சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவில் சேரப்போவதாக வெளியான தகவல்.. விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவில் சேர போவதாக வெளியானது வதந்தி என இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு பிரபலங்கள் கட்சியில் சேர்ந்து வருகிறார்கள். சில பிரபலங்கள் கட்சி மாறி வருகிறார்கள். கட்சிகள் ஒவ்வொன்றும் இனி மாறப்போகிறது. பிரச்சாரங்கள் அனல் பறக்க போகின்றன.

ஏனெனில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வரும் சட்டசபை தேர்தல் தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் ஆகும். வழக்கமாக ஜெயலலிதா, கருணாநிதி தலைமையில் இரு அணிகளாக தேர்தலை சந்தித்து பார்க்கப்பட்ட மக்களுக்கு முதல் முறையாக இவர்கள் இருவரும் இல்லாத ஒரு தேர்தலை பார்க்க போகிறார்கள்.

பிரபலங்கள் சேர்ப்பு

பிரபலங்கள் சேர்ப்பு

இந்த தேர்தலில் பாஜக எப்படியும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறது. திமுகவுக்கு கடும் சவால் அளிக்கவும் விரும்புகிறது. அதற்காக பிரபலங்களை களம் இறக்க முடிவு செய்துள்ள. அந்த வகையில். பல்வேறு பிரபலங்களை தங்கள் வசம் ஈர்த்து வருகிறது பாஜக.

பாஜகவில் பிரபலங்கள்

பாஜகவில் பிரபலங்கள்

இதுவரை ராதாரவி, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம், கங்கை அமரன், கஸ்தூரி ராஜா, குட்டி பத்மினி, மதுவந்தி உள்பட பலர் பாஜகவில் இணைந்தனர். இதேபோல் திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்து விபி துரைசாமி பாஜகவில் இணைந்தார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையும் பாஜகவில் இணைந்தார். கடைசியாக தற்போது குஷ்பு காங்கிரஸில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைந்தார். திமுக அதிருப்தி எம்எல்ஏ குக செல்வமும் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

திட்டமிட்ட வதந்தி

திட்டமிட்ட வதந்தி

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் பாஜகவில் சேரப்போவதாக தகவல் பரவியது. சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த விஜய்யின் தந்தை எஸ்எ சந்திரசேகர், பாஜகவில் சேரப்போவதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். முற்றிலும் வதந்தி. இப்படிப்பட்ட வதந்தி ஏன் பரபப்பப்படுகிறது என்று தெரியவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

விஜய் அரசியல் எப்படி

விஜய் அரசியல் எப்படி

பாஜகவில் அடுத்தடுத்த கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் சேர்ந்து வரும் நிலையில், நடிகர் விஜய்யின் தந்தை குறித்தும் பரவிய தகவல், விஜய் ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேண்டுமென்றே, யாரேனும் திட்டமிட்டு வதந்தி பரப்பினார்களா என்று சந்தேகமும் எழுந்துள்ளது. விஜய் தனது அரசியல் எப்படி இருக்கும் என்பது இதுவரை அறிவிக்கவில்லை ஆனால் அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்பது மட்டும் உறுதியென ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

English summary
Director SA Chandrasekhar has denied rumors that he was going to join the BJP.he said i did not know how this type of rumors spread in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X