திருமாவளவன் போல ஒரு தலைவர் கிடைக்க மாட்டார்.. எந்த சூழ்ச்சியும் அங்கே எடுபடாது.. கி.வீரமணி புகழாரம்
சென்னை: இன்றைய அரசியலில் அகில இந்திய அளவில் திரும்பி பார்க்க வைக்கும் தலைவர் தொல்.திருமாவளவன் என்றும், அவரை போல் ஒரு தலைவர் கிடைக்கமாட்டார் என்பதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விசிக தலைவருக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.
பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா சார்பில், விசிக தலைவர் திருமாவளவனுக்கு அவர்களுக்கு சமூக நீதிக்கான கி.வீரமணி விருது வழங்கப்பட்டது... இதற்கான விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது.

இந்த விருது வழங்கும் விழாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பினர் அமெரிக்காவில் இருந்து வீடியோ கான்பரஸ் மூலம் கலந்து கொண்டு உரையாற்றினர்... இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மற்றும் டாக்டர் மீனாம்பாள் ஆகியோர்' சமூக நீதிக்கான கி.வீரமணி விருதையும், ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையையும் திருமாவளவனுக்கு வழங்கினர்.
பின்னர் கி.வீரமணி பேசும்போது, "பெரியார் உடலால் தான் மறைந்தார்... ஆனால் கொள்கையால் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்... அவரது கொள்கைகளை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.. திராவிடர் கழகத்தின் உடன்பிறப்பாக தொல்.திருமாவளவன் செயல்பட்டு வருகிறார்... இன்றைய அரசியலில் அகில இந்திய அளவில் திரும்பி பார்க்க வைக்கும் தலைவர் தொல்.திருமாவளவன்.
"இந்துக்களை சாதியாக பிரித்தவர் கிருஷ்ண பகவான்".. கிறிஸ்துமஸ் விழாவில் திருமா. சர்ச்சை பேச்சு
மனு பிரச்சினையில் எதிரிகளை எதிர்த்து களத்தில் உறுதியாய் நின்றார் என்றால், அதற்கு காரணம் அவர் பயின்ற இடம்... பெரியார் திடலில் வளர்ந்த பிள்ளை திருமாவளவன். அரசியலில் திசை திருப்பலாம் என்று எத்தகைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் செய்தாலும் அது திருமாவளவனிடம் எடுபடாது... அவரது சமூகப் பணியை கவுரவிக்கும் விதமாக வழங்கப்படும் இந்த விருதிற்காக நாங்கள் பெருமை படுகிறோம்.
திருமாவளவன் போல் ஒரு தலைவர் கிடைக்கமாட்டார் என்பதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வருகின்ற தேர்தலில் அவரது பங்கு மிகமுக்கியமான ஒன்றாக இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.. சமூக நீதியை நிலைநாட்ட ஒவ்வொருவர் வீட்டிலும் அம்பேத்கர் பெரியார் படங்கள் இருக்க வேண்டும் என்று உறுதி ஏற்க வேண்டும்" என்றார்.