சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சர்காருக்கு எதிராக செங்கோலை உயர்த்திய பாக்யராஜ்.. அசால்ட்டாக செய்த ஒரு விரல் புரட்சி!

சர்கார் பட கதை பிரச்சனையில் பாக்யராஜ் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    உண்மையை ஒப்புக்கொண்ட முருகதாஸ்... சர்க்கார் தடை நீங்கியது- வீடியோ

    சென்னை: சர்கார் பட கதை பிரச்சனையில் பாக்யராஜ் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார்.

    விஜய் நடிப்பில் வெளியாக உள்ள சர்கார் படத்தின் கதை தன்னுடையது அல்ல, வருணுடையதுதான் என ஒப்புக் கொண்டுள்ளார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். மேலும் அவருக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு தரவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

    அதேபோல் படத்தின் டைட்டில் கார்டில் கதைக்கு நன்றி வருண் என்ற வரிகள் இடம்பெறும் என்றும் கூறியுள்ளார். இத்தனை மாற்றங்களுக்கும், முடிவுகளுக்கும் பின் இருக்கும் ஒரே நபர் இயக்குனர் பாக்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

    2 நாட்களில் தொடங்குகிறது பருவமழை... நல்ல சேதி சொன்ன வானிலை மையம்! 2 நாட்களில் தொடங்குகிறது பருவமழை... நல்ல சேதி சொன்ன வானிலை மையம்!

    குற்றச்சாட்டு வைத்தார்

    குற்றச்சாட்டு வைத்தார்

    சர்கார் படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டு இருந்த சமயத்தில், இந்த படத்தின் கதை என்னுடையது என்று முறையிட்டார் வருண் என்கிற ராஜேந்திரன். தன்னுடைய செங்கோல் பட கதையை திருடி படம் எடுத்துவிட்டார் ஏ.ஆர். முருகதாஸ். இந்த கதையை தான் ஏற்கனவே தென்னிந்திய கதையாசிரியர்கள் சங்கத்தில் பதிவிட்டு இருப்பதாகவும் கூறினார்.

    முதலில் எதிர்த்தவர்

    முதலில் எதிர்த்தவர்

    இந்த நிலையில்தான் சீனுக்குள் வந்தார் தென்னிந்திய கதையாசிரியர்கள் சங்க தலைவர் பாக்யராஜ். நேரடியாக சர்கார் படத்தின் கதை செங்கோல் படத்தின் கதை என்று கூறினார். அலுவலக பேச்சுக்களில் மட்டுமில்லாமல் தான் கொடுத்த அனைத்து பேட்டிகளிலும் இந்த படத்தின் கதை செங்கோல் படத்தின் கதைதான் என்று அடித்துக் கூறினார்.

    மொத்த கதையை சொன்னார்

    மொத்த கதையை சொன்னார்

    ஆனால் இதை ஏ.ஆர் முருகதாஸ் தொடர்ந்து மறுத்து வந்தார். என்னுடைய பவுண்டட் கதையை பாக்யராஜ் பார்க்காமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டு வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமான பாக்யராஜ் தான் படித்த மொத்த செங்கோல் கதையை அப்படியே சொன்னார். இதுதான் சர்கார் கதையும் என்று ஒரே அடியாக அதிரடி காட்டினார். இவர் இப்படி கதையை வெளிப்படையாக சொல்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

    முதல் தடவை இப்படி

    முதல் தடவை இப்படி

    தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமும், உச்ச இயக்குனரும் பணியாற்றிய படம் ஒன்றுக்கு எதிராக இப்படி பாக்யராஜ் வெளிப்படையாக் பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறை இப்படி ஒரு சம்பவம் நடப்பது குறிப்பிடத்தக்கது.

    கடிதத்தையும் வெளியிட்டார்

    கடிதத்தையும் வெளியிட்டார்

    பாக்யராஜ் அதோடு விடுவதாக இல்லை. இந்த கதை தொடர்பாக நடந்த கடித்த பரிவர்த்தனைகளை வெளியே விட்டார். கதை குறித்து சமரசம் பேச முடியவில்லை. வருண் தாராளமாக வழக்கு தொடுக்கலாம் என்று பாக்யராஜ் எழுதிய கடிதம் அப்படியே வெளியானது. இந்த கடிதம் இந்த சர்கார் வழக்கில் பெரிய திருப்பமாக அமைந்தது.

    பெரிய வெற்றி

    பெரிய வெற்றி

    இந்த நிலையில்தான் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம், நடிகர், இயக்குனர் என்று எல்லோருக்கும் எதிராக வெற்றி பெற்றுள்ளார் பாக்யராஜ். எந்த மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் என்று கவலைப்படாமல் துணிச்சலாக தனக்கு தெரிந்த உண்மைகளை வெளிப்படையாக கூறினார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் சர்காருக்கு எதிராக செங்கோலை உயர்த்திய பாக்யராஜின் ஒருவிரல் புரட்சி தொடரும் என்று எதிர்பார்ப்போம்.

    English summary
    Director Bakhyaraj played a big role in Sarkar story stolen issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X