சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அதான் கோடி கோடியா வெச்சிருக்காங்களே.. அள்ளிக் கொடுக்க வேண்டியதுதானே".. யாரை சொல்கிறார் பேரரசு?

முதலமைச்சர் நிவாரண நிதி குறித்து பேரரசு ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: அதென்ன, எப்பவுமே சினிமாக்காரங்கதான் நிதி தரணுமா? அதான் அரசியல்வாதிகள் கோடி கோடியா வெச்சிருக்காங்களே.. அவங்க பணம் தரலாமே" என்று திரைப்பட இயக்குனர் பேரரசு கேள்வி எழுப்பி உள்ளார்.

Recommended Video

    Perarasu ஆதங்கம்! இப்பவும் சினிமாகாரர்களே நிதி கொடுக்கறாங்க | Oneindia Tamil

    தற்போது தொற்று வேகம் எடுத்து வருகிறது.. எதிர்பாராத விதமாக இந்த 2வது அலை, பயங்கரமாக இருக்கிறது.. ஒருநாளைக்கு 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.. தினம்தோறும் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

    ஒருபக்கம் ஊரடங்கு, மறுபக்கம் தடுப்பூசி என அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்தி உள்ளன.. இதற்கு நடுவில், ஆஸ்பத்திரி பற்றாக்குறை, ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு, படுக்கைகளுக்கு தட்டுப்பாடு, போன்றவையும் எழுந்து வருகின்றன.

    ஒரே நாளில்.. 14 ஐஏஎஸ், 20 ஐபிஎஸ் அதிகாரிகள் மொத்தமாக திடீர் டிரான்ஸ்பர்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஒரே நாளில்.. 14 ஐஏஎஸ், 20 ஐபிஎஸ் அதிகாரிகள் மொத்தமாக திடீர் டிரான்ஸ்பர்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி

    சமாளிப்பு

    சமாளிப்பு

    இவைகளை எல்லாம் சரி செய்யவும், ஆக்சிஜன் சிலிண்டர்களையும், ஆர்டிபிசிஆர் கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் போன்றவைகளையும் தமிழக அரசு வாங்க வேண்டி உள்ளது.. ஆனால், தமிழக அரசிடம் போதுமான நிதி இல்லை.. பெரிய அளவில் நிதி தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்குத் தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்களிடமும், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்களிடமும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    நிதியுதவி

    நிதியுதவி

    அதன்படியே, பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த நிதியுதவியை தந்து வருகிறார்கள்.. திமுக மூத்த நிர்வாகிகளும் இந்த நிதியுதவி தந்திருந்தனர்.. அந்த வகையில், முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகுமார், சூர்யா குடும்பம் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.

     அரசியல்வாதி

    அரசியல்வாதி

    இந்நிலையில், டைரக்டர் பேரரசு ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "இப்பொழுதும் நிதி என்றால் சினிமாக்காரர்கள்தான் அள்ளித் தருகின்றனர்! அரசியலில் கோடிக்கோடியாய் சம்பாதித்த எத்தனையோ அரசியல்வாதிகள் இருக்கிறார்களே அவர்கள் கொடுக்கலாமே! ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அவர்கள் மக்கள் உயிரைக்காக்க பணம் கொடுக்கலாமே!" என பதிவிட்டுள்ளார்.

    ட்வீட்

    ட்வீட்

    இந்த ட்வீட் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. காரணம், டைரக்டர் பேரரசு பாஜகவின் ஆதரவாளராக கருதப்படுகிறார்.. மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில்தான் பாஜகவில் இவர் இணைந்தார்.. "பிரதமர் மோடியின் தேசப்பணி தன்னை வியக்க வைப்பதால்தான் கட்சியில் இணைந்ததாக பேரரசு காரணம் சொன்னார்.

    விருப்பம்

    விருப்பம்

    அதுமட்டுமல்ல, 'பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டவர்கள், உங்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கிறோம் என்று சொல்பவர்களால், இந்து மக்கள் விருப்பமுடன் இட்ட விபூதி, குங்குமத்தை ஒரு அரை மணிநேரம் நெற்றியில் வைத்துக்கொள்ள முடியாதா? கோயிலை விட்டு வெளியே வந்தவுடன் அழிக்கிறார்களே? நான் பாஜகவில் சேர்வதற்கு இதுவும் ஒரு காரணம். இந்து மதத்தை யாராவது இழிவுபடுத்தினால், அவர்களது வீட்டை இந்துக்கள் முற்றுகையிடும் காலம் வரும்" என்று சொன்னவர்தான் பேரரசு.

    ட்வீட்

    ட்வீட்

    இவர் கட்சியில் சேர்ந்த சமயத்தில்தான், விஜய் வீட்டில் வருமான வரி ரெய்டு நடந்து, பல தரப்பினரும் கடுப்பில் இருந்தனர்.. அப்போது, ஒரு ட்வீட் போட்டிருந்தார் பேரரசு... "விஜய்க்கு எதிரான போராட்டம் தேவையற்றது, இப்படியெல்லாம் செய்தால், பாஜகவின் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாகும், போராடுவதற்கு நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன" என்று பதிவிடவும், மொத்த ட்விட்டர்வாசிகளும் கொந்தளித்துவிட்டனர். "நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை திசை திருப்பவே இப்படி ஒரு ரெய்டு" என்று பேரரசுக்கு பதிலடி தந்தனர்.

    உயர்வு

    உயர்வு

    இப்போது பேரரசு பதிவிட்ட ட்வீட்டுக்கு ஆதரவும் கிடைத்து வருகிறது.. பேரரசு சொல்வது ஓரளவு உண்மையும்கூட.. எத்தனையோ அரசியல்வாதிகள் தானாக முன்வந்து நிதி தந்ததில்லை.. வெகுசிலரே இதில் உயர்ந்து நிற்கின்றனர்.. அந்தந்த அரசியல் கட்சி சார்பில் ஒட்டுமொத்தமாக ஒரு தொகை தரப்படுமே தவிர தனித்தனியாக அரசியல்வாதிகள் நிதயுதவி செய்வது குறைவுதான்.

    பரபரப்பு

    பரபரப்பு

    அதேசமயம், இந்த ட்வீட்டுக்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது.. சினிமாக்காரர்களில் எல்லாருமா நிதியுதவி தருகிறார்கள்.. ஒருசிலர் தானே, நிதி தருகிறார்கள்? ஏன், மோடியும், பாஜக கட்சியை சேர்ந்தவங்களும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறீங்களா? மத்தியில் ஆளும் கட்சி என்ன செய்தது? எங்களுக்கு வர வேண்டிய பிஎம் கேர் நிதி என்னாச்சு, அதை யாராவது கேட்கிறீங்களா? " என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    English summary
    Director Perarasu about CM Relief fund
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X