சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்தடுத்து 2 அறிவிப்புகள்.. நெருங்கும் பண்டிகைகள்.. பெருகும் தொற்று பாதிப்பு.. மத்திய அரசு அதிரடி

மாற்று திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த போகிறார்களாம்

Google Oneindia Tamil News

சென்னை: அடுத்த 3 மாதங்களுக்கு மக்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.. அதேபோல, மாற்றுத்திறனாளிகள், நடமாட முடியாதவர்களுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.46 லட்சத்தை தாண்டியது... அதே போல், பாதிப்பு 3.35 கோடியை தாண்டியது... கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் தொற்றால் 31,382 பேர் புதிதாக பாதித்துள்ளனர்...

இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,35,94,803 ஆக உயர்ந்துள்ளது.. புதிதாக 318 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,46,368 ஆக உயர்ந்தது..

வல்லரசுகளையே நடுங்க வைத்த கேங்.. வலிமையில் வினோத் எடுத்த பெரிய தீம்.. யார் இந்த சாத்தான் ரைடர்ஸ்?வல்லரசுகளையே நடுங்க வைத்த கேங்.. வலிமையில் வினோத் எடுத்த பெரிய தீம்.. யார் இந்த சாத்தான் ரைடர்ஸ்?

இந்தியா

இந்தியா

தொற்றில் இருந்து ஒரே நாளில் 32,542 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.. இப்போதைக்கு நாட்டில் 3,00,162 பேர் சிகிச்சையில் உள்ளனர். மற்றொருபுறம் இதுவரை 84,15,18,026 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. நேற்று ஒரு நாள் மட்டும் 72,20,642 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது... இப்படிப்பட்ட சூழலில்தான், 2 விதமான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது..

கொண்டாட்டங்கள்

கொண்டாட்டங்கள்

அடுத்த 3 மாதங்கள் கொண்டாட்டங்களையும், அதிக அளவில் ஒன்று கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது... அடுத்த 3 மாதங்களுக்கு மக்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு சூழலிலும் நோய்த்தொற்று அதிகரிக்க காரணமாக அமைந்துவிடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

 மத்திய அரசு

மத்திய அரசு

6 மாநிலங்களில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளதாம்.. இமாசல பிரதேசம், சிக்கிம், லட்சத்தீவு, சண்டிகார், கோவா, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100% பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 மாற்று திறனாளிகள்

மாற்று திறனாளிகள்

மற்றொரு அறிவிப்பாக, மாற்றுத்திறனாளிகள், நடமாட முடியாதவர்களுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறியுள்ளது.. வழக்கமாக பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் அதிகமாகும்.. இந்தியாவிலேயே கேரளாவில் இன்று தொற்று அதிகமாகி இருப்பதற்கு காரணம், ஓனம் பண்டிகையை முன்னிட்டு கட்டுப்பாடுகளை தளர்த்தியதுதான்.. அதன் பலனைதான் இப்போது அந்த மாநிலம் அனுபவித்து கொண்டுள்ளது.

 மாநிலங்கள்

மாநிலங்கள்

இனி வரும் காலங்கள் பண்டிகை காலம் என்பதாலும், இப்படி ஒருநிலைமை மற்ற மாநிலங்களுக்கும் வந்துவிடக்கூடாது என்பதாலும், அதி கட்டுப்பாட்டு மண்டலங்களிலும், தொற்று பாதிப்பு 5 சதவீதத்துக்கு மேல் உள்ள மாவட்டங்களிலும் கூட்டமாக திரள தடை விதிக்கப்பட்டுள்ளது... மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்திருந்தது. இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் விகேபால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.

பாதிப்பு

பாதிப்பு

அவர்கள் சொன்னதாவது: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், நாம் இன்னும் கொரோனா 2-அலையின் பிடியில்தான் இருக்கிறோம்... கடந்த வாரம் தொற்று பாதித்தவர்களில் 62.73 சதவீதம் பேர், கேரளாவை சேர்ந்தவர்கள்... அந்த மாநிலத்தில் மட்டும்தான் சிகிச்சை பெற்று வருபவர்கள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் இருக்கிறார்கள்.

 பண்டிகை காலம்

பண்டிகை காலம்

பண்டிகை காலங்களில், கட்டுப்பாட்டு மண்டலங்களிலும், தொற்று பாதிப்பு 5 சதவீதத்துக்கு மேல் உள்ள மாவட்டங்களிலும் கூட்டமாக திரள தடை விதிக்கப்பட்டுள்ளது... மாற்றுத்திறனாளிகள், நடமாட முடியாதவர்களுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்... 18 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை 66 சதவீதம்பேர் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டுள்ளனர். 23 சதவீதம்பேர், 2 டோஸும் போட்டுள்ளனர்... இது இந்தியாவின் முக்கியமான மைல்கல் என்றனர்.

English summary
Disabilities People vaccinated at home, says Central government
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X