சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப். 25 முதல் விருப்பமனு அளிக்கலாம்...தேமுதிக அறிவிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் தமிழகம் புதுவையில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25-ம் தேதி முதல் விருப்பமனு அளிக்கலாம் என்று தேமுதிக கூறியுள்ளது.

Recommended Video

    சென்னை: நாங்களும் தொடங்கிவிட்டோம்... பிப். 25 முதல் தேமுதிக விருப்பமனு!

    பிப்ரவரி.25-ம் தேதி காலை 10 மணி முதல் மார்ச் 3-ம் தேதி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்கிறதா? தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    களைகட்டியுள்ள தேர்தல்

    களைகட்டியுள்ள தேர்தல்

    தமிழக சட்டசபை தேர்தல் களைகட்டியுள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணியையும் இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவது தெரிந்த ஒன்றுதான். வி.சி.,க. இடது சாரி உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெரும் என தெரிகிறது.

    பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு

    பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு

    அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக, தேமுதிக கூடுதல் சீட் கேட்டு காத்திருக்கின்றன. பாமக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற ஆயுதத்தை கையில் எடுத்தது. பாமகவுடன், தமிழக அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    தேமுதிக முடிவு என்ன

    தேமுதிக முடிவு என்ன

    தேமுதிகவின் நிலைமைதான் மிகவும் சிக்கலாக உள்ளது. அதிமுகவிடம் நிறைய தொகுதிகள் கேட்டுள்ளது தேமுதிக. அதிமுக கேட்ட தொகுதிகளை தராவிட்டால் திமுக பக்கம் செல்ல உள்ளதாக கூறப்பட்டது. இதனை முன்னிறுத்தும் விதமாக பிரேமலதா விஜயகாந்த் அதிமுகவை அவ்வப்போது தாக்கி பேசி வந்தார். மேலும் அவர் சசிகலாவுக்கும் ஆதரவு தெரிவித்து வந்தார்.

    விருப்பமனு அளிக்கலாம்

    விருப்பமனு அளிக்கலாம்

    தேமுதிக அதிமுக கூட்டணியில் இருக்கிறதா? தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? என்பது இன்னும் தெரியாத நிலையில் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.25 முதல் விருப்பமனு அளிக்கலாம் என்று தேமுதிக கூறியுள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    விருப்பமனு கட்டணம் எவ்வளவு?

    விருப்பமனு கட்டணம் எவ்வளவு?

    சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் தமிழகம் புதுவையில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25-ம் தேதி முதல் விருப்பமனு அளிக்கலாம். பிப்ரவரி.25-ம் தேதி காலை 10 மணி முதல் மார்ச் 3-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்கலாம். தமிழகத்தில் விருப்ப மனு கட்டணமாக பொதுத்தொகுதிக்கு ரூ.15 ஆயிரம், தனித்தொகுதிக்கு ரூ.10,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதுவையில் விருப்ப மனு கட்டணமாக பொதுத்தொகுதிக்கு ரூ.10 ஆயிரம், தனித்தொகுதிக்கு ரூ.5,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    dmdk has said that Those who wish to contest in the assembly elections on behalf of dmdk in puducherry, Tamil Nadu can submit their first nomination from February 25 till March 3
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X