சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாயை விட்டே கேட்டு விட்ட பிரேமலதா.. முடிவு எடப்பாடியார் கையில்.. திமுக டோன்ட் கேர்.. பரிதாபம்தான்!

41 சீட்டுக்கள் தேவை என்று பிரேமலதா கோரிகை விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: ஏற்கனவே பாமக ஒரு பக்கம் குடைச்சல் தந்து வரும் நிலையில், மிகப்பெரிய சிக்கலை எடப்பாடியாருக்கு தேமுதிகவும் ஏற்படுத்தி உள்ளது.. அதிமுகவிடம் 41 சீட் கேட்டிருக்காம் தேமுதிக.!

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை கூட்டணி சிக்கல் பெரும் சிக்கலாகி வருகிறது.. திமுகவும், அதிமுகவும் இதுவரை கூட்டணியை முடிவு செய்யாமல் உள்ளனர்..

முதன்முதலில் அதிமுகவில் கூட்டணி விஷயத்தை பாஜகதான் ஆரம்பித்தது.. இப்போது அந்த கட்சிக்கு எத்தனை சீட் தரப்படும் என்று தெரியவில்லை, ஆனால் 60 சீட் கேட்டார்கள், பிறகு 50 என்றார்கள்.. இன்னும் முடிவு தெரியவில்லை.

 60 சீட்?

60 சீட்?

பாஜக 60 சீட் கேட்கும்போதே தங்களுக்கு 41 சீட் வேண்டும் என்று கேட்டார் பிரேமலதா.. இல்லையென்றால் சிங்கம் சிங்கிளாக போட்டியிடவும் தயங்காது என்றர்.. ஆனால் இதையும் அதிமுக கண்டுகொள்ளவில்லை.. இப்போதுவரை கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கவில்லை என்று பிரேமலதா குற்றஞ்சாட்டினார்.

சசிகலா

சசிகலா

இதைத்தவிர, திமுகவுடன் மறைமுக பேச்சுவார்த்தை, சசிகலாவுக்கு ஆதரவு என மேலும் அதிமுக தரப்பை சூடேற்றி கொண்டே வந்தது தேமுதிக.. இந்நிலையில், மீண்டும் அதே 41 சீட் வேண்டும் என்று கேட்டுள்ளார் பிரேமலதா.. இவ்வளவுநாள் செய்தியாளர்களிடம் சொல்லி கொண்டிருந்தவர் இப்போது கோரிக்கையாகவே அதிமுகவிடம் வெளிப்படுத்தி உள்ளார்.. ஆனால், இதற்கும் அதிமுக செவிசாய்க்குமா என்பது தெரியவில்லை.

இழுபறி

இழுபறி

ஏற்கனவே பாமகவுடன் இழுபறியில் உள்ளது.. ராமதாஸ் மறுபடியும் போராட்டம் செய்யபோவதாக சொல்லி விட்டார்.. தேமுதிகவே இவ்வளவு கேட்டால், பாமகவுக்கு எத்தனை சீட் அதிமுக தரும் என்று தெரியவில்லை.. அப்படியே பாமகவும் நெருக்கடி தந்துவிட்டால், அதிமுகவுக்கு சீட் இருக்காது. அதுமட்டுமல்ல, அதிமுகவால் அத்தனை சீட் தர முடியாது என்ற யதார்த்தத்தை தெரிந்திருந்தும் பிரேமலதா ஏன் 41 சீட்டிலேயே உறுதியாக நிற்கிறார்?

அதிமுக

அதிமுக

ஒருவேளை திமுகவுடன் கூட்டணி வைக்க போகிறாரா? அல்லது வேறு ஏதேனும் முடிவில் இருக்கிறாரா? தெரியவில்லை. எந்த முடிவாக இருந்தாலும் சரி, அதிமுகவுடன் இந்த முறை தேமுதிக இணைவது கஷ்டம்தான். ஏற்கனவே பல சிக்கல்களில் எடப்பாடியார் உள்ளபோது, கூட்டணி விஷயத்தில் ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடி காட்டும் வாய்ப்பே அதிகம் என்று தெரிகிறது..

தேர்தல்

தேர்தல்

அதாவது, தங்களுக்கு உடன்படுகிற கட்சிகளை மட்டும் இணைத்து கொண்டு, சீட்டுகளையும் அவர்களுக்கு தாராளமாக அள்ளி தந்துவிட்டு, ஒத்து வராத கட்சிகளை கழட்டிவிட்டு தேர்தலை சந்திப்பதுதான் ஜெ.வின் பாணி.. போகிற போக்கை பார்த்தால் எடப்பாடியாரும் அதையேதான் கையில் எடுப்பார் போல தெரிகிறது. ஒருவேளை திமுகவுக்கு சென்று இதே போல 41 சீட் கேட்டாலும், அவர்களும் இவ்வளவு தரும் நிலையில் இல்லை.. தேமுதிக யாருடன் என்பது இனிதான் தெரியும்..!

English summary
DMDK expects 41 seats in AIADMK Allaince
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X