சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஜயகாந்த் குடும்பத்துகே சீட் கொடுக்கக் கோரி தேமுதிகவினர் விருப்ப மனு.. யார் யார் எங்கெங்கு.. லிஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விஜயகாந்த் குடும்பத்துகே சீட் கொடுக்கக் கோரி தேமுதிகவினர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் இனி அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக, தங்களுக்கு எத்தனை தொகுதிகள், எவை எவை போட்டியிடும் தொகுதிகள் என்பதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த பலமுறை அழைத்துள்ளது. ஆனால் இதுவரை அதிமுக தரப்பு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதேநேரம் மறைமுகமாக பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறப்படுகிறது.

களைகட்டிய அதிமுக விருப்ப மனு தாக்கல்.. சீனியர் அமைச்சர்கள் எங்கு போட்டியிட போகிறார்கள் தெரியுமா? களைகட்டிய அதிமுக விருப்ப மனு தாக்கல்.. சீனியர் அமைச்சர்கள் எங்கு போட்டியிட போகிறார்கள் தெரியுமா?

தனித்து போட்டி

தனித்து போட்டி

தேமுதிகவிற்கு எத்தனை தொகுதிகள் கொடுக்கப்படும் என்பது குறித்து இதுவரை அதிமுக இறுதி செய்யவில்லை. அதேநேரம் எப்படியாவது அதிக தொகுதிகளை பெற வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது. தேமுதிக இடம் பெற்றுள்ள அணி தான் தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கும் என்று பிரமலதா மற்றும் சுதீஷ் ஆகியோர் செல்லும் இடங்களில் எல்லாம் தெரிவித்து வருகிறார்கள். உரிய முக்கியத்துவம் தராவிட்டால், தாங்கள் தனித்து போட்டியிடக்கூட தயங்க மாட்டோம் என்று தேமுதிக தலைமை கூறிவருகிறது.

குடும்பத்திற்கே மனு

குடும்பத்திற்கே மனு

இந்த சூழலில் சட்டசபை தேர்தலில் போட்டியிட தேமுதிகவினர் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேமுதிகவினர் ஆர்வமுடன் விருப்பமனு தாக்கல் செய்து வருகிறார்கள். இந்த முறை விஜயகாந்த் குடும்பத்திற்கே சீட் கேட்டு விருப்ப மனுக்களை கட்சி தலைமையிடம் தாக்கல் செய்துள்ளனர்.

விருகம்பாக்கம்

விருகம்பாக்கம்

விஜயகாந்த் - விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடவும், விஜயபிரபாகரன் - அம்பத்தூரில் போட்டியிடவும் தேமுதிகவினர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். கட்சியின் பொருளாளர் பிரேமலதா விருகம்பாக்கம் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று கூறி தேமுதிக தொண்டர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக தருமா

அதிமுக தருமா

சுதீஷ்க்கு எந்த தொகுதி என்று தெரியவில்லை. இந்த முறை விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் இல்லை. எனினும் விஜயகாந்த் தவிர, அவரது மகன் விஜயபிரபாகரன் மற்றும் அவரது மனைவி பிரேமலாதா ஆகியோர் சென்னையிலேயே போட்டியிட வேண்டும் என்றே தேமுதிகவினர் விரும்புகிறார்கள். அதுவும் விஜயகாந்த் வசிக்கும் விருகம்பாக்கம் தொகுதியை தேமுதிகவினர் விரும்புவது விருப்பமனு மூலம் தெரிகிறது. எனவே விருகம்பாக்கம்,அம்பத்தூர், விருத்தாசலத்தை அதிமுக தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
DMDK Members petition seeking seat for Vijayakanth family. Vijayakandh to contest in Virudhachalam constituency and Vijayaprabhakaran to contest in Ambattur and Premalatha Virukambakkam to contest in virugambakkam constituencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X