டு விட்டால் ஜெயலலிதா தான் சும்மா விட்டு வைப்பாரா?

     நள்ளிரவு 3 மணி

    நள்ளிரவு 3 மணி

    ஓபிஎஸ்ஐ நம்பி அவருடன் யாரும் பயணிக்க முடியாது என்று சசிகலாவே சொல்கிறார்... ஆனால் சசிகலாவுடன் இணைந்து பயணிக்கவே ஓபிஎஸ் விரும்புகிறார்.. இவர் விரும்பினாலும், சசிகலா அதற்கு தயாராக இல்லையே.. அது ஏன்? பொதுக்குழுவில் ஒற்றை தீர்மானம் வந்து விடக்கூடாது என்பதற்காக, நள்ளிரவு 3 மணிக்கு நீதிபதியை சந்தித்து பேசியிருக்கிறார் ஓபிஎஸ்.. இப்போது டெல்லி பயணம் நீதிமன்றம் என்று அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வருகிறார்... இவர் கட்சி தலைமைக்கு பண்பு இல்லாதவர்... எடப்பாடி தான் சரியான நபர்" என்றார்.

     ஷாக்

    ஷாக்

    முன்னதாக, ஒட்டுமொத்த ஆதரவும் தனக்கு துணையாக இருக்கும் என்ற எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில் இருந்தபோது, ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை கோர்ட் ஏற்று கொண்டுவிட்டது, எடப்பாடி பழனிசாமிக்கு சற்று ஷாக்தானாம்.. கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லையாம்.. ஏற்கனவே ஹைகோர்ட்டில், இதே விவகாரத்தினால், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது... இப்போது என்ன செய்வதென்று தெரியாமல், எடப்பாடி பழனிசாமி தரப்பு சுப்ரீம்கோர்ட்டை நாடி செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    Did OPS meet the judge secretly and what did edapadi palanisamys supporter aanimuthu say மிட்நைட்டில் நீதிபதியை ஓபிஎஸ் சந்தித்ததாக எடப்பாடி ஆதரவாளர் குற்றம்சாட்டுகிறார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X