சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 தொகுதி இடைத்தேர்தல்.. அதிமுக வேட்பாளரை எதிர்க்குமா தேமுதிக..நூல் விட்டுப் பார்க்கும் விஜயபிரபாகரன்

Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் | Nanguneri By Election

    சென்னை: விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசியுள்ளதை பார்க்கும் போது இடைத்தேர்தலில் அதிமுக நிறுத்தும் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் எண்ணத்தில் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் வேண்டா வெறுப்பாக கூட்டணி வைத்தார் விஜயகாந்த். அப்போது கூட்டணியில் இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். எனினும் ஜெயலலிதாவையே எதிர்த்து அந்த கூட்டணியிலிருந்து விஜயகாந்த் வெளியேறினார்.

    இதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் ஜெயலலிதாவை எதிர்த்து பிரச்சாரம் செய்தார் விஜயகாந்த்.

    பல மில்லியன் செலவழித்தும் மக்கள் வரலியே.. ஹவுடி மோடி பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கடுகடுப்புபல மில்லியன் செலவழித்தும் மக்கள் வரலியே.. ஹவுடி மோடி பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கடுகடுப்பு

    வாய்ப்பு

    வாய்ப்பு

    தவறு என்றால் கூட்டணி கட்சியாக இருந்தாலும் தட்டி கேட்டதால் விஜயகாந்த் தனித்து காணப்பட்டார். எனினும் அடுத்தடுத்த தேர்தல்களில் கூட்டணியை சரிவர அமைத்து கொள்ளாததால் அவர் வெற்றி வாய்ப்புகளை இழந்ததாக கூறப்படுகிறது.

    வீடு தேடி

    வீடு தேடி

    இந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் நிலைப்பாடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அவரை அதிமுகவும் திமுகவும் கூட்டணிக்கு அழைத்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்த பாஜகவும் தேமுதிகவை கொக்கி போட்டு இழுப்பதற்காக விஜயகாந்தின் வீடு தேடி சென்றார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

    கூட்டணி

    கூட்டணி

    எனினும் தொகுதி பங்கீட்டு எண்ணிக்கையில் தேமுதிக அதிருப்தி என்பதால் திமுகவுக்கு செல்ல முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகின. இறுதியில் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுகவில் கொடுக்கப்பட்ட 4 சீட்டுகளுக்காக அவர்களுடன் கூட்டணி வைத்தார்.

    இடைத்தேர்தல்

    இடைத்தேர்தல்

    இந்த நிலையில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலையில் ராஜ்யசபா எம்பிக்காக தேமுதிக அதிமுகவிடம் முட்டி மோதியதாக கூறப்பட்டது. ஆனால் அது கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    கேள்வி

    கேள்வி

    இதுகுறித்து விஜய பிரபாகரன் தனது பேட்டியில் கூறுகையில், தேமுதிக தலைமை கூறினால் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என தனது எம்எல்ஏ ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக எப்படி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    போட்டி

    போட்டி

    ஏற்கனவே நடந்த 22 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கே தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் தற்போது இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் தேமுதிக போட்டியிட விரும்புவதாக விஜய பிரபாகரனின் பேச்சு உள்ளது. எனவே அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறினால் மட்டுமே அது நடக்கும். ஏனெனில் அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெறப்பட்டுள்ளது.

    சர்ச்சை

    சர்ச்சை

    தேர்தலில் போட்டியிடுவது என்ற ஆசையை வெளிப்படுத்திய அதே வேளையில் அதிமுகவை உச்சி குளிரும் அளவுக்கு பேனர் கருத்து குறித்தும் விஜய பிரபாகரன் கூறியுள்ளார். அதாவது அதிமுக வைத்த பேனர் என்பதால்தான் உயிரிழப்பு சர்ச்சையானது. தனியார் பேனர் என்றால் சர்ச்சையாகியிருக்காது என கூறியிருந்தார்.

    ஏன் இந்த கருத்து

    ஏன் இந்த கருத்து

    முதலில் ஐஸை வைத்துவிட்டு தேமுதிகவுக்கு வாய்ப்பளிப்பது குறித்து அதிமுகவிடம் நூல் விட்டு பார்க்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மேலும் அதிமுக வேட்பாளரை எதிர்த்து தேமுதிக வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் இது போன்ற எண்ணத்தை முன்னரே அதிமுகவிடம் பேசாமல் கடைசி நேரத்தில் தேமுதிக பேசியது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    English summary
    On observing Vijaya Prabhakaran's statement regarding to contest in byelections, is DMDK going to contest against to ADMK candidate?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X