சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்களோடு தீபாவளி பர்ச்சேஸ் போறீங்களாண்ணே.. அப்ப கொஞ்சம் இங்க வாங்கண்ணே!

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. பலர் குடும்பத்தோடு துணி எடுக்க செல்ல திட்டமிட்டு இருப்பீர்கள். பிரபலமான ஜவுளி கடைகளில்தான் பலரும் துணி எடுக்க விரும்புவீர்கள் அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான்.

மக்களுக்கு ஜவுளிக்கடைகள் முடிந்த அளவு சேவைகளை தரமாக அளிக்கிறார்கள் என்றாலும் சில சேவை குறைபாடுகள் பிரபல ஜவுளி கடைகளில் இயல்பாக இருக்கின்றன. அதன் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பது பற்றித்தான் இப்போது சொல்லப்போகிறேன்.

தீபாவளி வந்தாலே போதும் எல்லாரும் புதிய துணி எடுத்தே ஆக வேண்டும் என்பது தமிழகத்தின் மரபு. வண்ண உடைகளை அணிந்து,பட்டாசு வெடித்து, தீபத்தை ஏற்றி வழிபடும் இந்த நல்ல நாள் எப்போது வரும் என்று பல குழந்தைகள் காத்திருக்கும்.

தீபாவளி பண்டிகை.. சென்னையில் 5 இடங்களில் சிறப்பு பேருந்து.. போக்குவரத்துத் துறை அமைச்சர் தீபாவளி பண்டிகை.. சென்னையில் 5 இடங்களில் சிறப்பு பேருந்து.. போக்குவரத்துத் துறை அமைச்சர்

நிற்ககூட இடமில்லை

நிற்ககூட இடமில்லை

எனவே இப்போதே பலரும் தீபாவளிக்கு துணி எடுக்க பிரபலமான ஜவுளிக்கடைகளை நோக்கி படை எடுத்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் பிரபலமான ஜவுளி கடைகள் மட்டுமல்ல, அந்த தெருவில் கூட நிற்பதற்கு மக்களுக்கு வழியில்லை. அவ்வளவு கூட்டம் வழிந்தோடுகிறது.

மதுரை விளக்குத்தூண்

மதுரை விளக்குத்தூண்

சென்னை ரங்கநாதன் தெருவாகட்டும், மதுரை விளக்குத்தூண் ஆகட்டும், கோவை உக்கடம் ஆகட்டும் எல்லா பகுதிகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. திருச்சி, நெல்லை, சேலம் என எல்லா ஊர்களிலும் இப்போதே கூட்டம் அலைமோதுகிறது.

உட்காரவும் வழியில்லை

உட்காரவும் வழியில்லை

தமிழகத்தின் பல பிரபலமான கடைகளில் மக்கள் ஒரு நிமிடம் கூட நிற்க முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதுகிறது. எனவே வயதானவர்கள், குழந்தைகள் பாதுகாப்பான இடங்களில் அமர்ந்து கொள்ளுங்கள். கடைகளில் ஓரத்தில் அமரலாம் என்றால் அதற்கும் வழியில்லை. ஏனெனில் எங்கும் நீக்கமற மக்கள் நிறைந்து இருக்கிறார்கள்.

சிலஇடங்களில் வசதி இருக்கு

சிலஇடங்களில் வசதி இருக்கு

ஒரு சில கடைகளில் மட்டுமே ஓய்வெடுக்கும் வசதி உள்ள அறைகளோ அல்லது சேர்களோ மக்களுக்கு போடப்படுகின்றன. மற்றபடி நின்று கொண்டேதான் இருக்க வேண்டும். நம்ம ஊரில் பெண்கள் ஜவுளிக்கடைகளுக்குள் சென்றால் எவ்வளவு நேரம் ஆகும் என்பது எல்லாருக்கும் தெரியும். எனவே ஜவுளி எடுக்க கூட தான் செல்கிறேன், என்று சொல்லும் ஆண்கள் கடையிலேயே சிறிது நேரம் அமர்ந்து ஓய்வு எடுக்க விரும்பினால் அதற்கு வாய்ப்பு இருக்காது.

வயதானவர்கள் வெளியில்

வயதானவர்கள் வெளியில்

மிகச்சிறிய குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், நடக்க முடியாதவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் ஜவளிக்கடைகளுக்குள் சென்றால் அவதிப்பட நேரிடும். எனவே கைக்குழந்தைகளை பாதுகாப்பாக கடைக்கு வெளியிலோ அல்லது பாதுகாப்பான இடத்திலோ அமர்ந்து கொள்வது நல்லது.

விலை எப்படி இருக்கு

விலை எப்படி இருக்கு

பெரும்பாலான ஜவுளிக்கடைகளில் விலை உயர்ந்த துணிகள் ஷோகேஸ்களிலும் 1000 ரூபாய்க்குள் உள்ள துணிகள் மக்களின் பார்வைக்கு ஆங்கர்களிலும் தொங்கவிடப்பட்டு இருக்கின்றன. எனவே உங்களின் பட்ஜெட்டை முடிவு செய்த துணி வாங்குங்கள். சூப்பராக தீபாவளியை கொண்டாடுங்கள்.

இனிமையான அனுபவம்

இனிமையான அனுபவம்

தீபாவளி நெருங்குவதால் ஜவுளி கடை நிறுவனங்கள் ஜவுளிக்கடைகள் மக்கள் ஓய்வெடுப்பதற்கான அறைகளையும், முடியாதவர்கள் அமர்ந்து கொள்வதற்கான அறைகளையும் ஏற்படுத்தி கொடுத்தால் நிச்சயம் உங்கள் கடைகளை மக்கள் மறக்க மாட்டார்கள். எனவே இந்த வசதியை செய்தால் ஜவுளி எடுப்பது என்பது மக்களுக்கு இனிமையான அனுபவமாக இருக்கும். இல்லாவிட்டால் கசப்பான அனுபவமாக மாறிவிடும். மத்தபடி ஜாலியா பர்ச்சேஸ் பண்ணிட்டு வாங்கண்ணே குடும்பத்தோட!

English summary
are you go to dress shopping for diwali, how can safely dress shopping in tamil nadu, read here
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X