சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகன் ஏண்டா வர்றீங்கன்னு கேட்கிறார்.. அம்மா வா போன்னு பேசுகிறார்.. என்ன நாகரீகம் இது?!

கூட்டணி கிடைக்காத விரக்தியில் தேமுதிக சிக்கி உள்ளதாக தெரிகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி

    சென்னை: ஒன்னும் சொல்றதுக்கில்லை.. தேமுதிகவுக்கு நேரம் சரியில்லை.. அவ்வளவுதான்.. அதான் இப்படி அந்த கட்சி விரக்தியின் உச்சியில் ஏறி உட்கார்ந்து கொண்டுள்ளது!

    கடந்த ஒரு வருடமாகவே தேமுதிக என்ற கட்சியின் பெயரை உச்சரித்தவர்கள் ரொம்பவும் குறைவு. ஏனென்றால் ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டே இருந்தால்தான் அதற்கு மதிப்பு... அப்படியே தேங்கி நின்றுவிட்டால் அதன் பெயர் குட்டை... ஒன்றுக்கும் பிரயோஜனம் ஆகாமல் போய்விடும்!

    அப்படித்தான் சில வருடமாகவே ஆகிவிட்டது தேமுதிக. விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லை, அதனால் அவரால் கட்சியை நடத்த முடியவில்லை, சிகிச்சையில் உள்ளார், தள்ளாமையில் இருக்கிறார்... இதெல்லாம் சரி.

    பிரேமலதா மேடம்.. இதுக்குத்தான் யோசிச்சு பேசணும்.. பாருங்கள் இப்ப டிவிட்டரில் டிரெண்டாகிட்டீங்க! பிரேமலதா மேடம்.. இதுக்குத்தான் யோசிச்சு பேசணும்.. பாருங்கள் இப்ப டிவிட்டரில் டிரெண்டாகிட்டீங்க!

    நிர்வாகிகள்

    நிர்வாகிகள்

    ஆனால் அவரை தவிர வேறு யாருமே அந்த கட்சியில் இல்லையா? எல்லாம் இந்த ஒரு வருஷமா எங்கே போனாங்க? நிர்வாகிகள் பெயர்கள் யாருக்காவது தெரியுமா? எத்தனை மக்கள் பிரச்சனையில் கலந்து கொண்டது இந்த கட்சி? எத்தனை போராட்டங்களை முன்னெடுத்து சென்றது?

    மக்கள் பிரச்சனைகள்?

    மக்கள் பிரச்சனைகள்?

    தனி மனித போராட்டங்களை இந்த கட்சியில் யாராவது நடத்தியது உண்டா? யார் தன்னுடன் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி.. தனியாளாக தலையில் ஒரு துண்டை கட்டிக் கொண்டு கையில் அரிவாளுடன் வைகோ கருவேல மரங்களை வெட்ட சென்றாரே.. அப்படிகூட யாரும் இதுவரை மண்ணின் பிரச்சனையை கையில் எடுக்கவில்லையே? இதையெல்லாம் விட்டுவிட்டு யாரும் சீட் தர முன்வரவில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு? கட்சி செல்வாக்காக இல்லை என்றுதானே அர்த்தம்?

    பொறுமை இல்லை

    பொறுமை இல்லை

    இதை புரிந்து கொள்ளாமல் குடும்பத்தில் ஆளாளுக்கு கோபப்பட்டால் என்ன அர்த்தம்? நேற்று சுதீஷ் ஏன் செய்தியாளர்கள் சந்திப்பில் சரியாக பேசவில்லை. எதற்காக கோபத்தை காட்ட வேண்டும்? ஏன் பாதியிலேயே கிளம்பி செல்ல வேண்டும்? ஒருவேளை நேற்று சுதீஷ் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பொறுமையாகவும், முழுமையாகவும் பதிலளித்து இருந்தால் இன்றைக்கு செய்தியாளர்கள் ஏன் பிரேமலதாவிடம் கேட்க முன்வரவேண்டும்?

    விரக்தியேதான்

    விரக்தியேதான்

    மகன் ஒரு பக்கம் மைக்கில் கண்டமேனிக்கு பேசுகிறார், சுதீஷ் அப்படித்தான் பேசுகிறார், பிரேமலதாவும் அப்படித்தான் பேசுகிறார். இது என்ன அரசியல் நாகரீகம்? ஒருவேளை யாருமே தங்களை சேர்த்து கொள்ளவில்லை என்ற உச்சக்கட்ட விரக்திக்கே தேமுதிக போய்விட்டது என்பதுதான் இதன்மூலம் தெரிகிறது. "கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு உட்காருவான்"... என்னமோ இந்த பழமொழி இப்ப ஞாபகத்துக்கு வந்து போகிறது.

    English summary
    Premalath and Sudeesh are in great frustration due to DMKD Alliance Issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X