• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தீபாவளியை முன்னிட்டு 2 நாட்களில் ரூ466 கோடிக்கு மது விற்பனை- மதுரையில்தான் கன ஜோர்!

|

சென்னை: தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் மட்டும் ரூ466 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

    வேலூர்: உலக நன்மைக்காக வேண்டி.. 10,008 நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு..!

    தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மது விற்பனைக்காக டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால் மதுபான கடைகளில் வழக்கமான நேரங்களைக் காட்டிலும் கூடுதல் விலைக்கும் மதுவிற்பனை தொடருகிறது.

    தீபாவளி கூட்டம்.. சென்னையில் இருந்து செல்லும் இந்த ரயில்களில் எல்லாம் கூடுதல் பெட்டிகள் இணைப்பு தீபாவளி கூட்டம்.. சென்னையில் இருந்து செல்லும் இந்த ரயில்களில் எல்லாம் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

    ரூ466 கோடிக்கு விற்பனை

    ரூ466 கோடிக்கு விற்பனை

    இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடப்பட்ட வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை 2 நாட்களில் மட்டும் ரூ466 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மதுரை மண்டலத்தில்தான் அதிகபட்சமாக ரூ103.82 கோடிக்கு மது விற்பனையானது.

    திருச்சியில் ரூ95.47 கோடி விற்பனை

    திருச்சியில் ரூ95.47 கோடி விற்பனை

    2-வது இடத்தில் திருச்சி மண்டலம் உள்ளது. திருச்சி மண்டலத்தில் மட்டும் ரூ95.47 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 3-வது இடத்தில் சென்னை மண்டலம் உள்ளது.

    சென்னையில் ரூ94.36 கோடி

    சென்னையில் ரூ94.36 கோடி

    சென்னை மண்டலத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ94.36 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டாஸ்மாக் மதுபான கடைகளில் 2 நாட்களில் ரூ455 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின.

    ரூ8 கோடி விற்பனை

    ரூ8 கோடி விற்பனை

    விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 222 டாஸ்மாக் அரசு மதுபானக் கடையில் நேற்று தீபாவளி பண்டிகையான ஒரே நாளில் சுமார் ரூ 8 கோடி ரூபாய் வரை மது விற்பனையாகி உள்ளது. முந்தைய நாளில் ரூ 5 கோடி மட்டுமே விற்பனையான நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை ரூ8 கோடிக்கு மது விற்பனையானது.

     
     
     
    English summary
    Tasmac shops had recorded Rs 466 cr sales ahead of Diwali in Tamilnadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X