சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேமுதிக டோட்டல் வேஸ்ட்.. ஒரு தொகுதியிலும் முன்னிலை இல்லை.. தொண்டர்கள் கடும் அப்செட்!

போட்டியிட்ட நான்கு தொகுதியிலும் தேமுதிகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    lok sabha election results 2019: விஜயகாந்தின் மைத்துனர் எல்கே சுதீஷ் சுமார் தோல்வி முகத்தில் உள்ளார்

    சென்னை: போட்டியிட்ட 4 தொகுதிகளில் ஒன்றில்கூட தேமுதிக முன்னிலை இல்லையாம். எல்லா இடங்களிலும் பின்னடைவு என்ற தகவல் வெளிவந்து கொண்டுள்ளது.

    பாமகவோடு ஒப்பிட்டு தேமுதிக சீட் அதிகமாக கேட்டபோதே கூட்டணி தலைமை யோசித்தது. "நாங்கள் மட்டும் என்ன அவங்களுக்கு சளைத்தவர்களா என்று விட்டு கொடுக்காமல் பேரத்தை நடத்திய போதும், தேமுதிகவை கொஞ்சம் தள்ளியே வைத்தது அதிமுக.

    பாஜக தலைமையின் ரெகமண்டேஷனை மறுக்க முடியாமல் தேமுதிகவுக்கு சீட் தந்தது அதிமுக. எனினும் விஜயகாந்த்தின் செயல்பாடு இல்லாத கட்சியை அதிமுக கண்டுகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

    ராகுல் காந்தி தலைமையை ஏற்காத மக்கள்? அமேதியிலும் அடி.. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடருகிறது ராகுல் காந்தி தலைமையை ஏற்காத மக்கள்? அமேதியிலும் அடி.. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடருகிறது

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சி

    தேர்தல் செலவுக்கு பணம் தரப்படவில்லை என்றும், தொகுதிகளில் போதிய ஒத்துழைப்பு இல்லை என்றும் சொல்லப்பட்டது. சீட் தந்த 4 இடங்களில் ஒன்றில்கூட முன்னிலை இல்லை என்று சொல்லப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் சுதீஷ் ஜெயிச்சாலே போதும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

    பிரேமலதா

    பிரேமலதா

    தேமுதிகவின் இவ்வளவு மோசமான தோல்விக்கு என்ன காரணம்? விஜயகாந்த் பேசாததும், விஜயகாந்த் மகன் பேசியதும்தான் நிலைமை சீர்கெட்டதற்கு காரணம். பிரேமலதாவின் உளறல், சர்ச்சை பேச்சினையும், சில பிரச்சாரங்களில் வேனை விட்டு கீழே கூட இறங்காததும்கூட மக்களை யோசிக்க வைத்திருக்கலாம்.

    போராட்டங்கள்

    போராட்டங்கள்

    ஒரு கட்சிக்கு தேவை பலமான தலைமை, உறுதியான கொள்கை பிடிப்பு, மக்கள் பிரச்சனைகளை கையாளும் முறை! எத்தனை மக்கள் பிரச்சனையில் கலந்து கொண்டது இந்த கட்சி? எத்தனை போராட்டங்களை முன்னெடுத்து சென்றது?

    கெத்து

    கெத்து

    ஆனால் இது எதையுமே தேமுதிக கையாளவில்லை. அந்த கட்சியில், விஜயகாந்த் குடும்பத்தை தாண்டி முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் யார் என்றுகூட தெரியாத நிலையில் மக்கள் எப்படி அங்கீகாரம் தருவார்கள்? கட்சியை பலப்படுத்தும் வேலையில் இறங்காமல் வெறும் பேரத்தை நடத்தி கெத்து காட்டினார்கள் சுதீஷூம், பிரேமலதாவும்.

    கட்டுக்கோப்பு

    கட்டுக்கோப்பு

    முதலில் கட்சியை கட்டமைக்க வேண்டியது தேமுதிகவின் அத்தியாவசிய நிலைமை. ஏனெனில் ஒரு கட்சிக்கான கட்டுக்கோப்பும் இழந்து காணப்படுகிறது தேமுதிக. அதனால் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளது. அதற்கு களப்பணிகளில் தீவிரமாக இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    வெறும் பேரம்

    வெறும் பேரம்

    இனியாவது தொண்டர்களை மதித்து நடக்கவும், வெறும் பேரம் பேசுவது மட்டுமே ஒரு கட்சி தலைமையின் முழு வேலை கிடையாது என்பதையும் உணர வேண்டும்.. முக்கியமாக பிரேமலதா! ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டே இருந்தால்தான் அதற்கு மதிப்பு... அப்படியே தேங்கி நின்றுவிட்டால் அதன் பெயர் குட்டை! ஒன்றுக்கும் பிரயோஜனம் ஆகாமல் போய்விடும் என்பதற்கு தேமுதிக சிறந்த உதாரணம்!

    English summary
    DMDK trailing in four Constitution including Sudheesh in Kallakurichi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X