சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதா

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா நடிகராக இருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கிய விஜயகாந்த் எம்எல்ஏ, எதிர்கட்சித்தலைவர் என அடுத்தடுத்த உயரம் தொட்டார். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் தேமுதிக தலைமையில் மக்கள் நலக்கூட்டணி உருவானது. விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அந்த கூட்டணி வேட்பாளர் டெபாசிட் இழந்து தோல்வியடைந்தனர்.

DMDK leader Vijaykanth affect corona - hospital treatment

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகாலமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஓய்வில் இருக்கிறார் விஜயகாந்த். கட்சி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கு கொண்டு போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார். சமீபத்தில் பிறந்தநாள், தேமுதிக கட்சி தொடக்க நாளில் நடைபெற்ற விழாக்களில் விஜயகாந்த் பங்கேற்றார்.

இந்த நிலையில் விஜயகாந்த் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையின் முடிவில் விஜயகாந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 கொரோனா பாதித்த மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம் கொரோனா பாதித்த மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
DMDK leader Vijaykanth affected corona - hospital treatment
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X