சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூட இருந்த எல்லோரும் கைவிட்டுவிட்டனர்.. ஏமாற்றத்தில் பிரேமலதா.. தேமுதிகவிற்கு இப்படி ஒரு நிலையா?

ஒரு காலத்தில் தேமுதிகவுடன் நெருக்கமாக இருந்த கட்சிகள் எல்லாம் தற்போது நல்ல நிலையில் இருக்க, தேமுதிக மட்டும் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே செல்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    DMDK : கட்சி மாறும் நிர்வாகிகள்.. கலைய போகிறது தேமுதிக?

    சென்னை: ஒரு காலத்தில் தேமுதிகவுடன் நெருக்கமாக இருந்த கட்சிகள் எல்லாம் தற்போது நல்ல நிலையில் இருக்க, தேமுதிக மட்டும் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே செல்கிறது.

    தேமுதிக, விஜயகாந்த் ஆக்டீவ் அரசியலில் இருக்கும் போது, இந்த கட்சிதான் வருங்கால ஆளும் கட்சி என்று கூட கணிக்கப்பட்டது. அதேபோல் நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அதிமுகவுடன் கூட்டணி வைத்து கூட சட்டமன்ற தேர்தலை சந்தித்தது.

    அந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, எதிர்கட்சியாகவும் ஆனது. ஆனால் அதன்பின் சரிவை சந்திக்க தொடங்கிய தேமுதிக தற்போது மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.

    மக்கள் நல கூட்டணி

    மக்கள் நல கூட்டணி

    தேமுதிகவின் உண்மையான சரிவு எப்போது தொடங்கியது என்றால் , அந்த கட்சி மூன்றாவது அணியை தமிழகத்தில் உருவாக்க முயன்ற போதுதான். தமிழகத்தில் அதிமுக, திமுக இல்லாமல் மூன்றாவது அணியாக மக்கள் நலக்கூட்டணி உருவானது. ஆனால் எந்த தேர்தலிலும் இந்த கூட்டணி சரியாக வாக்குகளை பெற்று எந்த விதமான மாற்றமும் ஏற்படுத்தவில்லை.

    எப்படி

    எப்படி

    தேமுதிக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ் மாநில காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் மக்கள் நல கூட்டணியில் இடம்பெற்று இருந்தது. இந்த கூட்டணி பாஜகவுடன் கூட்டணி வைத்து கூட 2014 லோக்சபா தேர்தலை சந்தித்தது. சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் இரண்டிலும் இந்த கூட்டணி மோசமாக தோல்வியை தழுவியது.

    இப்போது என்ன

    இப்போது என்ன

    இந்த நிலையில் அந்த கூட்டணியில் இருந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் எல்லாம் தற்போது திமுகவுடன் சேர்ந்துவிட்டது. அதிலும் இந்த கட்சிகளுக்கு தற்போது தலா இரண்டு எம்பிக்கள் வேறு இருக்கிறார்கள். ராஜ்யசபா மற்றும் லோக்சபாவில் இவர்களின் குரல்கள் அதிகம் கவனிக்கப்படுகிறது. இவர்களின் வாக்கு வங்கியும் பல மடங்கு கூடியுள்ளது.

    பாமக என்ன

    பாமக என்ன

    அதுபோக இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுடன் இடம்பெற்று இருந்த பாமக கூட ராஜ்யசபா எம்பியாக அன்புமணி ராமதாஸை பெற்றுவிட்டது. ஆனால் தேமுதிக மட்டும் எந்த விதமான நல்ல விஷயமும் நடக்காமல் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. சட்டசபையிலும் அந்த கட்சிக்கு பலம் இல்லை, லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவில் அந்த கட்சிக்கு பலம் இல்லாமல் போய்விட்டது.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    இதுபோக லோக்சபா தேர்தலில் அதிமுகவிற்கு தேமுதிகவால் எந்த விதமான பலனும் இல்லை. வேலூர் லோக்சபா தேர்தலில் கூட, பிரேமலதாவின் சொந்த தொகுதியான ஆம்பூரில் கூட அதிமுக கூட்டணியால் திமுகவை விட அதிக வாக்குகள் வாங்க முடியவில்லை. பிரேமலதா இங்கு தீவிர பிரச்சாரம் செய்தது எல்லாம் வீணாய் போனது. இதனால் தேமுதிகவை இனியும் கூட்டணியில் வைத்து இருப்பது சரியாக இருக்குமா என்று அதிமுக தலைவர்கள் கருதுகிறார்கள்.

    எல்லாம் போச்சு

    எல்லாம் போச்சு

    முன்பு கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் தற்போது நல்ல நிலையில் இருக்க தேமுதிக நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வருகிறது. தேமுதிகவை அதிமுகவும் கைவிட போவதாக வரும் தகவலால் பிரேமலதா தரப்பு ஆடிப்போய் இருக்கிறது. விஜயகாந்த்தின் உடல்நிலை சரியான நிலையில் இல்லாததால் அவராலும் தனது தொண்டர்களிடம் வந்து பேச முடியவில்லை என்பது இன்னும் வருத்தமான விஷயம்!

    English summary
    DMDK party reaches its worst-case scenario of the political era after too many lose.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X