சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.. சென்னை முதலிடம்.. ஷாக் கொடுத்த திருச்சி

Google Oneindia Tamil News

சென்னை" தமிழகத்தில் புதிதாக 50 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பபட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவதாக கோவையில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

Recommended Video

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா... 144 தடை நீட்டிக்கப்படுமா?

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிவிப்பில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது. இதில் 570 பேர் டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவர். 621 ஆக உயர்ந்துள்ளதால் தொடர்ந்து நாட்டிலயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. இந்த 4 மாவட்டங்களில் சிங்கிள் நோயாளி கிடையாது! தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. இந்த 4 மாவட்டங்களில் சிங்கிள் நோயாளி கிடையாது!

    திருச்சியில் 13 பேருக்கு

    திருச்சியில் 13 பேருக்கு

    தமிழகத்தில் இன்றைக்கு வெளியான கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளில் மிக அதிகபட்சமாக சென்னையைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக திருச்சியில் 13 பேருக்கும், திருப்பூரில் 4 பேருக்கும், நாமக்கல், கடலூர், தஞ்சாவூரில் தலா 3 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தலா 2 பேருக்கும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மற்றும் அரியலூரில் ஒருவருக்கும் இன்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

    கோவை 2வது இடம்

    கோவை 2வது இடம்

    எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா என்பதை இப்போது பார்ப்போம். தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக சென்னையில் 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள கோவையில் 59 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. 3வது இடத்தை பிடித்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கும், 4வது இடத்தை திருநெல்வேலி பிடித்துள்ளது. அங்கு 38 பேருக்கும், ஈரோட்டில் 32 பேருக்கும் (5வது இடம்) கொரோனா பாதிப்பு உள்ளது.

    நாமக்கல் 28 பேருக்கு பாதிப்பு

    நாமக்கல் 28 பேருக்கு பாதிப்பு

    திருச்சி மாவட்டத்தில்30 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 28 பேருக்கும்,ராணிப்பேட்டையில் 25 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 பேருக்கும், தேனியில் 23 பேருக்கும், கரூரில் 23 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் 19 பேருக்கும், விழுப்புரத்தில் 16 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 13 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம் தூத்துக்குடி

    நாகப்பட்டினம் தூத்துக்குடி

    சேலம், திருவள்ளூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா 12 பேருக்கும், நாகப்பட்டினம், தூத்துக்குடி, விருதுநகர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா 11 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் 9 பேருக்கும், தஞ்சாவூரில் 8 பேருக்கும், திருப்பூரில் 7 பேருக்கும் கன்னியாகுமரியில் 6 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 6 பேருக்கும் சிவகங்கை, வேலூரில் தலா 5 பேருக்கும், நீலகிரியில் 4 பேருக்கும், கள்ளக்குறிச்சி மற்றும் ராமநாதபுரத்தில் தலா 2 பேருக்கும், அரியலூர் மற்றும் பெரம்பலூரில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    English summary
    District-wise coronavirus cases in Tamil Nadu. chennai 110. coimbatore 59, dindigul 45, thirunelveli 38, erode 32
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X