சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரை, கோவையில் அதிகரித்த மரணங்கள்.. எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தொற்று.. லிஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று சென்னை, கோவை, வேலூர், சேலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது. எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு என்பதை இப்போது பார்ப்போம்.

சென்னையில் இன்று 1091 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,04,983 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 22 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். தற்போதைய நிலையில் சென்னையில் 11720 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மக்களின் அச்சத்தில் லாபம் ஈட்ட முயற்சி.. பதஞ்சலி நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம்.. ஹைகோர்ட் மக்களின் அச்சத்தில் லாபம் ஈட்ட முயற்சி.. பதஞ்சலி நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம்.. ஹைகோர்ட்

 காஞ்சிபுரத்தில் 336 பேர்

காஞ்சிபுரத்தில் 336 பேர்

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 408 பேருக்கும், திருவள்ளூரில் 320 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 336 பேருக்கும், தேனியில் 297 பேருக்கும், ராணிப்பேட்டையில் 270 பேருக்கும் இன்று ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 239 பேருக்கும், திருநெல்வேலியில் 250 பேருக்கும், வேலூரில் 192 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 கன்னியாகுமரியில் 222 பேர்

கன்னியாகுமரியில் 222 பேர்

கோவையில் 190 பேருக்கும், கடலூரில் 214 பேருக்கும், திண்டுக்கல்லில் 127 பேருக்கும், கன்னியாகுமரியில் 222 பேருக்கும், மதுரையில் 101 பேருக்கும், தஞ்சாவூரில் 162 பேருக்கும், திருவண்ணாமலையில் 153 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 திருச்சியில் 97 பேர்

திருச்சியில் 97 பேர்

விருதுநகரில் 100 பேருக்கும், விழுப்புரத்தில் 76 பேருக்கும், திருச்சியில் 97 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 75 பேருக்கும், ஈரோட்டில் 62 பேருக்கும், அரியலூரில் 24 பேருக்கும், தர்மபுரியில் 7 பேருக்கும், கரூரில் 26 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 55 பேருக்கும், நாமக்கல்லில் 30 பேருக்கும், நீலகிரியில் 22 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் 9 பேர் மரணம்

மதுரையில் 9 பேர் மரணம்

சிவகங்கையில் 28 பேருக்கும், ராமநாதபுரத்தில் 20 பேருக்கும், புதுக்கோட்டையில் 87 பேருக்கும், திருவாரூரில் 23 பேருக்கும், திருப்பத்தூரில் 80 பேருக்கும், திருப்பூரில் 34 பேருக்கும் இன்று கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று சென்னையில் அதிகபட்சமாக 22 பேரும், மதுரையில் 9 பேரும் கொரோனாவால் பலியாகி உள்ளனர். வேலூரில் 7 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், கோவையில் 6 பேரும், திருவள்ளூர், திருவண்ணமலை, காஞ்சிபுரத்தில் தலா 4 பேரும், தென்காசி, தேனி, திருச்சி, ஈரோடு, கள்ளக்குறிச்சியில் தலா 3 பேர் கொரோனாவால் இன்று பலியாகி உள்ளனர்.

English summary
Tamilnadu District-wise abstract of cases including active cases, discharges and death on 06/08/2020. death cases increased in maduri and coimbatore and vellore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X