• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பிரேமலதாவுக்கு புதிய பதவியா.. தினகரனும் ஓகே சொல்லி விட்டாராமே.. பரபரக்கும் அமமுக கூட்டணி!

Google Oneindia Tamil News

சென்னை: அமமுகவில் தேமுதிக கூட்டணி வைத்துள்ள நிலையில், பிரேமலதா குறித்து ஒரு முக்கிய செய்தி ஒன்று பரபரத்து வருகிறது..!

கூட்டணிக்காக இந்த முறையும் தேமுதிக திணறிவிட்டது.. முதலில் அதிமுக பக்கம் சென்றது.. பலமுறை அமைச்சர்கள் பேச்சு நடத்திய நிலையில், 13 சீட்கள் + ராஜ்ய சபா சீட் தர அதிமுக முன்வந்தது..!

ஆனால், கூடுதல் சீட்டுகளுடன் தேர்தல் நிதியும் வேண்டும் என்று கேட்கவும், அத்துடன் தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையை அதிமுக நிறுத்தி கொண்டது.

"எடப்பாடி ஐயா.. இதைவிட வேறென்ன வேணும் சொல்லுங்க".. ராயல் சல்யூட் அடிக்கும் பெண்கள்..!

திமுக

திமுக

பிறகு திமுகவுடன் பேச, அவர்களோ "அதிமுக 10 சீட்தான் முடியும், உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி, தேர்தல் நிதி, ராஜ்ய சபா சீட் இதுக்கெல்லாம் 'நோ' சொல்லவும் அப்படியே திரும்பிவிட்டது. அடுத்து கமலிடம் சென்றது.. "தேர்தல் செலவுக்கு எங்களுக்கு எவ்வளவு தர போகிறீர்கள்" என்று கமல் தரப்பில் கேட்கவும், அப்படியே ஜெர்க் ஆகி யூடர்ன் அடித்துவிட்டது.. இறுதியில், அமுமுகவில் சரண் அடைந்தது.

டிடிவி

டிடிவி

ஆனால், டிடிவி தினகரனோ, எடுத்த எடுப்பிலேயே, முதல்வர் வேட்பாளர் நான்தான்... சீட் எவ்ளோ வேணுமோ வாங்குங்க.. பணம் எல்லாம் கிடையாது என்று தினகரன் ஸ்ட்ரிடிக்ட்டாக சொல்லிவிடவும், தினகரனை முதல்வர் வேட்பாளராக ஏற்க தேமுதிகவுக்கு மனசே வராமல் இருந்துள்ளது.. பிறகு 3 நாள் கேப் விட்டு, தடுமாற தொடங்கி, கடைசியில் அமமுகவிடமே சரணாகிவிட்டது.

 கூட்டணி

கூட்டணி

60 சீட்டுகளையும் பெற்றுக் கொண்டுவிட்டது. அங்கே கூட 70 தொகுதிகள் முதலில் கேட்டார்களாம்.. பிறகுதான் 60 சீட் ஓகே ஆகி உள்ளது... இதற்கு பிறகு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அமமுக வேட்பாளர்களையும் அமமுக திரும்ப பெற்றது. கோவில்பட்டியில் தினகரன் போட்டியிடுவதாலும், அங்கு நாயக்கர்கள் வாக்குகள் அதிகம் உள்ளதாலும் தேமுதிகவின் தயவும் அமமுகவுக்கு தேவைப்படும் நிலையில் உள்ளது.

 விருதாச்சலம்

விருதாச்சலம்

அதேபோல, விருத்தாசலத்தில் பிரேமலதா போட்டியிடுகிறார்... விஜயகாந்த் கட்சி தொடங்கி முதன்முதலாக போட்டியிட்டது இந்த தொகுதியில்தான்.. அப்போது 61,337 வாக்குகளை விஜயகாந்த் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கோவிந்தசாமியோ 47,560 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

கூட்டணி

கூட்டணி

இதற்கு பிறகு 2011-ல் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.. அதனால்தான் விருத்தாசலம் வேண்டும் என்று அதிமுகவிடம் ஒற்றைக்காலில் நின்றது தேமுதிக.. இப்போது அமமுகவில் தொகுதிகள் ஓகே ஆகிவிட்டதால், தேமுதிகவுக்கே கிடைத்துள்ளது.

 பிரேமலதா

பிரேமலதா

இந்த முறை விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதால், பிரேமலதா களம் இறங்கி உள்ளார்.. அதிலும் அதே விருதாச்சலத்திற்கு குறி வைத்துள்ளார்.. இங்கு போட்டியிடுவது தேமுதிகவுக்கு பாதுகாப்பானது என்றும் கருதுகிறார்.. இது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தி வருகிறது.

 துணை முதல்வர்

துணை முதல்வர்

இந்த சமயத்தில் இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. அமமுகவை பொறுத்தவரை முதலமைச்சர் வேட்பாளராக டிடிவி தினகரனை ஏற்றுக் கொள்ள தேமுதிக சம்மதித்துவிட்டதால், அடுத்துள்ள துணை முதலமைச்சராக பிரேமலதா விஜயகாந்த்தை ஏற்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாம். இந்த கண்டிஷனை அமமுகவும் ஏற்றுக்கொண்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு பக்கம் விருதாச்சலம், இன்னொரு பக்கம் துணை முதல்வர் என அசத்த போகிறார் எங்க அண்ணியார் என்று துள்ளி குதிக்கின்றனர் தேமுதிகவினர்..

English summary
DMDK Premalatha gets deputy Chief Ministers post AMMK Decision
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X