சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேமுதிக உள்ளே வந்தால் திமுகவுக்கு பெரும் சிக்கலாகும்.. கணக்கு இடிக்குது பாருங்க!

திமுக கூட்டணிக்குள் தேமுதிக வருமா? அல்லது விசிக வெளியேறுமா? என தெரியவில்லை.

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதி பங்கீட்டு விஷயத்தில் அவசரப்பட்டு விட்டாரோ என்றே தோன்றுகிறது!

அதிமுகவுடன் பாமக சேர்ந்ததுமே 7 மற்றும் ஒன்று என தொகுதியை ஒதுக்கியது. இது யாருமே எதிர்பாராத ஒன்று. பாமக எங்கு போனாலும் கூடுதலாக இடங்களைப் பெறும் என்பது அனைவரும் அறிந்ததே.

பாமகவுக்கு, அதிமுக சுளையாக 7+1 என்ற தரவும் ஆடிப்போனது திமுக. இதனால்தான் காங்கிரஸ் கேட்ட 10 சீட்டுகளை உடனடியாக தந்துவிட்டது. ஆனால் இப்போது சிக்கல் என்னவென்றால், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகியவை லிஸ்ட்டில் உள்ளன.

23 ஆக குறையும்

23 ஆக குறையும்

தற்போது திமுகவிடம் மொத்தமாக 30 தொகுதிகள் கை வசம் உள்ளன. இதில் தேமுதிக கூட்டணிக்குள் வந்தால் கணக்கு பெரும் குழப்பமாகும். எப்படி என்றால் தேமுதிகவுக்கு 7 தொகுதிகள் தருவதாக இருந்தால், திமுகவின் சீட் இருப்பு 23 ஆக குறையும்.

குறைந்துவிடும்

குறைந்துவிடும்

மனித நேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியோருக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது. எனவே 23லிருந்து 6 தொகுதிகளைக் கழித்தால், 17 ஆக குறைந்து விடும்.

உதயசூரியன்

உதயசூரியன்

இதில், மதிமுக, விசிக, மமக ஆகியோரை உதயசூரியன் சின்னத்திலேயே திமுக போட்டியிட வைக்கப் போவதாக தகவல் உள்ளது. அப்படிப் பார்த்தால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக இருக்கும். எப்படிப் பார்த்தாலும் தேமுதிக உள்ளே வந்தால் திமுகவின் தொகுதிகள் 15 முதல் 17 ஆக சுருங்கும் ஆபத்து உள்ளது.

வெளியேறுமா?

வெளியேறுமா?

திமுக இதுவரை இந்த அளவுக்கு குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டதில்லை என்பதால் இது கட்சியினரை மனதளவில் பாதிக்க செய்யும். அதேசமயம் தேமுதிக உள்ளே வருவதாக இருந்தால் மற்ற குட்டிக் கட்சிகளுக்கு சீட் கிடைக்காமல் போகக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன. அவர்கள் வெளியேறும் வாய்ப்பையும் நாம் மறுக்க முடியாது.

அவசரப்பட்டாரா?

அவசரப்பட்டாரா?

விஜயகாந்த் உள்ளே வந்தால் விசிக, மதிமுக இரண்டில் ஒன்று வெளியேறும் நிலை ஏற்படும் என சொல்லப்படுகிறது. இப்படி ஒரு நிலைமை இதுவரை திமுகவுக்கு வந்தது இல்லை. அதனால் காங்கிரசுக்கு 10 என்பதில் ஸ்டாலின் அவசரப்பட்டு விட்டாரோ என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

English summary
If DMDK enters into the DMK alliance, the retuls MDMK or VCK would expelled
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X