சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செல்லூர் ராஜுவை நம்பிச் சென்றால் ஏமாற்றம் தான்... ரூ.50,000 கடன் திட்டம் பற்றி தினகரன் விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.50,000 கடன் தரப்படும் என்ற அறிவிப்பு உண்மையா என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அறிவிப்பிற்கான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அமைச்சர் கூறிய கடன் திட்டம் பற்றி வங்கி அதிகாரிகளுக்கே தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

dinakaran says, those who trusted Sellur Raju announcement are disappointed

மேலும் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;

குடும்ப அட்டை வைத்திருக்கும் சிறு வணிகர்களுக்கு ரூ.50,000/- கடன் வழங்கப்படும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பை நம்பி கூட்டுறவு வங்கிகளுக்குச் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாக செய்திகள் வருகின்றன. அப்படியொரு கடன் திட்டம் பற்றி தங்களின் கவனத்திற்கே வரவில்லை என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுவதாக தகவல்கள் வருகின்றன.

கொரோனா துயரால் ஏற்கனவே அல்லல்படும் மக்களை இப்படி அலைக்கழிப்பது வேதனைக்குரியது. 2/3அமைச்சரின் அறிவிப்பு உண்மையா? அதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதா? அப்படி ஒதுக்கப்பட்டிருந்தால் அந்த கடனைப் பெறுவதற்கான வழிமுறைககள் என்ன ? - என்பனவற்றை எல்லாம் தெளிவாகவும், வெளிப்படையாகவும் தமிழக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்.

பிடிவாதத்தை கைவிட்டு... மின் கட்டணத்தில் 6 மாதங்களுக்கு சலுகைகள் தர வேண்டும் -மு.க.ஸ்டாலின் பிடிவாதத்தை கைவிட்டு... மின் கட்டணத்தில் 6 மாதங்களுக்கு சலுகைகள் தர வேண்டும் -மு.க.ஸ்டாலின்

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜுவிற்கு கேள்வி எழுப்பியுள்ள டிடிவி தினகரன், இந்த கடன் திட்டம் பற்றி வெளிப்படையான விளக்கம் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

English summary
dinakaran says, those who trusted Sellur Raju announcement are disappointed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X