சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முகமது நபியை கொச்சைப்படுத்திய கல்யாணராமனை போல் வேலூர் இப்ராஹிமையும் கைது செய்க.. அமீர்

Google Oneindia Tamil News

சென்னை: முகம்மது நபியை கொச்சைப்படுத்தி பேசிய கல்யாணராமனை கைது செய்தது போல் அவருடன் இருந்த வேலூர் இப்ராஹிமையும் கைது செய்து இருவர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என இயக்குநர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் அமீர் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில் தமிழகத்தில் நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக வைத்து மதக் கலவரத்தை தூண்டி அதன் மூலம் ஓட்டுக்கள் பெறும் நோக்கத்தோடு, உலகெங்கும் வாழும் பல நூறு கோடி இஸ்லாமிய மக்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் இறுதித் தூதர் முகம்மது நபி அவர்களை சொல்லத்தகாத வார்த்தைகளால் பொது வெளியில் கொச்சைப்படுத்திய கல்யாணராமனை கைது செய்த தமிழக அரசிற்கு என்னுடைய பாராட்டுக்கள்.

Director Ameer demands to arrest Vellore Ibrahim

சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான நச்சுக் கருத்துக்களை பொது வெளியில் உலவ விட்டு அதன் மூலம் ஏற்படும் கலவரத்தின் மூலம் தமிழகத்தில் ஓட்டு வேட்டை நடத்தலாம் என்கிற தீய எண்ணத்தோடு கல்யாணராமனையும் வேலூர் இப்ராஹிமையும் அழைத்துக் கொண்டு தமிழகத்தின் பல ஊர்களுக்கு பயணிக்கும் பாஜக கட்சியினரையும், தங்கள் கண் முன்னே தொடர்ந்து நடைபெறும் அநீதிகளை கண்டும் காணாதது போல் அமைதி காக்கின்ற வலது சாரி சிந்தனை கொண்ட பத்திரிகையாளர்களையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த நேரத்தில் முகம்மது நபியின் மீது பேரன்பு கொண்ட சமூகத்தினர் பாசிச சக்திகள் தமிழகத்தில் எதிர்பார்க்கின்ற எதிர்வினைகளை ஆற்றாது அமைதியாகவும் ஒற்றுமையாகவும் அறிவுப் பூர்வமாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் முகம்மது நபியின் தத்துவங்களையும் அவரின் சமூக செயல்பாட்டையும் மனித குலத்திற்கு அவர் ஆற்றிய பங்கையும் பொது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது என்பதை நினைவு படுத்துகிறேன்.

நபிகளை இழிவுபடுத்திய பாஜக கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்-சீமான்நபிகளை இழிவுபடுத்திய பாஜக கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்-சீமான்

தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நாளை மறக்கடிக்கும் விதமாகவும் தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் செயல்பட்ட கல்யாணராமனை கைது செய்தது போல் தேச விரோத மற்றும் சமூக விரோத செயல்பாட்டில் ஈடுபடும் வேலூர் இப்ராஹிமையும் கைது செய்து அவர்கள் இருவரின் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் அமீர் தெரிவித்துள்ளார்.

English summary
Director Ameer demands to arrest Vellore Ibrahim, he also welcomes the arrest of Kalyanaraman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X