• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பச்சை துரோகம்.. ஜெயலலிதா வீம்புக்கு செய்ததையே.. இப்ப ஓபிஎஸ் செய்தால்.. கி.வீரமணி எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு.. அன்று ஜெயலலிதா தன் வீம்புக்காக மாற்றி தவறு செய்தார், இதே தவறை தற்போது உள்ள அதிமுகவினர் செய்தால் இப்போதுள்ள நிலையை கூட அவர்களால் காப்பாற்றி கொள்ள முடியாது என்று திக தலைவர் கி.வீரமணி எச்சரித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் 89வது பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என். நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கி.வீரமணி பேசியபோது, "தந்தை பெரியார் வாழ்நாள் மாணவன் ஆகிய நான், பெரியார் லட்சியங்களை, அவர் விட்டு சென்ற பணிகளை தொடர வேண்டும் என்று நினைப்பவன் நான்.

MLA நிதி எங்கே? விசாரித்தால் இப்படி ஒரு தகவல் வருது எனக்கு; அரசு மீது எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்!MLA நிதி எங்கே? விசாரித்தால் இப்படி ஒரு தகவல் வருது எனக்கு; அரசு மீது எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்!

பெரியார்

பெரியார்

அந்த வகையில் பெரியார் அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று சொன்னதை இன்றைய ஆட்சி செயல்படுத்தி உள்ளது மகிழ்ச்சியை தருகிறது... ஒவ்வொரு நாளும் மக்களுக்கான ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.. எஞ்சி உள்ள என் வாழ்நாள் முழுவதும் சாதி ஒழிப்பு சட்ட திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பது, ஆட்சிக்கு அரணாக இருப்பது, ஆணவ கொலைகளை தடுக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது உட்பட 5 பணிகளை இந்த ஆண்டு மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம்.

 ஆதாரம்

ஆதாரம்

தமிழ்நாட்டில் பல நூற்றாண்டு காலமாக சித்திரை மாத பிறப்பு தான் தமிழ் புத்தாண்டு தினமாக தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது காலங்காலமாக கடைபிடிக்கப்படுகின்ற மரபு. இந்த மரபினை முற்றிலும் சீர்குலைக்கும் விதமாக எந்தவித வலுவான ஆதாரமும் இல்லாமல் மக்களின் உணர்வுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தை மாதத்தின் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு வழி வகை செய்யும் சட்டம் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் 2008-ம் ஆண்டு இயற்றப்பட்டது.

கலாச்சாரம்

கலாச்சாரம்

இந்த சட்டம் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு சட்டம். இந்த சட்டம் சாதாரண மனிதனின் உரிமையை பறிக்கும் சட்டம் என்று அப்போதே மக்கள் சொன்னார்கள். பண்டிகை என்பது இதுநாள் வரை கடைபிடித்து வந்த முறைப்படி மரபுப்படி கலாச்சாரத்தின் படி பழக்க வழக்கத்தின் படி கொண்டாடப்படுவது. இதற்கு எதற்கு சட்டம் இதில் ஏன் அரசு தலையிடுகிறது என்பது தான் மக்களின் வாதமாக இருந்தது. அதனால்தான் சட்டம் இயற்றப்படும் தமிழ்நாடு மக்கள் சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வந்தார்கள்.

 அறிக்கை

அறிக்கை

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்துள்ளார்.. ஓ.பன்னீர்செல்வம் இப்படி கூறி இருப்பது அண்ணாவுக்கு செய்யும் துரோகம்.. திராவிட கொள்கைக்கும் அண்ணாவிற்கும் சம்மந்தம் இல்லாமல் எப்படி பெயர் வைத்து உள்ளனர் என்பதற்கு இது ஒரு அடையாளம்.. கொள்கைகளை மறந்து விட்டு ஏற்கனவே செய்த தவறை மீண்டும் அவர்கள் செய்வது கண்டிக்கத்தக்கது.

 தவறு

தவறு

தமிழ் நாட்டில் தமிழ் திராவிட ஆட்சியில் தை 1ம் தேதி தான் தமிழ் புத்தாண்டு கொண்டாட வேண்டும்.. இதனை 1932ம் ஆண்டு தமிழர் அறிஞர்கள் ஒன்று கூடி முடிவு செய்தனர்.. இதனை தான் கலைஞர் கொண்டு வந்தார் அதனை ஜெயலலிதா தன் வீம்புகாக மாற்றி தவறு செய்தார்.. இதே தவறை தற்போது உள்ள அதிமுகவினர் செய்தால் தற்போது உள்ள நிலையை கூட அவர்களால் காப்பாற்றி கொள்ள முடியாது" என்றார்.

English summary
DK Leader K Veeramani says, Thai 1st is the Tamil new year and condemns ADMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X