"பச்சை தமிழன்".. சல்லி சல்லியா நொறுங்கிய பாஜக கணக்கு.. "மெசேஜ்" தந்த கதர்கள்.. அதுவும் டெல்லியிலேயே
சென்னை: டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அது பாஜகவுக்கு எதிரான வேறு ஒரு தாக்கத்தை உருவாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது..!
நூற்றாண்டு பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சிக்கு 2 வருடமாக தலைவர் யாருமே இல்லை.. ஒரு தேசிய கட்சி தலைவரே இல்லாமல் இயங்கி கொண்டிருப்பது பெருத்த பலவீனமானதும்கூட..
சோனியா காந்திக்கு உடம்பு சரியில்லாத நிலையில், ராகுலும் பொறுப்பேற்காத நிலையில், காங்கிரஸ் தள்ளாடி கொண்டிருக்கிறது. காங்கிரஸை நம்பினால் கடைசிவரை எதுவுமே கிடைக்காது என்று உறுதியாக நம்பியதால், கபில் சிபல் நிலைப்பாட்டுக்கு காரணமாக அமைந்துவிட்டது..
காங்கிரஸ் என்ன நினைக்கிறது? நைசாக கேட்ட பிரதமர் மோடி - குடியரசுத் தலைவர் தேர்தல் விசயமாகதான்

தலைவர்கள்
இந்த 5 மாதங்களில் மட்டும், சுனில் ஜாக்கர், ஹர்திக் படேல், அஸ்வினி குமார், ஆர்.பி.என்.சிங் மற்றும் கபில் சிபல் என, முக்கிய தலைவர்கள் 5 பேரும் விலகி உள்ளது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது... மேலும், 2024-ம் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக ஏற்கனவே தயாராகி வரும் நிலையில், காங்கிரஸ் இப்போது பெரும் நெருக்கடியில் சிக்கி உள்ளது... காங்கிரஸ் தலைமை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளதுதான் இதற்கெல்லாம் காரணமாக அமைந்து வருவதாக கூறப்படுகிறது..

மாஸ்டர் பிளான்கள்
இதன் விளைவு, பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் கட்சிக்கு தலைவர்கள் இல்லாத பரிதாப நிலைமையும் ஏற்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியில் கடைசித் தொண்டன் இருக்கும் வரை, கோஷ்ப்பூசல் இப்படியே இருந்துகொண்டுதான் இருக்கும் என்ற வரலாற்று விமர்சனமும் பலமாகி உள்ளது.. ஏற்கனவே, உட்கட்சி கோஷ்டிப்பூசல்களால்தான், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் எனப் பல மாநிலங்களில் அடுத்தடுத்து ஆட்சியை இழந்தது.. இப்போது பஞ்சாப்பிலும் ஊசலாட்டம்தான்.. காங்கிரஸில் நடந்து கொண்டிருப்பது அத்தனையும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்தும் வருகிறது..

டெல்லி
இப்படிப்பட்ட சூழலில்தான், நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 3வது நாளாக நேற்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆஜரான நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர்.. முதல்நாள் ப.சிதம்பரத்துக்கு எலும்பு முறிவு, ஜோதிமணிக்கு ஆடைகளை கிழித்தது என ஒவ்வொரு வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

பாஜக
ப.சிதம்பரம் முதல் ஜோதிமணி வரை, டெல்லி போலீசாரால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாக இருந்தாலும்கூட, ராகுல் மீது இயல்பாகவே தமிழர்களுக்கு பாச உணர்வும், அக்கறை உணர்வும் கலந்தே இருக்கிறது.. ஒவ்வொரு முறை ராகுல் தமிழகம் வரும்போதெல்லாம் அண்ணா என்று அவர் மீது அன்பைபொழியும் பொதுமக்கள் ஏராளம்.. அதேபோல ராகுலுக்கும் தமிழ்நாடு மீது பற்று இருக்கத்தான் செய்கிறது.. அதனால்தான், அன்று மக்களவையில் பேசும்போது, "உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை ஆளவே முடியாது... அது உங்களால் முடியவே முடியாது" என்று பாஜகவிடம் அடித்து சொன்னார்.

விழிப்புணர்வு
அதேசமயம், காங்கிரஸார் இதேபோல எல்லாப் பிரச்சினைகளுக்கும் மிகத் தீவிரமாக தெருவில் இறங்கிப் போராடினால் பாஜகவுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்க முடியும் என்றும் பலரும் பேச ஆரம்பித்துள்ளனர்... இதேபோன்ற வேகத்தை எல்லா நேரத்திலும் காங்கிரஸ் காட்ட வேண்டும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், அப்படிச் செய்தால் இந்தி பேசும் மாநிலங்களிலும் காங்கிரஸ் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று பலமாக நம்பப்படுகிறது.. குறிப்பாக, தமிழகத்தில் இதன் தாக்கம் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டதாம்.

எதிர்பாராத ட்விஸ்ட்
ராகுல் காந்திக்காக போராட்டத்தை காங்கிரஸார் கையில் எடுத்தாலும், அது இந்த அளவுக்கு வலுப்பெற்று விடும் என்று காங்கிரஸே எதிர்பார்க்கவில்லையாம்.. அகில இந்திய அளவிலும் இந்த போராட்டம் கவனம் பெற்றுள்ளது.. ராகுல் காந்திக்காக மிகவும் ஆவேசமாக தெருக்களில் இறங்கி போராடும், எம்பிக்களையும், தலைவர்களையும், போலீஸார் தரதரவென இழுத்தும், அடித்தும் கைது செய்வது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது... இதுதான் காங்கிரஸ் தரப்பிலும் திடீர் அனுதாபத்தை பெற்று, பாஜக அரசு மீதான வெறுப்பை உருவாக்கிவிட்டதாக சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..

பச்சை தமிழன்
இதுபோக ராகுலுக்கு தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்ற ஒரு எண்ணம் உள்ளது.. குறிப்பாக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை சென்ட்டிமென்ட்டாக குறி வைத்து, அதற்கான காய்களையும் முதல்வர் ஸ்டாலினிடம் நகர்த்தி வருகிறார்.. இதெல்லாம் அரசியல் கணக்கு என்றாலும், தற்போது டெல்லியில் காங்கிரஸார் இப்போது நடத்துவது, விசாரணைக்கான எதிர்ப்பு போராட்டங்கள் என்றாலும், அத்தனையும் ராகுலுக்கானது என்பதால், போராட்டம் வலிமை பெற்றுள்ளது.. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸின் மதிப்பு எகிற ஆரம்பித்துள்ளது.. பாஜக அரசு இனி, காங்கிரஸ் மேல் கை வைக்குமானாலும், அது அத்தனையும் காங்கிரஸுக்கே பிளஸ் ஆகும் சூழல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. இதே வீர்யத்துடன் காங்கிரஸ் இனி நிமிரட்டும்..!