சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாஸ்க்குடன் வந்த விஜயகாந்த்.. எல்லாருக்கும் முகமூடி.. அதையும் தாண்டி தெறித்த சந்தோஷம்.. சூப்பரப்பு!

நிர்வாகி திருமணத்தை தன் வீட்டில் நடத்தினார் விஜயகாந்த்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு கூட்டம் கூடல.. தடபுடல் இல்லை.. அமர்க்களம் இல்லை.. படு சிம்பிளாக அதே சமயம் உரிய பாதுகாப்புடன் நிர்வாகி ஒருவருக்கு தன் வீட்டில் கல்யாணத்தை செய்து வைத்துள்ளார் விஜயகாந்த்..

Recommended Video

    மாஸ்க்குடன் வந்து நிர்வாகியின் திருமணத்தை நடத்தி வைத்த விஜயகாந்த்

    கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மக்கள் கூட்டம் கூடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ஏற்கனவே முகூர்த்த தேதி குறித்தவர்கள் மட்டும் கூட்டம் கூடாத வகையில் நடத்தி கொள்ள வேண்டும், புதியதாக யாரும் கல்யாணத்திற்கான திட்டங்களை வகுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

    ஊரடங்கு

    ஊரடங்கு

    அதன்படி பல்வேறு திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன.. அதேசமயம் இன்றைய தினம் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடித்தும் வருகின்றனர்... இன்று முகூர்த்த நாள்.. எனினும் மதுரையில் இன்று நடைபெற இருந்த 24 திருமணங்கள் சுய ஊரடங்கையொட்டி தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றனவாம்.. திருமண ஏற்பாடு செய்தவர்கள் தாங்களாகவே முன்வந்து இந்த திருமண நிகழ்ச்சிகளை ஒத்திவைத்திருப்பதாக தகவல் தெரிய வந்திருக்கிறது.

    திருமணம்

    திருமணம்

    ஒருசிலர் மட்டும் தவிர்க்க முடியாமல் இன்றைய தினம் திருமணத்தை நடத்தி உள்ளனர்.. அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி நிர்வாகியின் கல்யாணத்தை வித்தியாசமாக நடத்தி வைத்துள்ளார்.. மணமக்கள் பெயர் விமல் - கமலி.. இவர்களுக்கு இன்று தேமுதிக தலைமை கழகத்தில்தான் கல்யாணம் நடப்பதாக இருந்தது.. அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்த நிலையில்தான் மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு வெளியானது.

    நிர்வாகி

    நிர்வாகி

    இந்த உத்தவை மதிக்கும் நோக்கத்துடன், தலைமை கழகத்தில் திருமணம் செய்யவிருந்தது நிறுத்தப்பட்டது.. அதே சமயம், இல்வாழ்க்கை துவங்கவிருக்கும் மணமக்களும் பல்லாண்டு வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன், தன்னுடைய வீட்டிற்கே மணமக்களை வரவழைத்து விஜயகாந்த் கல்யாணம் செய்து வைத்துள்ளார்.. கூட்டம் கூடவில்லை, ஜனநாட்டம் இல்லை, தடபுடல் இல்லை.. மிக மிக எளிய முறையில், இந்த திருமணம் நடந்துள்ளது.

    வீட்டிலேயே கல்யாணம்

    வீட்டிலேயே கல்யாணம்

    முக்கியமாக கல்யாணத்தில் மாப்பிள்ளை, பெண் உட்பட எல்லாருமே முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தனர்.. சானிடைசர் உட்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த திருமணம் நடந்தது.. விஜயகாந்தும், பிரேமலதாவும் மணமக்களை மனசார ஆசீர்வாதம் செய்தனர். மணமக்கள் தரப்பு வீட்டினர் மட்டுமே விஜயகாந்த் வீட்டிற்குள் இருந்தாக கூறப்படுகிறது. வழக்கம்போல ஒயிட் & ஒயிட் டிரஸ்ஸில், கூலிங்கிளாஸ் அணிந்திருந்தார் விஜயகாந்த்.. மறக்காமல் நெற்றியில் விபூதி பளிச்சிட்டது.

    வணக்கம்

    வணக்கம்

    ஆனால் மொத்தமாக மாஸ் போட்டு முகத்தை மூடியவாறே இருந்தார்.. ஒரு சேரில் அவரை மட்டும் உட்கார வைத்திருந்தனர். அங்கிருந்தவர்கள் விஜயகாந்த்துக்கு வணக்கம் வைக்க, பதிலுக்கு வணக்கம் வைத்து புன்முறுவலுடன் இருந்தார் விஜயகாந்த்! ஆனாலும் இந்த திருமணத்திற்கு விஜயகாந்த் வராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    அதான் விஜயகாந்த்

    அதான் விஜயகாந்த்

    காரணம் அவர் உடல் நலம் சரியில்லாதவர். அறுவை சிகிச்சைக்கும் உட்பட்டவர். நோய் தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்பவர். எனவே இந்த திருமணத்திற்கு அவர் வராமல் பார்த்திருக்கலாம். இருந்தாலும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் நடத்தியுள்ளனர். பாராட்ட வேண்டியதுதான்... எப்படியோ.. நிர்வாகியின் கல்யாணமும் நடந்தாச்சு.. அரசின் உத்தரவையும் மதிச்சாச்சு.. அதான் விஜயகாந்த்!

    English summary
    dmdk person marriage function shifted to vijayakanths house
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X