சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா எந்த நேரத்திலும் விடுதலை? தமிழகத்தில் புதிய அரசியல் புயல்?

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூருவில் சிறை தண்டனையை அனுபவித்து வரும் சசிகலா எந்த நேரத்திலும் விடுதலை செய்யப்படலாம் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். சசிகலா சிறையில் இருந்து விடுதலையானால் தமிழக அரசியலில் என்ன மாதிரியான புயல் வீசும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

பெங்களூரு சிறையில் சசிகலாவின் 4 ஆண்டுகால தண்டனை காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ரூ10 கோடி அபாராதமும் சசிகலா தரப்பில் செலுத்தப்பட்டுவிட்டது.

இதனையடுத்து நன்னடத்தைகளின் அடிப்படையில் தம்மை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சிறை நிர்வாகத்திடம் சசிகலா மனு கொடுத்துள்ளார். இந்த மனுவை தொடர்ந்து சசிகலா எந்த நேரத்திலும் விடுதலையாவார் என்கிற எதிர்பார்ப்பில் அவரது ஆதரவாளர்கள் உள்ளனர்.

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா இடப்பெயர்ச்சியாவதால் யாருக்கு சாதகம்? பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா இடப்பெயர்ச்சியாவதால் யாருக்கு சாதகம்?

வருகிறார் சசிகலா

வருகிறார் சசிகலா

அப்படி சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலா அடுத்ததாக மேற்கொள்ளப் போகும் அரசியல் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்? என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் சசிகலாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் பரபரப்புக்குரியதாக இருக்கும்.

சசிகலா முன் வாய்ப்புகள்

சசிகலா முன் வாய்ப்புகள்

சசிகலா சிறைக்கு போகும் போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தார்; ஆகையால் அதிமுகவை மீண்டும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இன்னொரு கூவத்தூர் நாடகத்தை அரங்கேற்றுவாரா? இதற்கு எம்.எல்.ஏ.க்கள் ஒத்துழைப்பார்களா? என்கிற கேள்வியும் உள்ளது. அல்லது தினகரனின் அமமுகவை வழிநடத்துவாரா? என்கிற இன்னொரு கேள்வியும் உள்ளது.

பாஜகவை பழிவாங்குவாரா?

பாஜகவை பழிவாங்குவாரா?

தமிழக முதல்வராக தம்மை பதவி ஏற்கவிடாமல் சிறையில் அடைத்த பாஜகவை பழிவாங்கும் வகையில் புதிய கூட்டணியை சசிகலா உருவாக்குவாரா? அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் சசிகலா உருவாக்கும் கூட்டணியில் எந்த கட்சிகள் இடம்பெற வாய்ப்புள்ளது? என்கிற விவாதமும் நடந்து வருகிறது.

புதிய அரசியல் புயல்?

புதிய அரசியல் புயல்?

தமிழக தேர்தலில் போட்டியிட அடுத்த மாதம் கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் சசிகலாவின் வருகை புதிய அரசியல் புயலை கிளப்ப வாய்ப்புள்ளதா? என்பது எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.

English summary
Sasikala likley to early release from Prappana Agrahara prison in Bengaluru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X