சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? திமுக- காங். அணியில் தினேஷ் குண்டுராவ் பற்ற வைத்த தீ!

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என தாம் கூறியதை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் பாடுபடும் என்றும் அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் விளக்கம் தந்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கான மேலிடப் பொறுப்பாளராக அண்மையில் தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து அவரை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நேரில் சென்று ஆலோசனை நடத்தினர்.

சுபஸ்ரீ பெற்றோருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு.. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி.!சுபஸ்ரீ பெற்றோருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு.. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி.!

தினேஷ் குண்டுராவ் கருத்து

தினேஷ் குண்டுராவ் கருத்து

இந்நிலையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று தமிழக காங்கிரஸ் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டங்களில் பங்கேற்க சென்னை வந்த தினேஷ் குண்டு ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் திமுக கூட்டணி அரசு அமையும் என கூறியிருந்தார். இதனால் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்கும் கோஷத்தை முன்வைக்கிறதா? என விவாதங்கள் கிளம்பின.

தினேஷ் விளக்கம்

தினேஷ் விளக்கம்

திமுக தலைமையும் தினேஷ் குண்டுராவின் இந்த பேச்சால் கடும் அதிருப்தி அடைந்தது. இதனையடுத்து திடீரென தினேஷ் குண்டுராவ் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், கூட்டணி ஆட்சி என தாம் குறிப்பிட்டதை சிலர் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டதால் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

ஸ்டாலின்தான் முதல்வர்

ஸ்டாலின்தான் முதல்வர்

2021 ச்ட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க காங்கிரஸ் கட்சி பாடுபடும். கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போதே, மு.க.ஸ்டாலின் அடுத்த முதல்வராக வரவேண்டு என ராகுல் காந்தி விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். லோக்சபா தேர்தலுக்கு முன்னரே ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததை நன்றியுடன் நினைவில் வைத்திருக்கிறோம்.

ராகுலின் கனவே ஸ்டாலின் முதல்வராவதுதான்..

ராகுலின் கனவே ஸ்டாலின் முதல்வராவதுதான்..

ஸ்டாலினின் இந்த அறிவிப்பால்தான் 39 லோக்சபா தொகுதிகளில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றியை மக்கள் தேடித்தந்தனர். மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கனவை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி பாடுபடும். இதுவே 2021 சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. இந்த கருத்துகளை மட்டுமே அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று விளக்கம் அளித்திருக்கிறார். இருப்பினும் தினேஷ் குண்டுராவ் கருத்துகள் திமுக- காங்கிரஸ் அணியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Dinesh Gundu Rao, AICC incharge of Tamil Nadu has explain on DMK - Congress Alliance Govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X