சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்கிரசுக்கு 25 தொகுதிகள்?...திமுக-காங். இடையே சுமுக உடன்பாடு...இன்று காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விட்டது எனவும் இன்று காலை 10 மணிக்கு தொகுதி உடன்பாடு கையெழுத்தாகிறது என்றும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

Recommended Video

    அப்பாடா… 25 தொகுதிகள் தந்தாச்சு... காங்கிரசுக்கு ‘ஓகே’ சொன்ன திமுக!

    திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மாநிலங்களவை சீட் ஒன்றும் காங்கிரசுக்கு கொடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நீண்ட இழுபறிக்கு ஒரு விடை கிடைத்துள்ளது.

    பேச்சுவார்த்தை இழுபறி

    பேச்சுவார்த்தை இழுபறி

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளில் மிகவும் பிசியாக உள்ளது. ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் முதல்வர், துணை முதல்வர் உள்பட 6 வேட்பாளர்கள் போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அதிமுக வெளியிட்டது.அதிமுக-தேமுதிக பேச்சுவார்த்தைதான் நீண்ட இழுபறியில் உள்ளது. தற்போது இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    காங்கிரஸ் அதிருப்தி

    காங்கிரஸ் அதிருப்தி

    திமுகவை பொறுத்தவரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்திய கம்யுனிஸ்டுக்கு 6 தொகுதிகள், முஸ்லீம் லீக் 2 தொகுதிகள் ஒதுக்கி விட்டது. ஐயூஎம்எல் கட்சிக்கு 3 தொகுதிகளும், மாமாவுக்கு 2 தொகுதிகளும் திமுக ஒதுக்கியது. மதிமுகவுக்கும் ஒருவழியாக 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்து வந்தது. கடந்த தேர்தல்களை விட மிகவும் குறைவான தொகுதி ஒதுக்க திமுக முன் வந்தததால் காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருந்து வந்தது.

    கே.எஸ்.அழகிரி

    கே.எஸ்.அழகிரி

    இது தொடர்பாக இரு கட்சிகள் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி பங்கீடு சமூகத்திற்கு வரவில்லை. திமுக தரும் தொகுதியும், நாம் கேட்கும் தொகுதியும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் கொண்டது எனவும் திமுக நம்மை சரியாக நடத்தவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீருடன் கூறினார். திமுக எதிர்கட்சிகளை சமமாக பாவிக்கிறது என்று திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு

    திமுக மீது அதிருப்தி அடைந்த காங்கிரஸ் மக்கள் நீதி மய்யத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 11.15 மணியளவில் காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்துக்கு திடீரென வருகை புரிந்தனர்.திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி ஆகியோர் இருந்தனர்.

    காங்கிரஸ்-திமுக இடையே உடன்பாடு

    காங்கிரஸ்-திமுக இடையே உடன்பாடு

    இருதரப்பிலும் தொகுதி பங்கீடு தீவிர பேச்சுவார்த்தை நடந்தது. இதனை தொடர்ந்து காங்கிரஸ்-திமுக இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டது. காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் எத்தனை என்பது? குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. சிறிது நேரத்தில் பேச்சுவார்த்தை முடிந்து தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் வெளியே வந்தனர்.

    25 தொகுதிகள் ஒதுக்கீடு?

    25 தொகுதிகள் ஒதுக்கீடு?

    அப்போது தினேஷ் குண்டுராவ் நிருபர்களிடம் கூறியதாவது:- திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விட்டது. நாளை(இன்று) காலை 10 மணிக்கு தொகுதி உடன்பாடு கையெழுத்தாகிறது. எத்தனை தொகுதிகள் என்பது குறித்த விவரங்கள் தொகுதி உடன்பட்டு கையெழுத்தின்போது தெரிவிக்கப்படும் என்றார். 25 தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநிலங்களவை சீட் ஒன்றும் காங்கிரசுக்கு கொடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் கடந்த சில நாட்களாக நிலவி வந்த யூகங்களுக்கு விடை கிடைத்துள்ளது.

    English summary
    Congress supremo Dinesh Kundurao said the DMK-Congress constituency allotment has been finalized and the constituency agreement will be signed at 10 am today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X