சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

படிச்சுதான் ஐபிஎஸ் ஆனீங்களா?.. "அரைவேக்காடு".. அண்ணாமலை செய்த தவறு.. சரமாரியாக விளாசும் திமுக!

Google Oneindia Tamil News

சென்னை: ஆன்லைன் ரம்மி குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் தமிழ்நாடு அரசு மூலம், தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை முறைப்படுத்த இயலாது என்பதால் தடை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற ரம்மி கேம்களை தடை செய்வதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு அதன்பின் சட்டசபையில் அக்டோபர் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

ஆன்லைன் சூதாட்ட தடுப்புச் சட்டம்- ஒப்புதல் தராத ஆளுநரைக் கண்டித்து டிச.1-ல் போராட்டம் - கி.வீரமணி ஆன்லைன் சூதாட்ட தடுப்புச் சட்டம்- ஒப்புதல் தராத ஆளுநரைக் கண்டித்து டிச.1-ல் போராட்டம் - கி.வீரமணி

காலாவதியான சட்டம்

காலாவதியான சட்டம்

தமிழ்நாட்டில் ஆன்லைன் தடை அவசர சட்டத்தை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாத நிலையில் அந்த சட்டம் காலாவதி ஆகி உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது இந்த சட்டம் காலாவதி ஆகி உள்ளது. ஆளுநர் ஆர். என் ரவி இந்த மசோதாவை டெல்லிக்கு அனுப்பவில்லை. ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதி இருந்தார். ஆனாலும் அதன்பின்பும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் இந்த சட்டம் காலாவதி ஆகி உள்ளது.

அண்ணாமலை

அண்ணாமலை

இந்த நிலையில் இன்று ஆளுநர் ஆர். என் ரவியை அண்ணாமலை நேரில் சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் தனது சந்திப்பு பற்றி பேசினார். தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லையே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, ஆளுநரிடம் ரம்மி ஆன்லைன் தடை சட்டம் பற்றி பேசினோம். எங்கள் கருத்தை தெரிவித்தோம். ஆன்லைன் ரம்மி என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை இதுவரை நடைமுறைபடுத்தவில்லை என்பதுதான் உண்மை. ஆளுநர் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. சட்டம் காலாவதியாகிவிட்டது என்று திமுக கூறுகிறது.

அண்ணாமலை பதில்

அண்ணாமலை பதில்

ஆனால் ஆளுனர் ஏற்கனவே ordinanceக்கு அனுமதி கொடுத்து இருந்தார். அப்படி இருக்கும் போது ordinanceயை தமிழ்நாடு நடைமுறைப்படுத்தவில்லை. அரசு உத்தரவிற்கு ஆளுநர் அனுமதி அளித்த பின் திமுக அரசு அரசாணையை வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் அதை திமுக செய்யவில்லை. தமிழ்நாடு அரசை பொறுத்தவரை அவர்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் ஆன்லைன் ரம்மி வழக்கில்தான் இருந்தது.

அவசர சட்டம்

அவசர சட்டம்

இரண்டாவதாக அவசர சட்டம் வரும் போது ஆளுநர் அதில் சில கேள்விகளை கேட்கிறார். மாநில அரசு கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளது. இதில் மிக முக்கியமாக இருப்பது கோர்ட் ஆர்டர். சைபர் பிரிவு என்பது மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. ஆனால் மாநில அரசு அதில் சட்டம் இயற்றி உள்ளது. இதற்கு எல்லாம் கவர்னர் அலுவலகத்தில் இருந்து விளக்கம் கேட்டுள்ளனர். மாநில அரசு இதற்கு விளக்கம் கொடுத்து உள்ளது.

ராஜிவ் காந்தி

ராஜிவ் காந்தி

சட்டம் என்பது சரியாக இருக்கிறதா? அரசு சரியாக சட்டத்தை நிறைவேற்றி உள்ளதா என்று பார்க்க வேண்டும். தப்பாக இயற்றப்பட்ட சட்டம் இயற்றப்படாத சட்டத்திற்கு சமம். அப்படி இருக்கும் போது மாநில அரசு மத்திய அரசின் அதிகாரத்தில் தலையிட்டதாக ஆளுநர் கேள்வி கேட்டு இருக்கலாம். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். அதை விடுத்துவிட்டு ஆளுநர் மீது பழி போட பார்க்கிறார்கள். இந்த விவகாரத்தில் ஆளுநர் மீது குற்றச்சட்டத்துவதை ஏற்க முடியாது என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.

அரைவேக்காடு அண்ணாமலை

அரைவேக்காடு அண்ணாமலை

இந்த அவசர சட்டத்திற்காக திமுக அரசு அரசாணையை வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை என்று அண்ணாமலை கூறியது சர்ச்சையாகி உள்ளது. திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி இதை கடுமையாக கிண்டல் செய்துள்ளார். அண்ணாமலைக்கு சட்ட விதிகள் தெரியவில்லை என்று விமர்சனம் செய்துள்ளார். அதில், அரவேக்காடு அண்ணாமலை உண்மையிலேயே ஐபிஎஸ் மெரிட்ல பாஸ் ஆனிங்களானு சந்தேகமாகத்தான் இருக்கு! அவசர சட்டம் என்பதே அரசாங்கத்தின் GO தான். ஆன்லைன் அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு அரசு GO போடலைனு கேக்குற அரசியல் கோமாளி நீதான்யா, என்று கிண்டல் செய்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி காரணமாக நிறைய பேர் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். முதலில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை வெல்லும் மக்கள், பின்னர் அதில் நிறைய தொகையை வெல்லலாம் என்று நம்பி தங்கள் சேமிப்பு தொகை, வருமானத்தை எல்லாம் இழக்கிறார்கள். இப்படி பணத்தை இழந்த பலர் தமிழ்நாட்டில் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர், பேராசிரியர் என்று படித்தவர்கள், படிக்காதவர்கள் பலர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இதற்கு தடை கொண்டு வர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனாலும் இதற்கு எதிரான வலுவான தடை சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. முக்கியமாக கொண்டு வரப்பட்ட தடை சட்டங்களுக்கு எதிராக ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் ஒன்று கோர்ட்டுக்கு செல்கிறது. அல்லது அந்த தடை சட்டங்களையே ஆளுநர்கள் டெல்லிக்கு அனுப்பாமல் நிராகரிக்கிறார்கள்.. அதிகார மோதல் காரணமாக மக்களின் உயிர் ஊசல் ஆடுவது பெரும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

English summary
Did you student really for IPS? DMK trolls Annamalai for the latter wrong statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X