சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தினகரன் செம பாஸ்ட்.. அதிமுகவை ஓரம் கட்டினார்.. வேட்பாளர் அறிவிப்பில்!

வேட்பாளரை இன்று அறிவித்துவிட்டார் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ்- வீடியோ

    சென்னை: செம ஃபாஸ்டாக இருக்கிறார் டிடிவி தினகரன்!! இதுதான் அவருக்கும், தமிழக முதல்வருக்கும் உள்ள வித்தியாசம்!!

    இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே எல்லா கட்சிகளும்தான் வேட்பாளர் தேர்வு, விருப்ப வேட்பு மனு தாக்கல் என்று இறங்கின.

    அதிலும் இதில் கொஞ்சம் "ஓவர் டோஸ்" கொடுத்து பேசியதே அதிமுகதான். தேர்தல் எல்லாம் எங்களுக்கு சர்க்கரை பொங்கல், எந்த தேர்தல் வந்தாலும் ஜெயித்து காட்டுவோம் என்றது.

    சசிகலா சந்திப்பு

    சசிகலா சந்திப்பு

    ஆனால் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனோ, நேற்று பெங்களூருக்கு சென்று சிறையில் சசிகலாவை சந்தித்தார். எதற்காக பெங்களூர் பயணம், இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்று நமக்கு இதுவரை தெரியாவிட்டாலும், கண்டிப்பாக தேர்தலை ஒட்டிதான் பேச்சு நடந்திருக்கும் என யூகிக்க முடிகிறது.

    வேட்பாளர் அறிவிப்பு

    வேட்பாளர் அறிவிப்பு

    அதற்கேற்றார்போல், இன்று அமமுக வேட்பாளரை தடாலடியாக அறிவித்துவிட்டார் தினகரன். இன்று வேட்பாளர் அறிவிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதில் அதிமுகவும் ஒன்று.

    திணறும் அதிமுக

    திணறும் அதிமுக

    ஆனால் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் தேர்வில் இன்னமும் குழப்பம் நிலவுவதாக கூறப்படுகிறது. ஏனெனில் கருணாநிதியின் தொகுதி என்பது ஒருபக்கமும், தினகரனின் சொந்த மாவட்டம் என்பது மற்றொரு பக்கமும் பலமாக இருப்பதால் அதிமுக கொஞ்சம் திணறி உள்ளது.

    கவுரவ பிரச்சனை

    கவுரவ பிரச்சனை

    இவர்கள் இருவருக்கும் "டஃப்" கொடுக்கும் வேட்பாளரை தேர்வு செய்ய இன்னமும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதனால்தான் இன்றைக்கு நடக்கவிருந்த கூட்டத்தை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளார்கள். திமுக வெற்றி பெறுகிறதோ இல்லையோ, அமமுக வந்துவிடக்கூடாது என்ற கவுரவ பிரச்சனையும் அதிமுகவுக்கு உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக புயல் காரணமாக தொகுதி மக்களிடையே அதிருப்தியும் உள்ளது.

    ஃபார்முலா

    ஃபார்முலா

    பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வழக்கமாக வெற்றி பெறும் என்பதுதான் கடந்தகால ஃபார்முலா. ஆனால் இதை ஆர்கே.நகரிலேயே உடைத்தெறிந்துவிட்டார் தினகரன். அதனால் இன்னொரு தோல்வியை சந்திக்க கூடாது என்பதிலும், குறிப்பாக தினகரனை வெற்றி பெற வைத்து விடக்கூடாது என்பதிலும் அதிமுக மெனக்கெட்டு வருவதுடன், இன்னமும் குழப்ப நிலையிலேயே உள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    The AIADMK is said to be hesitant to announce the Thiruvarur By Election candidate.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X