சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேட்கவே கஷ்டமா இருக்கு.. மறக்க முடியாத மன்சூர் அலிகான்.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பினார்!

திண்டுக்கல்லில் வேட்பாளர் மன்சூரலிகான் தோல்வியை தழுவி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மன்சூர் அலிகான் பவர் ஸ்டார் வாங்கிய ஓட்டுக்கள் எத்தனை தெரியுமா?

    சென்னை: திண்டுக்கல்லில் வளைச்சு, வளைச்சு ஓட்டு கேட்டவர் மன்சூரலிகான்! இன்று காலை ஆசை ஆசையாக வந்து வாக்கு நிலவரம் கேட்டதும், ரொம்பவும் அப்செட் ஆகி திரும்பி சென்றுவிட்டார்!

    நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் நடிகர் மன்சூன் அலிகான் போட்டியிட்டார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னாடியே அந்த தொகுதிக்குள் நுழைந்து ஒத்த ஆளாக கலக்க ஆரம்பித்தவர் மன்சூரலிகான்!

    வித்தியாசமான நபர்.. வித்தியாசமான பிரச்சாரம்.. டீக்கடையில் டீ குடித்து கொண்டே ஓட்டு கேட்டார், தெருவில் குப்பை வாரிக் கொண்டே ஓட்டு கேட்டார்.. திடீரென கடைக்குள் நுழைந்து பஜ்ஜி, வடை சுட்டு கொடுத்து ஓட்டு கேட்டார்!

    தென் சென்னையில் போட்டியிட்ட பவர் ஸ்டார் வாங்கியஓட்டுக்கள் எத்தனை தெரரியுமா? தென் சென்னையில் போட்டியிட்ட பவர் ஸ்டார் வாங்கியஓட்டுக்கள் எத்தனை தெரரியுமா?

    ஜவுளிக்கடை

    ஜவுளிக்கடை

    ஜவுளிக்கடை, மளிகைகடை, பால்கடை, என ஒரு கடையும் விடாமல் ஓட்டு கேட்டார்.. கறிக்கடைக்குள் நுழைந்து மட்டனை துண்டு துண்டாக கட் பண்ணி கொண்டே ஓட்டு கேட்டார். கடைசியில் ஊசிமணி, பாசி மணி நடுரோட்டில் கடை போட்டு என கூவி விற்கும் அளவுக்கு பிரச்சாரம் களை கட்டியது. இதனால் கொஞ்ச நாளிலேயே தொகுதி மக்களின் மனதில் இவர் அசால்ட்டாக நுழைந்துவிட்டார்!

    பாமக வேட்பாளர்கள்

    பாமக வேட்பாளர்கள்

    பிரச்சார நேரத்தில், அதிமுக, திமுக, பாமக வேட்பாளர்களை விட இவரது நூதன பிரசாரமே தினசரி செய்தியாக வெளிவந்தது. இணையத்திலும் படுவைரலானது. இவரை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்த போது சட்டை அணியாமல் மேடையில் வந்து கலந்து கொண்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தபால் ஓட்டுகள்

    தபால் ஓட்டுகள்

    இந்நிலையில், இன்று திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பல்கலைக்கழக கல்லூரிக்கு அருகே மன்சூர்அலிகான் வந்தார். கூடவே கட்சி நிர்வாகிகளும் வந்திருந்தனர். தபால் வாக்குப்பதிவு மற்றும் முதல் சுற்று வாக்குப்பதிவு ஆகியவற்றை பற்றி நிலவரம் கேட்டார். தனக்கு குறைவான வாக்குகளே வந்ததை அறிந்து ஷாக் ஆனார்.

     4-வது இடம்

    4-வது இடம்

    திமுக, அதிமுக தவிர்த்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை பின்னுக்கு தள்ளியுள்ளார் மன்சூரலிகான். மதியம் 3 மணி நிலவரப்படி 28638 வாக்குகளைப் பெற்று 4-ம் இடத்தில் உள்ளார். அத்தொகுதியில் தொடர்ந்து முதலிடத்தில் திமுக உள்ளது.

    அப்செட்

    அப்செட்

    இதனால் வாக்கு நிலவரங்களை உடனுக்குடன் தெரிவிக்குமாறு தனது கட்சி நிர்வாகிகளிடம் கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். காலையிலேயே மன்சூர் அப்செட்! மக்களை வெகுவாக ஈர்த்தவர் மன்சூர் அலிகான் என்பதை மறுக்க முடியாது என்றாலும், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாரால் அறிய முடியும்!

    English summary
    NaamTamilar Party Candidate Mansoor Ali khan is vy upset due to election Result in Dindigul Constitution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X