சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகத் தமிழர்களை பெருமைப்படுத்திவிட்டார் பிரதமர் மோடி: விஜயகாந்த் பாராட்டு

Google Oneindia Tamil News

சென்னை: சீனா அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பின் போது தமிழர் உடை அணிந்து, தமிழக உணவை உண்டு உலகத் தமிழர்களை பெருமைப்படுத்தினார் பிரதமர் மோடி என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கை:

DMDK General Secretary vijayakanth hails PM Modi

பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் சீன அதிபருடன் இரண்டு நாட்களாக தங்கியிருந்து , தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து, தமிழக உணவை உண்டு, தமிழகத்தின் பெருமைகளையும் , மாமல்லபுரம் சிற்ப கலைகள் குறித்தும், தமிழகத்திற்கும் சீனாவுக்கும் இடையே இருந்த பண்டையகால நட்பு குறித்தும் விளக்கி, அதை மீண்டும் புதுப்பித்து, இரு நாட்டு உறவையும் பலப்படுத்தி, உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனத்தை ஈர்த்தது மிகவும் பாராட்டுக்குரியது.

அதேபோல, இன்று காலையில் நடைபயிற்சியின் போது, கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி, தூய்மையான இந்தியாவை உருவாக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது.

ஜின்பிங்-மோடி சந்திப்பில் நேற்று அசத்திய மதுசூதன் ரவீந்தரன்.. இன்று காணோமே!ஜின்பிங்-மோடி சந்திப்பில் நேற்று அசத்திய மதுசூதன் ரவீந்தரன்.. இன்று காணோமே!

இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

English summary
DMDK General Secretary Vijayakanth issued a statement on PM Modi- Chinese President Xi Jinping Meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X