சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தா அவரும் வந்துட்டாருல்ல... புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார் இயக்குனர் கவுதமன்!

Google Oneindia Tamil News

சென்னை: ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு, விவசாயிகளுக்கு ஆதரவு என தமிழர் நலன் சார்ந்து சமூக செயற்பாட்டாளராக செயல்பட்டு வந்த இயக்குனர் வ.கவுதமன் அரசியல் கட்சியை தொடங்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படுகிறது.

தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகரான கவுதமன் கனவே கலையாதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு மகிழ்ச்சி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.

மக்கள் தொலைக்காட்சிக்காக வீரப்பனின் வாழ்க்கை வரலாறை சந்தனக்காடு நெடுந்தொடராகவும், ஆட்டோ சங்கர் வாழ்க்கை வரலாற்றை தொடராகவும் எடுத்திருந்தார். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டு போராட்டம்

தமிழ் திரைப்பட இயக்குனர் என்பதைத் தாண்டி சிறந்த தமிழ் உணர்வாளராகவும் அறியப்பட்ட இவர், தமிழர் பிரச்சினை தொடர்பான கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்து வந்தார். மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்தவர். பிற மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை ஊக்கப்படுத்தினார்.

விவசாயிகளை ஆதரித்த கவுதமன்

விவசாயிகளை ஆதரித்த கவுதமன்

விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வந்தவர் காவிரிப் படுகையில் ஓஎன்ஜிசி குழாய் பதிக்க முன்னெடுக்கும் முயற்சிகள், ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் எடுக்கும் திட்டம் என விவசாய நிலங்களை சுரண்டுவதற்காக போடப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் எதிராக போராடிய விவசாயிகளுக்கு களத்தில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்பு

மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையிலும் மக்களுக்கு உறுதுணையாக நின்றவர். ஈழத் தமிழ் மக்களுக்காகவும் செயல்பட்டு வரும் கவுதமன், ஐநா மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பல முறை பங்கேற்று இலங்கைத் தமிழர்களுக்காக தனது கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

நாளை புதிய கட்சி அறிவிப்பு

நாளை புதிய கட்சி அறிவிப்பு

தமிழ் இன உணர்வு, தமிழர் நிலம் உரிமை என தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக செயல்பட்டு வந்த கவுதமன், தனது பொதுவாழ்க்கையை அரசியல் கட்சி மூலம் விஸ்திகரிப்பு செய்ய உள்ளார். மக்களுக்காக தொடர்ந்து களத்தில் செயல்படுவதற்காக கவுதமன் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளார். இந்த அரசியல் கட்சி நவம்பர் 11ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

English summary
Tamil film Director Gautaman is announcing his political party tomorrow, he raised voices for rights of tamilnadu people in all sections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X