சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தோற்றவர்களை கொண்டு வந்து அமைச்சர் ஆக்கிடாதீங்க.. கி.வீரமணி சொல்றது எச்.ராஜாவையா?

பாஜகவை விமர்சித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: யாரையாவது அமைச்சராக்கிக்கங்க, ஆனா தேர்தலில் தோற்றவர்களை மட்டும் அமைச்சராக்கி விடாதீர்கள் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வேண்டி கேட்டு கொண்டுள்ளார்.

தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு பாஜகவின் ரேஞ்ச் வேற லெவலுக்கு உயர்ந்து வருகிறது. அபார வெற்றி பெற்று நேற்று மத்திய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது.

இதனிடையே, தமிழகத்தில் பாஜக சீட் தந்த 5 இடங்களிலுமே தோற்றுவிட்டது. என்றாலும், தமிழகத்தில் பாஜகவின் பிடி, விட்டுவிடக்கூடாது என்பதற்காக யாராவது ஒருத்தருக்கு ராஜ்யசபாவில் இடம் தரப்படும் என்றும் ஒரு பேச்சு உள்ளது.

இலங்கை செல்கிறார் மோடி... அதிபர் சிறிசேனா நேரில் அழைப்பு இலங்கை செல்கிறார் மோடி... அதிபர் சிறிசேனா நேரில் அழைப்பு

நெருக்கம்

நெருக்கம்

அப்படி தருவதானால், அது எச்.ராஜாவுக்குதான் தரப்பட நிறைய வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதற்கு காரணம், கட்சியின் சீனியர், மேலிடத்தில் நல்ல நெருக்கத்தில் உள்ளவர், இந்துத்துவா கொள்கையை சரியாகவும், விடாப்பிடியாகவும் கடைபிடித்து வருபவர் என்பதால் இருக்கும் என தெரிகிறது. இதை தவிர கட்சியில் வேறு சிலரது பெயர்களும் அடிபட்டு வருகிறது.

அறிக்கை

அறிக்கை

இந்த நிலையில் திக தலைவர் கி.வீரமணி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் சுருக்கம் இதுதான்: "மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றாலும், மோடிக்கு ஆணை பிறப்பிப்பது ஆர்எஸ்எஸ் தலைமைப் பீடமே - இந்த இரட்டைத் தலைமை என்பது ஆபத்தானது.

தனி சுதந்திரம்

தனி சுதந்திரம்

அமைச்சரவையில் யாரை சேர்ப்பது? எத்தனை எண்ணிக்கை? யாருக்கு, எந்த இலாகா? என்பதெல்லாம் பொதுவாக நாடாளுமன்ற கட்சித் தலைவரின் (பிரதமரின்) ஏகபோக உரிமை. ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை, அது தனிச் சுதந்திரத்துடன் இயங்கும் ஓர் அரசியல் கட்சி அல்ல. ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பின் அரசியல் வடிவமேயாகும்.

படுதோல்வி

படுதோல்வி

இந்த முறை தேர்தலில் 303 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான ஆணையை ஏற்று தான் நடக்கவேண்டிய கட்டாயம் உண்டு. முன்வாசலில் படுதோல்வி அடைந்தவர்களை, கொல்லைப்புற - பின்வாசல் மூலம் அமைச்சராக்குவது, ஆட்சியில் அமர்த்துவது ஜனநாயகத்தைக் கொச்சைப்படுத்துவதாகும்.

அறிவுப் பஞ்சமா

அறிவுப் பஞ்சமா

கொண்டு வந்து அமைச்சர் பொறுப்புகளில் அமர்த்துவது என்பது கழிவுப் பொருள்களை மீண்டும் இலையில் பரிமாறுவதற்கு ஒப்பாகும். அவ்வளவு அறிவுப் பஞ்சமா அவர்களது அணியில்? கேட்கமாட்டார்களா, அரசியல் தெளிவுள்ளவர்கள்?"என்று கேட்டுள்ளார்.

English summary
Diravidar Kazhaga Leader K Veeramani has requested not to give ministerial posts to those who lost the election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X