சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

13 மாவட்டங்களில் சூப்பர் மாற்றம்.. 5 மாவட்டங்களில் மோசமான நிலை.. மாவட்ட கொரோனா நிலவரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று 5994 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பதை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று அரியலூர், நீலகிரி, நாமக்கல், பெரம்பலூர், உள்பட 13 மாவட்டங்களில் 100க்கும் குறைவான நபர்களுக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்ற 24 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 397 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 393 பேருக்கும் திருவள்ளூரில் 396 பேருக்கும், தேனியில் 360 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 119 பேர் மரணம்.. ஒரே நாளில் கிடுகிடுதமிழகத்தில் இன்று 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 119 பேர் மரணம்.. ஒரே நாளில் கிடுகிடு

தூத்துக்குடியில் 250 பேர்

தூத்துக்குடியில் 250 பேர்

கோவையில் 217 பேருக்கும், தூத்துக்குடியில் 250 பேருக்கும், விருதுநகரில் 193 பேருக்கும் வேலூரில் 149 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 127 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 131 பேருக்கும், கடலூரில் 146 பேருக்கும், தென்காசியில் 173 பேருக்கும், மதுரையில் 107 பேருக்கும் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் 163 பேர்

சேலத்தில் 163 பேர்

திருவண்ணாமலையில் 221 பேருக்கும், புதுக்கோட்டையில் 139 பேருக்கும், சேலத்தில் 163 பேருக்கும், தஞ்சாவூரில் 155 பேருக்கும், திருச்சியில் 96 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் 60 பேருக்கும், சிவகங்கையில் 50 பேருக்கும், விழுப்புரத்தில் 67 பேருக்கும், திருப்பத்தூரில் 58 பேருக்கும், திருப்பூரில் 42 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னையில் அதிகம்

சென்னையில் அதிகம்

தமிழகத்தில் தற்போதைய நிலையில் மிக அதிகபட்மாக சென்னையில் 11,654 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருவள்ளூரில் 3513 பேரும், தேனியில் 3014 பேரும், செங்கல்பட்டில் 2728 பேரும், காஞ்சிபுரத்தில் 2718 பேரும் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் இதுவரை 2302 பேரும் செங்கல்பட்டில் 307 பேரும், மதுரையில் 288 பேரும், திருவள்ளூரில் 286 பேரும் , கோவையில் 125 பேரும், காஞ்சிபுரத்தில் 151 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்

மாவட்ட கொரோனா நிலவரம்

மாவட்ட கொரோனா நிலவரம்

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பதையும் இப்போது பார்ப்போம். அடைப்புக்குறிக்குள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அரியலூர்: 46 (1291)
  • செங்கல்பட்டு 397 (17811)
  • சென்னை 989 (109117)
  • கோவை 217 (6670)
  • கடலூர் 146 (4774)
  • தர்மபுரி 28 ( 880)
  • திண்டுக்கல் 131 (3878)
  • ஈரோடு 65 (1064)
  • கள்ளக்குறிச்சி 86 (4480)
  • காஞ்சிபுரம் 393 (11807)
  • கன்னியாகுமரி 127 (6348)
  • கரூர் 32 (771)
  • கிருஷ்ணகிரி ( 1422)
  • மதுரை 107 ( 12005)
  • நாகப்பட்டினம் 69 ( 1145)
  • நாமக்கல் 35 (991)
  • நீலகிரி 10 (958)
  • பெரம்பலூர் 32 (718)
  • புதுக்கோட்டை 139 (3189)
  • ராமநாதபுரம் 60 (3646)
  • ராணிப்பேட்டை 219(6964)
  • சேலம் 163 (4622)
  • சிவகங்கை 50 (2936)
  • தென்காசி 173 (3132
  • தஞ்சாவூர் 155(4089)
  • தேனி 360 (7898)
  • திருப்பத்தூர் 58 (1605)
  • திருவள்ளூர் 396 (17013)
  • திருவண்ணாமலை 221 (7832)
  • திருவாரூர் 51 ( 1998)
  • தூத்துக்குடி 250 (9159)
  • திருநெல்வேலி 162 (6578)
  • திருப்பூர் 42 (1154)
  • திருச்சி 96 (5129)
  • வேலூர்149 (73550
  • விழுப்புரம் 67 (4530)
  • விருதுநகர் 193 (9966)

English summary
District-wise abstract of covid positive cases details of tamilnadu. 989 people have been affected in Chennai. 397 people have been confirmed infected in Chengalpattu, 393 in Kanchipuram, 396 in Tiruvallur and 360 in Theni.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X