சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இங்க உட்கார்ந்து இருக்கிறது யார் தெரியுமா... என்னா ஒரு சிரிப்பு.. எழுந்து நின்று ஒரு கும்பிடு!

விழாவில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எஸ்ஏசி புகழாரம் சூட்டி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பிகில், திகில் எதுவாக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான் என்று கடுகடுத்த அமைச்சர் ஜெயக்குமார் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.. முகம் எல்லாம் பூரிப்பு தென்பட்டதை ஒரு விழாவில் பார்க்க முடிந்தது!

பொதுவாக, எந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பும், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விஜய் பேசுவது வழக்கம்.

அதாவது தமிழக அரசை மறைமுகமாக தாக்குவதுதான் அந்த பேச்சு.. இப்படி விஜய் பேசியதுமே அரங்கம் அதிர கரகோஷம் நடந்தாலும் அடுத்த செகண்ட் ஆளும் தரப்பில் கொந்தளிப்புகள் துவங்கிவிடும். அப்படித்தான், பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டிலும் பேசப்போய், அந்த படத்தில் உள்ள அரசியல் வசனங்களுக்கு பல கடிவாளங்கள் அரசு தரப்பில் போடப்பட உள்ளதாகவும் தகவல் வந்தன.

டாப் கியர் போட்டு மேலே வந்த எடப்பாடியார்.. பாமக பக்க துணை.. வீழ்த்தப்பட்ட திமுக.. 2 வெற்றிடாப் கியர் போட்டு மேலே வந்த எடப்பாடியார்.. பாமக பக்க துணை.. வீழ்த்தப்பட்ட திமுக.. 2 வெற்றி

கடம்பூர் ராஜு

கடம்பூர் ராஜு

தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் எந்தப் படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்தார். சிறப்பு காட்சியை திரையிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரையரங்குகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.

சட்டம் பொதுவானது

சட்டம் பொதுவானது

இது சம்பந்தமாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு, "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் படம் எடுத்து வெளியிடலாம். சிறப்புக் கட்சிகள் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி மறுத்து அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். பிகில், திகில் என எந்தத் திரைப்படமானாலும், யாராக இருந்தாலும் அனைவருக்கும் சட்டம் பொதுவானது" என்று பதிலளித்து இருந்தார்.

எஸ்ஏ சந்திரசேகரன்

எஸ்ஏ சந்திரசேகரன்

இந்நிலையில், சென்னையில் ஒரு விழா நடந்துள்ளது. இதில் சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதேபோல, அமைச்சர் ஜெயக்குமாரும் கலந்து கொண்டார். அமைச்சர் முன் வரிசையில் உட்கார்ந்திருக்க, எஸ் ஏ சந்திரசேகரனிடம் உழைப்பு குறித்த ஒரு கேள்வி முன் வைக்கப்படுகிறது.

சிரிப்பு

சிரிப்பு

அதற்கு எஸ்ஏ சந்திரசேகர் பதிலளிக்கும்போது, "எம்ஜிஆர் காலத்துல சாதாரண தொண்டனா இருந்து உழைச்சு.. உழைச்சு... இங்க உட்கார்ந்திருக்காரு பாரு.. யார் தெரியுமா.. ஒரு அமைச்சர் உட்கார்ந்திருக்கிறார்.. உழைச்சு மேல வந்தவர்" என்று எஸ்ஏசி சொன்னதுமே, ஜெயக்குமார் முகத்தில் ஒரே சிரிப்புதான்.. அமைச்சர் என்று கை காட்டி சொன்னதுமே எழுந்து நின்று வணக்கம் சொல்லி உட்கார்ந்தார் ஜெயக்குமார். இது அமைச்சரிடம் உள்ள உயரிய பண்பு ஆகும். எஸ்ஏசி பேசிய இந்த பேச்சினை ஜெயக்குமார் தனது ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார்.

ட்வீட்

"தொண்டனாய் வாழ்க்கையை தொடங்கி இன்று அமைச்சராய் உயர்ந்திருப்பது அவரின் உழைப்புதான் காரணம்... இளைஞர்கள் வாழ்வில் முன்னேற நமது அமைச்சர் #djayakumar அவர்களை எடுத்துகோள் காட்டி உழைப்பின் உயர்வை பற்றி #Bigil பட நாயகன் #விஜய் அவர்களின் தந்தை #SAC அவர்கள் பெருமிதம்..." என்று பதிவிடப்பட்டுள்ளது. பார்ப்போம்.. இனியாவது பிகில் தடையின்றி ஊதுமா என்று!

English summary
tamil film director sa chandra sekhar has praised minister jayakumar about his hardwork in chennai function
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X