சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ம்ஹூம்.. கூட்டணியே வைத்தாலும் தேமுதிக ஜெயிக்காது.. சான்ஸே இல்லையாம்.. வாசகர்கள் தந்த சுவாரஸ்ய சர்வே

கூட்டணி வைத்தாலும் தேமுதிக ஜெயிக்காது என்று சர்வேயில் தெரியவந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: "கூட்டணியே வைத்தாலும் தேமுதிக ஜெயிக்க வாய்ப்பே இல்லை" என்று பெரும்பாலான வாசகர்கள் நெத்தியடியாக தங்கள் வாக்குகளை அழுத்தமாக பதிவு செய்துள்ளனர் நம்முடைய கருத்து கணிப்பில்!

தேமுதிகவை பொறுத்தவரை அது விஜயகாந்த்தின் கட்சியாகத்தான் ஆரம்பம் முதல் இப்போதுவரை பார்க்கப்படுகிறது.. மதிக்கப்படுகிறது.. முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.. அவர்தான் ஆதியும், அந்தமும்!

அப்படிப்பட்ட விஜயகாந்த்தே இன்று பலவீனமாகிவிட்டார்.. வீழ்ந்து கிடக்கும் தேமுதிகவை செங்குத்தாக தூக்கி நிறுத்த ஒருத்தரும் இதுவரை இல்லை என்பதே இந்த கட்சியின் ஆல் டைம் பலவீனம்!

வீல் சேரில் அமர்ந்து.. அப்படியே ரவுண்டடித்து சிரித்த அந்த சிரிப்பு... மறக்கமுடியாத எச். வசந்தகுமார்!வீல் சேரில் அமர்ந்து.. அப்படியே ரவுண்டடித்து சிரித்த அந்த சிரிப்பு... மறக்கமுடியாத எச். வசந்தகுமார்!

 விஜயகாந்த்

விஜயகாந்த்

இதுவரை நடந்த தேர்தல்களில் தேமுதிகவுக்கு விழுந்த ஓட்டுக்கள் எல்லாமே விஜயகாந்த் என்ற முகத்துக்காகத்தான்.. இதுவரை கூட்டணி பேரம் நடத்தப்பட்டு வந்தது எல்லாமே விஜயகாந்த் என்ற மனிதனின் மனசுக்காகத்தான்.. எங்கோ டெல்லியில், பாஜகவில் தேமுதிக என்ற பெயர் தெரிகிறது என்றால், அதுவும் விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதனுக்காகத்தான்!

 மாவட்ட செயலாளர்கள்

மாவட்ட செயலாளர்கள்

அவருக்கு பிறகு யாருமே அந்த கட்சியில் வலுவாக இல்லை.. பிரேமலதா, அவரது மகன்கள், சுதீஷ், இப்படி அந்த குடும்பத்தை தவிர, வேறு எந்த கட்சிக்காரரும் பெயரும் மக்களுக்கு தெரியாது.. மாவட்ட செயலாளர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் வரை யார் பெயரும் வெளியே தெரியாது.. அதேபோல, தேமுதிக மக்களை திரட்டி இதுவரை எந்த போராட்டத்தையும் நடத்தியதில்லை.. மக்களுக்கும், மண்ணுக்கும் உரிய பிரச்சனைகளை கையில் எடுத்ததில்லை, முக்கியமாக, தமிழகம் சந்தித்த எத்தனையோ பிரச்சனைகளில் மக்களுடன் மக்களாக தோள் கொடுத்தது இல்லை என்பதை ஓபனாக சொல்லியே ஆக வேண்டும்.

தேமுதிக

தேமுதிக

இப்போது அந்த கட்சி படுபாதாளத்தில் விழுந்துவிட்டது.. விழுந்து கிடக்கும் தேமுதிகவை தூக்கி நிறுத்த திரும்பவும் விஜயகாந்த்தான் தேவைப்படுகிறார் போல தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில், விஜயகாந்த் பிறந்த நாள் அன்று பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசும்போது, "தனித்து போட்டி" என்று சொல்லி உள்ளார். எந்த தைரியத்தில் அவர் இதை சொன்னார் என்று தெரியவில்லை.. இது கூட்டணிக்கான அஸ்திவாரமா? வேறு விஷயத்துக்கான பேரமா? என்றெல்லாம் தெரியவில்லை.

 தனித்து போட்டி

தனித்து போட்டி

ஒருவேளை திமுக, அதிமுக என 2 பக்கமும் சேர்ந்து கூட்டணிக்கு நூல் விடுகிறதா என்றும் தெரியவில்லை.. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், பிரேமலதா சொன்ன "தனித்து போட்டி" என்பதை முன்னிறுத்தி நம் வாசகர்களிடம் ஒரு கருத்து கணிப்பு போல நடத்தினோம்.. "தேமுதிக தனித்து போட்டியிட்டால் சட்டசபை தேர்தலில் வெல்லுமா?" என்று ஒரு கேள்வி கேட்டோம்.

 கூட்டணி

கூட்டணி

"கூட்டணியே வைத்தாலும் வெல்லாது" என்ற ஆப்ஷனுக்கு 55.98சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.. "நிச்சயம் வெல்லும்" என்ற ஆப்ஷனுக்கு 4.27 சதவீதம் பேரும், "பொறுத்திருந்து பார்ப்போம்" என்ற ஆப்ஷனுக்கு 3.53 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். "பழைய விஜயகாந்த் வந்தால் உண்டு" என்ற ஆப்ஷனுக்கு 36.22 சதவித ஓட்டுக்களும் பதிவாகி இருக்கின்றன.

 பலவீனம்

பலவீனம்

கூட்டணி வைத்தாலும் ஜெயிக்காது என்று 55.98 பேர் எடுத்த எடுப்பிலேயே பொசுக்கென்று சொல்லி விட்டனர்.. இது அக்கட்சியின் கடந்த 3 வருட கால பலவீனத்தையே துல்லியமாக எடுத்து காட்டுகிறது.. தேமுதிக தன்னை சரி செய்து கொள்ள வேண்டிய, மிக முக்கிய பொறுப்பில் உள்ளது என்பதையும், வாழ்வா, சாவா என்ற போராட்டத்தில் இருந்து தன்னை மீட்டெடுத்து கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் நிர்ப்பந்தத்திலும் உள்ளது என்பதையும் இந்த கணிப்பு எடுத்து காட்டுகிறது.

 விஜயகாந்த்

விஜயகாந்த்

"பழைய விஜயகாந்த் வந்தால் உண்டு" என்ற ஆப்ஷனுக்கு 36.22 சதவித ஓட்டுக்களும் பதிவாகி உள்ளது பெருத்த ஆச்சரியமாகவே உள்ளது.. தமிழக மக்கள் எப்போதுமே நன்றியை மறந்தவர்கள் கிடையாது.. இந்த கட்சியை உருவாக்கவும், வளர்க்கவும், விஜயகாந்த் அன்று பட்ட பாட்டையும் மக்கள் கண்கூடாக பார்த்தனர்.. விஜயகாந்தின் பரந்த மனசுக்கும், அவர் மீது மக்கள் இன்னமும் நம்பிக்கை இழக்கவில்லை என்பதையுமே இந்த வாக்கு பதிவு கணித்துள்ளது.

Recommended Video

    அன்புள்ள விஜயகாந்த்.. உங்களை ஏன் மக்களுக்கு இவ்வளவு பிடிச்சிருக்கு தெரியுமா?!
     மீண்டு வர வேண்டும்

    மீண்டு வர வேண்டும்

    அதாவது, விஜயகாந்த் பழைய உடல் வலிமையை பெற்று.. குடும்பத்தையும் ஒரு ஓரமாக தள்ளிவைத்துவிட்டு வந்தால் மட்டுமே தேமுதிக பழைய மாதிரி மிளிரும்.. புத்துயிர் பெறும்.. இல்லாவிட்டால், ஜெயலலிதா காலத்திலேயே காணாமல் போன கட்சி, அப்படியே தடம் தெரியாமல் கரைந்து போய்விடும் என்பதுதான் நிதர்சனம்!

    English summary
    dmdk cannot win polls if contest alone says opinion poll
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X