சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம்பிக்கையூட்டிய பிரேமலதா விஜயகாந்த்... உற்சாகத்தில் மாவட்டச் செயலாளர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி

    சென்னை: தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் வகையில் பிரேமலதா பேசியிருப்பது அவர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.

    உள்ளாட்சித்தேர்தல், கட்சி வளர்ச்சிப்பணிகள் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட்டது.

    அப்போது திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்பன உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஐடி துறையில் பணியிழப்பு.. எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்.. ஆலோசிக்க கோரிக்கைஐடி துறையில் பணியிழப்பு.. எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்.. ஆலோசிக்க கோரிக்கை

    சென்னையில் கூட்டம்

    சென்னையில் கூட்டம்

    சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சோர்ந்து காணப்பட்ட நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு மதிப்பான எண்ணிக்கையில் உரிய இடங்கள் அதிமுகவிடம் இருந்து பெறப்படும், அதைப்பற்றி கவலை வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

    களப்பணி

    களப்பணி

    மாவட்டச் செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகளை ஒருங்கிணைத்து உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்றும், சுணக்கம் இல்லாமல் களப்பணியாற்றி வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், எந்தெந்த நகராட்சிகள், பேரூராட்சிகள், தேமுதிகவுக்கு சாதகமாக இருக்கிறது என்பது பற்றியும் அவர் கேட்டதாக கூறப்படுகிறது.

    இரங்கல்

    இரங்கல்

    முன்னதாக கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் விஜயகாந்துடன் விக்ரவாண்டிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற தேமுதிக நிர்வாகி விபத்தில் உயிரிழந்ததற்கும் இரங்கல் வாசிக்கப்பட்டது.

    வலியுறுத்தல்

    வலியுறுத்தல்

    திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பது தேமுதிகவின் 5 தீர்மானங்களில் ஒன்றாகும். அதே போல் தமிழகம் முழுவதும் பழுதடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்ய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டணி தர்மம்

    கூட்டணி தர்மம்

    உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி தர்மத்தோடு பணியாற்ற வேண்டும், காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகம் முழுவதும் பயன்பாடற்ற ஆழ்துளை கினற்றை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    English summary
    dmdk district secretaries meeting passed 5 resolution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X