சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஜயகாந்த்துக்கு என்னாச்சு.. எழுந்து நிற்க முடியாமல்.. தடுமாறி விழுந்ததால் பரபரப்பு!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது

Google Oneindia Tamil News

Recommended Video

    விஜயகாந்த்துக்கு என்னாச்சு.. எழுந்து நிற்க முடியாமல்.. தடுமாறி விழுந்ததால் பரபரப்பு! -வீடியோ

    சென்னை: என்ன ஆச்சோ தெரியவில்லை.. நலத்திட்ட உதவிகளை வழங்க சேரில் இருந்து எழுந்து நிற்க முயன்றார் விஜயகாந்த்.. ஆனால் எழுந்து நிற்க முடியாமல் தடுமாறி விழுந்து விட்டார்.

    இப்போதெல்லாம் விஜயகாந்த்துக்கு 2 பேர் எப்பவுமே கூடவே இருக்கவேண்டும். அவர் நடந்து வந்தாலும் சரி, எழுந்து நிற்பதானாலும் சரி.. ஆளுக்கு ஒரு பக்கம் கைத்தாங்கலாக பிடித்தே இருந்தால்தான் அவரால் எதுவும் செய்ய முடியும் என்ற உடல்நிலை உள்ளது. சில தினங்களுக்கு முன்பு அத்திவரதரை தரிசிக்க வரும்போது, விஜயகாந்த்தை அப்படிதான் அழைத்து வந்திருந்தனர்.

    இந்நிலையில், இன்று விஜயகாந்த்துக்கு பிறந்த நாள். வழக்கமாக விஜயகாந்த் தன்னுடைய பிறந்த நாளுக்கு ஏராளமான உதவிகளையும், நலத்திட்டங்களையும் செய்வார். இது அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே செய்து வருகிறார். இதனால் பலன் அடைந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் என்பதை ஒருக்காலும் மறுக்கவே முடியாது.

    வறுமை ஒழிப்பு தினம்

    வறுமை ஒழிப்பு தினம்

    அரசியலுக்கு வந்தபிறகு, தன்னுடைய பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுவார் விஜயகாந்த். அதன்பேரில்தான் இந்த உதவிகளை செய்து வருகிறார். செய்வார். இன்றும்கூட தனது பிறந்த நாளுக்கு கட்சி அலுவலகத்திற்கு தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்திருந்தார். வழக்கம்போல, பிரேமலதாவும், சுதீஷூம் உடன் வந்திருந்தனர்.

    விழுந்துவிட்டார்

    விழுந்துவிட்டார்

    அலுவலகத்தில் திரண்டு வந்திருந்தவர்களுக்கு விஜயகாந்த் நலத்திட்ட உதவிகள் வழங்க எழுந்து நின்றார். ஆனால் யாருமே அவருக்கு உதவாத காரணத்தினாலோ என்னவோ, திடீரென ஸ்லிப் ஆகி விழுந்துவிட்டார். இதை பார்த்து, அங்கிருந்த எல்லோருமே இதனால் பதைபதைத்து விட்டனர்.

    சுதாரித்து கொண்டார்

    சுதாரித்து கொண்டார்

    பிறகு உடனடியாக பக்கத்தில் நின்று கொண்டிருந்த பிரேமலதாவும், பார்த்தசாரதியும் அவரை தூக்கி விட்டனர். விஜயகாந்தும், உடனே சுதாரித்துகொண்டு, வழக்கமான சிரிப்புடன் தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். தொடர்ந்து தனது கையாலேயே நலத்திட்ட உதவியையும் அளித்தார்.

    ஹேப்பி பர்த்டே

    ஹேப்பி பர்த்டே

    இருந்தாலும், எப்படியெல்லாம் பார்த்து பூரித்து போன கேப்டனை இப்படிப் பார்த்ததும், தொண்டர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துவிட்டனர். எப்போதாவதுதான் தலைவரை பார்க்க முடியும் சூழலில், உடல்நிலை இப்படி உள்ளதே என்று சிலர் கண்கலங்கியும் விட்டனர். ஆனால் விஜயகாந்த் சீக்கிரமாகவே குணமடைந்து நம் முன்னால் பழையபடி வரவேண்டும் என்பது தொண்டர்கள், ரசிகர்களின் விருப்பம் மட்டும் அல்ல.. தமிழக மக்களின் ஆசையும்கூட.. ஹேப்பி பர்த்டே கேப்டன்!

    English summary
    DMDK Leader Vijayakanths birthday today and he offered many welfare assistance at the party office today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X