சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாமகவிடம் நிறைய பாடம் கற்க வேண்டும் தேமுதிக.. குறிப்பாக பிரேமலதா விஜயகாந்த்!

தேர்தல் அறிக்கையை தேமுதிக வெளியிடாதது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேமுதிக பாமகவிடம் நிறைய பாடம் கற்க வேண்டும்- வீடியோ

    சென்னை: எவ்வளவுதான் கேப்டனுக்காக தமிழக மக்கள் விட்டு கொடுத்து போவார்கள், எவ்வளவுதான் அவர் ஒருவருக்காக எல்லாவற்றையும் ஏற்று கொள்வார்கள்?

    தேர்தல் அறிக்கை என்பது, தேர்தலின்போது மக்களின் ஓட்டுகளை பெற மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம் என்று ஒரு அரசியல் கட்சி தேர்தலுக்கு முன்னர் தருகின்ற ஒரு உறுதிமொழி சாசனம். அதுமட்டுமில்லை...

    இந்த தேர்தல் அறிக்கை என்பதுதான் ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணியாகவும் விளங்குகிறது. அரசியல் கட்சிகள் எல்லாம் வாக்குறுதிகளை காப்பாற்றுகிறார்களோ இல்லையோ, தேர்தல் அறிக்கையை வெளியிடுவதை முக்கியமான அம்சமாக மட்டுமல்லாமல், கவுரவ பிரச்சனையாககூட கருதுகிறார்கள்.

     Exclusive: ராகுல் பிரதமராவதில் ப.சிதம்பரத்திற்கு விருப்பமே இல்லை.. சுதர்சன நாச்சியப்பன் பேட்டி Exclusive: ராகுல் பிரதமராவதில் ப.சிதம்பரத்திற்கு விருப்பமே இல்லை.. சுதர்சன நாச்சியப்பன் பேட்டி

    ஆவல்

    ஆவல்

    ஆனால் இப்படி எதுவுமே தேமுதிகவுக்கு இல்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருகாலத்தில் தேமுதிகவின் தேர்தல் அறிக்கை என்பது ரொம்ப பிரபலம். அனைத்து தரப்பு மக்களும் விஜயகாந்த் வெளியிடும் தேர்தல் அறிக்கையை பார்க்க ஆவலாக இருப்பார்கள். குறிப்பாக ரேஷன் பொருட்கள் எல்லாம் வீடு தேடி வரும் என்று சொன்னதை இன்னும் யாராலும் மறக்க முடியாது.

    ஏன் வெளியிடவில்லை?

    ஏன் வெளியிடவில்லை?

    அப்படிப்பட்ட ஒரு கட்சி இன்றைக்கு எதற்காக தேர்தல் அறிக்கை வெளியிடவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. எல்லாவற்றிலும் தனக்கு போட்டியாக நினைத்த, பாமகவை இதிலும் போட்டியாக தேமுதிக நினைத்து கொள்ள வேண்டியதுதானே? "நாங்க என்ன பாமகவைவிட சளைத்தவர்களா? எங்களுக்கும் வட மாவட்டத்தில் செல்வாக்கு இருக்கு, நாங்க ஒரு காலத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்தவர்கள்" என்று இப்படி சொல்லி சொல்லியே ஒரு மாசம் கூட்டணி மற்றும் சீட் விஷயத்தில் காலங்கடத்தி கறார் காட்டியவர்கள், தேர்தல் அறிக்கையை மட்டும் ஏன் வெளியிடவில்லை.

    பாமக பலம்

    பாமக பலம்

    7 தொகுதியே என்றாலும் பாமக தேர்தல் அறிக்கை வெளியிடவில்லையா? அந்த தேர்தல் அறிக்கையில் ஒரு கட்சியின் பலம் தென்படுகிறது. அதுகூட வேணாம்.. இன்றைக்கு கட்சி ஆரம்பித்த கமல் தேர்தல் அறிக்கை வெளியிடவில்லையா?

    சுதீஷ், பிரேமலதா

    சுதீஷ், பிரேமலதா

    ஏற்கனவே தேமுதிக வலிமை இழந்து உள்ளது, தொண்டர்கள், நிர்வாகிகள் பலம் குறைந்துள்ளது, இதில் சுதீஷ், பிரேமலதா செய்த கூட்டணி சமாச்சாரத்தில் விஜயகாந்த்துக்கு இருந்த நல்ல பெயரையும் கெடுத்து மானத்தை விட்டார்கள். போதாக்குறைக்கு அவரது மகனின் வாய் காது தூரம் நீள்கிறது.

    கவலை

    கவலை

    இதில் விஜயகாந்த் இன்னும் மக்களை சந்தித்து பேச முடியாத நிலை. அவர் உடல்நிலை எப்படி இருக்கிறது என்றுகூட தெரிந்து கொள்ள நம்மால் முடியவில்லை. இன்னமும் அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் விஜயகாந்த்தை நேசிக்கிறார்கள். அதனால்தான் அக்கட்சி ஒரு தேர்தல் அறிக்கையைகூட வெளியிடவில்லையே என கவலைப்படுகிறார்கள்.

    4 தொகுதிகள்

    4 தொகுதிகள்

    இப்படி ஒரேயடியாக தேர்தல் அறிக்கையை புறக்கணித்தால் மக்கள் என்ன நினைப்பார்கள்? கட்சிக்கு எப்படி குறைந்தபட்ச ஓட்டுக்களாவது விழும்? எதை நம்பி வாக்களிப்பார்கள்? இருக்கும் 4 தொகுதிகளில்2 பேர் அறிமுகமானவர்கள், 2 பேர் புது வேட்பாளர்கள். ஏற்கனவே தேமுதிக கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கிறது.. இப்போதும் அதே நிலை தொடர்கிறது... இதற்கு காரணம் வேறு கட்சிகளோ, நபர்களோ இல்லை.. சாட்சாத் தேமுதிகவேதான்!

    English summary
    DMK has not released the election Manifesto. This is a big shock for the Tamil people and the party is losing its influence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X