சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறையிலிருந்து வெளியே வந்தால் சசிகலாவுக்கு அதிமுகவில் இடம்? திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பதில்

Google Oneindia Tamil News

சென்னை: சிறையிலிருந்து வெளியே வந்தால் சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பான பதிலை அளித்துள்ளார்.

ஜெயலலிதா இருக்கும் வரையிலும் இறந்த பிறகும் சசிகலாவின் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் பதவியை சசிகலாவிடம் அதிமுக நிர்வாகிகள் கொடுத்தனர்.

இதையடுத்து அவர் முதல்வராக பதவியேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக இருந்தது. எனினும் அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேரிட்டது.

இந்த கண்டிஷனுக்கு ஓகேன்னா அமைச்சர் பதவிக்கு வாங்க.. இல்லாட்டி போய்கிட்டே இருங்க.. ஜெகன்மோகன் அதிரடி இந்த கண்டிஷனுக்கு ஓகேன்னா அமைச்சர் பதவிக்கு வாங்க.. இல்லாட்டி போய்கிட்டே இருங்க.. ஜெகன்மோகன் அதிரடி

ஒரே அணி

ஒரே அணி

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். இந்த நிலையில் இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்த அதிமுக, ஒரே அணியாக மாற முடிவு செய்தது. இதை தினகரன் விரும்பவில்லை.

எடப்பாடி தரப்பு

எடப்பாடி தரப்பு

அதே வேளையில் எடப்பாடி அணியுடன் இணைய வேண்டுமானால் தினகரன், சசிகலாவை ஓரங்கட்ட வேண்டும் என்பதுதான் ஓபிஎஸ் அணியின் கோரிக்கை. அந்த கோரிக்கையை ஏற்றால்தான் அதிமுக எதிர்காலத்துக்கு நல்லது, தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை திரும்ப கிடைக்கும் உள்ளிட்ட காரணங்களால் எடப்பாடி தரப்பும் ஓபிஎஸ்ஸின் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டது.

சசிகலா

சசிகலா

அன்று முதல் சின்னம்மா என கூறிய வாய்கள் சசிகலா என அழைக்க ஆரம்பித்தன. இவர்களில் சசிகலா ஆதரவாளர் என சொல்லப்படும் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சுதான் ரொம்ப ஓவராக இருந்தது. இந்த நிலையில் அதிமுகவை கைப்பற்றுவதற்காக சசிகலா சிறையிலிருந்து திட்டமிட்டு வருகிறார் என தகவல்கள் வந்தன.

செய்தியாளர்கள்

செய்தியாளர்கள்

அதுமட்டுமல்லாமல் நன்னடத்தை விதிகளின்படி அவர் தண்டனை காலம் முடியும் முன்னரே விடுதலை செய்யப்படுகிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் சசிகலா சிறையிலிருந்து வந்ததும் நேராக அதிமுகவுக்கு வருவாரா என செய்தியாளர்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேள்வி எழுப்பினர்.

அதிமுக

அதிமுக

அதற்கு திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில் சிறையில் இருந்து வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும். சசிகலாவுக்கும் தினகரனுக்கும் எப்போதும் அதிமுகவில் இடம் கிடையாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

English summary
Minister Dindigul Srinivasan replies that there will be no place for Sasikala and TTV Dinakaran in ADMK. If she releases from Prison then she will go to her home.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X