சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மனு தர வரல.. கேப்டனை பாக்கதான் வந்தேன்.. கண்ணீர் விட்ட நிர்வாகி.. எமோஷனல் ஆன விஜயகாந்த்!

தேமுதிக சார்பாக நடைபெற்ற நேர்காணலில் விஜயகாந்த் பங்கேற்றார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கேப்டனை பாக்கதான் வந்தேன்... நிர்வாகியின் பதிலால் கண்ணீர் விட்ட விஜயகாந்த்- வீடியோ

    சென்னை: ரொம்ப நாளைக்கு பிறகு விஜயகாந்த்தை நிர்வாகிகள் நேரில் பார்த்து ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு போய்விட்டனர். அதை பார்த்து கேப்டனும் எமோஷனல் ஆகிவிட்டார்!

    மற்ற கட்சிகளை போலவே தேமுதிகவும் தீவிர தேர்தல் பணியில் இறங்கிவிட்டது. இதற்கான நேர்காணல்கூட நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    வீட்டுக்கு பக்கமாக இருப்பதால் கோயம்பேடு தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த்தால் வர முடிகிறது. அப்படித்தான் நேற்று நேர்காணலுக்கு வந்திருந்தார். அவர் தலைமையில்தான் நேர்காணலும் நடந்தது.

    கள்ளக்குறிச்சி எனக்குத்தான்.. இல்லை எனக்குத்தான்.. முட்டி மோதும் பாமக, தேமுதிக. குழப்பத்தில் அதிமுக கள்ளக்குறிச்சி எனக்குத்தான்.. இல்லை எனக்குத்தான்.. முட்டி மோதும் பாமக, தேமுதிக. குழப்பத்தில் அதிமுக

    பிரேமலதா

    பிரேமலதா

    அந்த நேர்காணல் அறையில் நடுவில் கட்சி நிறுவனர் கேப்டன் உட்கார்ந்திருக்க, அவருக்கு இருபுறமும் நேர்காணல் குழுவினர் உட்கார்ந்திருந்தனர். அதில் சுதீஷ் பங்கேற்றிருந்தார். ஆனால் பிரேமலதா விஜயகாந்த் நெல்லை கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தாராம்.

    பணம் செலவு

    பணம் செலவு

    ஒவ்வொருவராக விருப்ப மனுக்களை அளித்தனர். அப்போது நீண்ட நாள் கழித்து கேப்டனை நிர்வாகிகள் ஆர்வத்துடன் பார்த்தனர். அவர்களிடம் விஜயகாந்த்தால் எதுவுமே பேச முடியவில்லை போல் தெரிகிறது. எலக்‌ஷனுக்கு எவ்வளவு பணம் செலவு செய்வீர்கள் என்று கைவிரலை சுண்டிதான் கேள்வி கேட்டார்.

    ஆதங்கம்

    ஆதங்கம்

    அதற்கு நிர்வாகிகள் பதில் அளித்தாலும் வாய் திறந்துகேப்டன் பேசமுடியவில்லையே ஆதங்கப்பட்டனர். நிர்வாகிகளில் நன்கு பரிச்சயமானவர்களை பார்த்ததும் முகம் பிரகாசமாகி ஏதோ பேச முயன்றார். ஆனால் அது என்னவென்றுதான் அவர்களுக்கு புரியவில்லை.

    வேட்புமனு

    வேட்புமனு

    இதில், மற்றொரு சம்பவம் என்னவென்றால், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி என்பவர் நெல்லை தொகுதியில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்திருந்தார். நேர்காணல் அறைக்கு சென்ற அவரிடம், தொகுதியின் வெற்றி வாய்ப்பு எப்படி என்று குழுவினர் கேள்வி கேட்டனர்.

    கண்கலங்கினார்

    கண்கலங்கினார்

    அதற்கு ஆனந்தமணி, ‘நான் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்யவில்லை. கேப்டனை பார்க்கத்தான் வந்தேன்" என்றார். இதைக் கேட்டதும் விஜயகாந்த், கண் கலங்கிவிட்டார். பிறகு நிர்வாகியை பார்த்து பாசமுடன் சிரித்தார்.

    எங்க ஆசை

    எப்படியோ, விஜயகாந்தை ஆசை தீர நேரில் பார்த்த இந்த நேர்காணல் மூலமாக கட்சி நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால் எல்லோரும் நேர்காணலில் கேப்டனிடம் சொல்லிவிட்டு போனது என்ன தெரியுமா? "கேப்டன்.. நீங்க ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடணும், இதுதான் எங்களுக்கு ஆசை" என்பதுதான்!

    English summary
    Vijayakanth Kept Interview For Cadres in DMDK Head Office
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X