சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாரோ சொல்வதைக் கேட்டு தலையாட்டும் அளவுக்கா விஜயகாந்த் வீக்கா இருந்தாரு.. என்ன சொல்றீங்க மேடம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அம்மாவும் கேப்டனும் பிரிய அந்த 3 பேர்தான் காரணம்- பிரேமலதா அதிரடி- வீடியோ

    சென்னை: விஜயகாந்த் சட்டசபையில் நாக்கை துருத்தியதை பெருமையாகவும் கம்பீரமாகவும் கூறிக் கொண்டிருந்த பிரேமலதா இன்று இவ்வாறு ஜெயலலிதா கோபப்படும்படி பேச வைத்ததே திமுகதான் என தனது அரசியல் சுயலாபத்துக்காக மாற்றி பேசியுள்ளதை பார்த்து கேப்டனின் தீவிர தொண்டர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

    கருணாநிதிக்கு அடுத்து ஜெயலலிதாவை நேருக்கு நேர் எதிர்த்தவர்களில் முக்கியமானவர் விஜயகாந்த். கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்து திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற்றார்.

    கடந்த 2012-ஆம் ஆண்டு சட்டசபை கூட்டத்தில் நடந்த விவாதத்தின் போது அதிமுகவுடன் கூட்டணியில்லாமல் போட்டியிட திராணி உள்ளதா என்று அமைச்சர் ஒருவர் விஜயகாந்தை பார்த்து கேட்க சட்டசபையிலேயே ஜெயலலிதா முன்பு நாக்கை துருத்தி கண்டித்தார்.

    'பொள்ளாச்சி'யை புறம் தள்ளும் கொங்கு மண்டலம்.. எடப்பாடி ஆட்சி கவிழ கூடாது.. அணிவகுக்கும் தலைவர்கள்!'பொள்ளாச்சி'யை புறம் தள்ளும் கொங்கு மண்டலம்.. எடப்பாடி ஆட்சி கவிழ கூடாது.. அணிவகுக்கும் தலைவர்கள்!

    கண்டனம்

    கண்டனம்

    எத்தனை விவகாரங்களில் இது போல் ஜெயலலிதாவை அதிரடியாக எதிர்த்து பெருமைப்படவைத்தவர் விஜயகாந்த். இதை நேற்று வரை விஜயகாந்தின் குடும்பமும், அவரது தொண்டர்களும் கொண்டாடினர். இவ்வளவு ஏன் தங்கள் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக பிரதிநிதிகள் வந்ததாக திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து பிரேமலதா பிரஸ்மீட் வைத்தார்.

    விஜயகாந்த்

    விஜயகாந்த்

    அதில் அவர் கூறுகையில் தனித்து போட்டியிட எங்களுக்கு ஒரு பயமும் இல்லை. சட்டசபையில் ஜெயலலிதாவையே எதிர்த்தவர் விஜயகாந்த் என காலரை தூக்கிவிடாத குறையாக பிரேமலதா பெருமையாக கூறினார். ஆனால் அது வேற வாய், இது நாற வாய் போல் விருதுநகரில் பிரேமலதா விஜயகாந்த் நடந்து கொண்டார்.

    பிரேமலதா

    பிரேமலதா

    அதாவது சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு கோபம் வருகிற மாதிரியும் அதிமுக- தேமுதிக கூட்டணியில் பிளவு ஏற்படுத்துகிற மாதிரியும் விஜயகாந்த் நாக்கை துருத்திய சம்பவத்தை தூண்டிவிட்டது திமுகவின் சூழ்ச்சி என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

    பிரேமலதா நியாயமா

    பிரேமலதா நியாயமா

    இதை கேட்ட தொண்டர்களே அதிர்ச்சி அடைந்தனர். நேற்று வரை கம்பீர செயலாக இருந்த சம்பவம் இன்று சூழ்ச்சியாக மாறிவிட்டதா. விஜயகாந்த் மீது கட்சியை தாண்டி மக்களுக்கு பாசமும் நேசமும் உள்ளது. அப்படியிருக்கையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவினருக்கு ஐஸ் வைக்க ஒரு திராணியுள்ள தலைவரை, கருப்பு எம்ஜிஆர் என கட்சியினரால் வர்ணிக்கப்பட்ட தலைவரை யாரோ சொல்ல கேட்டு ஆடினார் என பிரேலமதா கூறுவது எந்தவகையில் நியாயம்.

    10 தொகுதிகளை ஒதுக்கியிருந்தா

    10 தொகுதிகளை ஒதுக்கியிருந்தா

    இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில் 4 தொகுதி கொடுத்ததுக்கே கேப்டன் மானத்தை கப்பலில் ஏற்றும் பிரேமலதா இன்னும் இவர்கள் கேட்டபடி 10 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியிருந்தால் என்னென்ன பேசியிருப்பாரோ!

    ஆச்சரியம்

    ஆச்சரியம்

    அடையாறு ஹோட்டலில் தொகுதி பங்கீட்டுக்கான ஒப்பந்தத்தில் விஜயகாந்தை அழைத்து வரும் போது கையை பிடித்து அழைத்து வந்த பிரேமலதாவும் சுதீஷும் கையெழுத்திட்டவுடன் அவரை அங்கேயே உட்கார்ந்திருப்பதை கூட மறந்து கிளம்ப முற்பட்டனர். அப்போது அதிமுக நிர்வாகிகள் அவர்களை அழைத்து விஜயகாந்தை அழைத்து வர சொன்னார். இப்படி விஜயகாந்தையே அவர்கள் மறந்த போது இப்படி பேசுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றனர்.

    English summary
    DMDK cadres makes disappointment over Premalatha's comment about Captain opposing Jayalalitha in Assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X