சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாவட்ட வாரியாக 80 வயதை கடந்த வாக்காளர்கள் விவரம்... தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட சுமார் 13 லட்சம் பேர் தபால் வாக்கு அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட மாவட்ட வாரியான பட்டியலை இப்போது பார்ப்போம்.

தமிழக சட்டசபை தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது. வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற போகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் வருகிற 12ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்த தேர்தலில் இதுவரை இல்லாத புதிய முயற்சியாக 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் விருப்பம் இருந்தால் தபால் வாக்குகள் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

13லட்சம் பேர்

13லட்சம் பேர்

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழகம் முழுவதும் 12,91,132 பேர் 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் அதிகபட்சமாக 1,08,718 தபால் வாக்குகள் உள்ளன சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 64,755 வாக்குகள் உள்ளன. சேலத்தில் 61,728 வாக்குகளும், திருவள்ளூரில் 56,074 வாக்குகளும் உள்ளன.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

காஞ்சிபுரத்தில் 25,666 வாக்குகளும், வேலூரில் 24,487 வாக்குகளும், கிருஷ்ணகிரியில் 28,502 வாக்குகளும், தர்மபுரியில் 23,567 வாக்குகளும், திருவண்ணாமலையில் 48,300 வாக்குகளும் (எல்லாம் 80 வயதை கடந்தவர்கள்) உள்ளன. விழுப்புரத்தில் 33,913, நாமக்கல்லில் 34701 வாக்குகள் உள்ளன.

கோவை

கோவை

ஈரோட்டில் 49,639 வாக்குகளும், நீலகிரி மாவட்டத்தில் 8,253 வாக்குகளும், கோவையில் 64,755 வாக்குகளும், திண்டுகல்லில் 36,800 வாக்குகளும், கரூரில் 17,528 வாக்குகளும், திருச்சிராப்பள்ளியில் 54155 வாக்குகளும், பெரம்பலூரில் 11295 வாக்குகளும், கடலூரில் 40,203 வாக்குகளும் 80வயதிற்கு மேற்பட்டவர்களின் வாக்குகள் ஆகும்.

தஞ்சை

தஞ்சை

நாகப்பட்டினத்தில் 26,635 வாக்குகளும், திருவாரூரில் 19,326 வாக்குகளும், தஞ்சாவூரில் 45,012 வாக்குகளும், புதுக்கோட்டையில் 25,616 வாக்குகளும், சிவகங்கையில் 28,855 வாக்குகளும், மதுரையில் 46,790 வாக்குகளும், தேனியில் 22,641 வாக்குகளும், விருதுநகரில் 28,092 வாக்குகளும் 80 வயதை கடந்தவர்களின் வாக்குகள் ஆகும்.

தென்காசி

தென்காசி

ராமநாதபுரத்தில் 20,972 வாக்குகளும், தூத்துக்குடியில் 29,511 வாக்குகளும், திருநெல்வேலியில் 36,700 வாக்குகளும், கன்னியாகுமரியில் 28,030 வாக்குகளும், அரியலூரில் 11,390 வாக்குகளும், திருப்பூரில் 61,272 வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 17,760 வாக்குகளும், தென்காசியில் 30,980 வாக்குகளும், செங்கல்பட்டில் 49,134 வாக்குகளும், திருப்பத்தூரில் 14,717 வாக்குகளும், ராணிப்பேட்டையில் 19,442 வாக்குகளும் 80 வயதை கடந்தவர்களின் வாக்குகள் ஆகும்.

ரயில்வே ஊழியர்கள்

ரயில்வே ஊழியர்கள்

தேர்தல் ஆணையம் வெளியிட்ட மேற்கண்ட பட்டியலில் உள்ள வாக்காளர்கள் விருப்பம் இருந்தால் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதவிர தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், காவல் அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பத்திரிக்கையார்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களும் தபால் வாக்குகள் அளிக்கப்போகிறார்கள். எனவே தபால் வாக்குகள் இந்த முறை வெற்றியை தீர்மானிக்கவும் வாய்ப்பு உள்ளது.

English summary
tamilnadu assembly election 2021; District wise details of voters above 80 years of age in Tamil Nadu. chennai have 1,08,718 postal votes of 80 plus age.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X