சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தீபாவளி.. சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, கோவைக்கு இன்று விமான கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இருந்து இன்று டெல்லிக்கு செல்லும் கட்டணத்தை விட மதுரைக்கு செல்லும் கட்டணம் அதிகமாக உள்ளது. இதேபோல் தூத்துக்குடி, கோவைக்கு செல்லும் விமானங்களின் கட்டணமும் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது

Recommended Video

    15 Seat தான் full ஆகுது | Koyambedu omni bus stand dull look | Oneindia Tamil

    சென்னையிலிருந்து மதுரை, கோயம்புத்தூர், மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு விமானத்தில் செல்ல ஒரு வழி கட்டணம் இந்த வாரத்தில் கடுமையாக உயர்ந்திருந்தது. இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாள் ஆன இன்று (வெள்ளிக்கிழமை) எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

    கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் மீண்டும் விமான பயணங்கள் தொடங்கப்பட்ட பின்னர் கட்டணங்கள் பெரிய அளவில் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    டெல்லி கட்டணம்

    டெல்லி கட்டணம்

    மதுரைக்கான விமான கட்டணம் இப்போது ரூ.4000ல் இருந்து ரூ .6,000க்கக்கு அதிகமாக உயர்ந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டியிருந்தது. மும்பைக்கு டிக்கெட் கட்டணம் ஆரம்பமே ரூ .4,900 ஆக உள்ளது, டெல்லிக்கு செல்ல ரூ .6,000 க்கும் அதிகமாக செலவாகும். முன்னதாக, டெல்லிக்கு விமானங்களுக்கான கட்டணம் ரூ .5,500 ஐ தாண்டியது இல்லை.

    கடந்த மாதம் ஏறியது

    கடந்த மாதம் ஏறியது

    இந்த வார தொடக்கத்தில் இருந்தே கட்டணம் மெதுவாக ஏறிக்கொண்டிருந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) உச்சத்தை எட்டியுள்ளது என பெரும்பாலான விமான அதிகாரிகள் தெரிவித்தனர். "டிமாண்ட் அதிகரித்துள்ளது. மக்கள் பயணத்திற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறி. பயணிகள் பெரும்பாலும் குடும்பம் மற்றும் உறவினர்களைப் பார்க்க செல்கிறார்கள். குறிப்பிட்ட அளவு சுற்றுலாப் பயணிகளும் செல்கிறார்கள், "என்று அவர்கள் கூறினார்கள்.

    சென்னையில் இருந்து அதிகம்

    சென்னையில் இருந்து அதிகம்

    கட்டணம் கடந்த மாதம் இருந்ததை விட இப்போது அதிகமாக உள்ளது. இக்ஸிகோவின் கூற்றுப்படி, சென்னையிலிருந்து கொல்கத்தா, பாட்னா, டெல்லி, வாரணாசி மற்றும் லக்னோ ஆகிய இடங்களுக்கு சராசரி ஒரு வழி கட்டணம் இந்த மாதத்தில் கடுமையாக அதிகரித்துள்ளது. மேலே சொன்னவைதான் சென்னையிலிருந்து தீபாவளிக்கு மக்கள் அதிகம் செல்லும் மிக பிரபலமான பாதைகளாகும்

    பட்னா கட்டணம்

    பட்னா கட்டணம்

    சென்னை-கொல்கத்தா பாதையில், சராசரி கட்டணம் அக்டோபரில் ரூ .3,551 லிருந்து நவம்பரில் ரூ .3,742 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் சென்னை-பாட்னாவுக்க ரூ .5,042 லிருந்து ரூ .6,441 ஆக உயர்ந்துள்ளது. டெல்லிக்கு செல்லும் விமானங்களின் டிக்கெட் விலை ரூ .5,166 லிருந்து ரூ .5,377 ஆக உயர்ந்தது.

    74 சதவீத முன்பதிவு

    74 சதவீத முன்பதிவு

    "கடந்த மூன்று வாரங்களில் பண்டிகை பயணத்திற்கான முன்கூட்டியே முன்பதிவு 40% அதிகரித்ததை கண்டோம். கோவா போன்ற ஓய்வு இடங்களும் இந்த மாதம் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரிலிருந்து அதிக அளவு மக்கள் செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள் . கோவாவுக்கான முன்பதிவு 74% அதிகரித்துள்ளது, "என்று இக்ஸிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான அலோக் பாஜ்பாய் கூறினார்.

    கடந்த ஆண்டு அதிகம்

    கடந்த ஆண்டு அதிகம்

    இருப்பினும், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ரயில்களில் பயணிப்பது மந்தமாக உள்ளது.. நாகர்கோயில் மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில்களுக்கான டிக்கெட்டுகள் தட்கலில் கிடைத்தன, அதே நேரத்தில் வழக்கமான முன்பதிவுக்கான காத்திருப்பு பட்டியல் சில ரயில்களில் 20 முதல் 50 வரை இருக்கும். வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து சிலம்பு எக்ஸ்பிரஸில் சுமார் 20 ஸ்லீப்பர் பெர்த்கள் இருப்பதாக காட்டியது. இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து செல்லும் பல ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதற்கு ஏற்றார்போல் டிக்கெட் முன்பதிவும் நேற்று நடந்தது.

    English summary
    Diwali : One-way fares for flights from Chennai to Madurai, Coimbatore, Mumbai, Delhi, Bengaluru were expensive to start with this week, but have reached an all-time high for travel on today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X