சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குண்டை தூக்கி போட்ட பிரேமலதா.. மிரண்டு போன எடப்பாடியார்.. குளிர்ந்த அமமுக.. அடுத்து என்னாகும்..?

சசிகலா விடுதலை பற்றி பிரேமலதா கருத்து கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: ஒத்த பேட்டி தந்து அதிமுக தரப்பையே நிலைகுலைய வைத்து விட்டார் பிரேமலதா.. இதனால் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.

Recommended Video

    சென்னை: கூட்டணி பேச்சுவார்த்தை…. ஸ்டார்ட் பண்ணுங்க: அதிமுகவுக்கு நெருக்கடி தரும் அண்ணியார்

    சென்ற எம்பி தேர்தலிலாவது, கடைசி நேரத்தில் தேமுதிக கூட்டணியில் சேர்த்து கொள்ளப்பட்டது.. பாமகவுடன் போட்டி போட்டுக் கொண்டு அவர்களை போலவே, தங்களுக்கும் சீட் அதிகமாக வேண்டும் என்று தேமுதிக பிடிவாதம் காட்டியது.

    அத்துடன், அதிமுகவுடன் கூட்டணி பேசிக் கொண்டே திமுகவுடனும் பேச்சை நடத்தியது வெட்ட வெளிச்சமானது..

     பாஜக

    பாஜக

    இதனாலேயே அதிமுகவில் தேமுதிகவை சேர்த்து கொள்ள தயக்கம் காட்டப்பட்டது.. கடைசியில், பாஜகவின் சிபாரிசால்தான், இணையும் சூழல் நடந்தது. இதையெல்லாம் மறந்துவிட்டு, தேமுதிக மேலும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதையும் மறந்துவிட்டு, விஜயகாந்தால் பிரச்சாரம் செய்ய முடியாத நிலை உள்ளது என்பதையும் மறந்துவிட்டு, 41 சீட்டுக்கள் வேண்டும், இல்லாவிட்டால் தனித்து நிற்போம் என்று கெத்து காட்டி வருகிறார் பிரேமலதா.

     சசிகலா

    சசிகலா

    ஆனால், வழக்கம்போல அதிமுக இதையும் கண்டுகொள்ளவில்லை.. அதிமுகவுக்கு திமுகவை சமாளிக்கவும், சசிகலா வருகையை பற்றின கலக்கமே அதிகமாக இருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார் பிரேமலதா.. அதாவது, சசிகலாவை ஒரு பெண்ணாக நின்று வரவேற்கிறேன் என்று பேட்டி தந்ததுடன், சசிகலாவை தாறுமாறாக புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

     அமைச்சர்கள்

    அமைச்சர்கள்

    அமைச்சர்கள் யாரையுமே சசிகலா பற்றி பேசக்கூடாது, கருத்து சொல்லக்கூடாது என்று முதல்வர் ஏற்கனவே வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், பிரேமலதாவின் இந்த பேச்சு முதல்வர் தரப்புக்கு அதிர்ச்சியை தந்துள்ளதாம்.. சொந்த கட்சி என்றால் பரவாயில்லை, கூட்டணியில் இருக்கிறவர்களை கட்டுப்படுத்தும் உரிமை அதிமுகவுக்கு இல்லை.. அதேசமயம், சசிகலாவை ஆதரிப்பதன் மூலம் அதிமுகவை பிரேமலதா மறைமுகமாக அச்சுறுத்தியுள்ளாரோ என்ற சந்தேகமும் எழுகிறது.

    தேமுதிக

    தேமுதிக

    மேலும், தேமுதிக, அமமுகவுடன் இணையுமோ என்ற சந்தேகமும் வருகிறது.. ஏனென்றால், அமமுகவுடன் தேமுதிக இணைந்தால் பல இடங்களில் அது அதிமுகவின் தேர்தல் வெற்றிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்றும் கருதப்படுகிறது.. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் இந்த கருத்து, சசிகலாவை ஓரங்கட்ட நினைக்கும் எடப்பாடியார் தரப்பிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

     சிக்கல்?

    சிக்கல்?

    ஏற்கனவே கூட்டணி இழுபறியில் உள்ளது.. இப்படியெல்லாம் பேசினால், கூட்டணி பேச்சுவார்த்தையிலும் மேலும் சலசலப்பை ஏற்படுத்தலாம் என்று தெரிகிறது. ஒருவேளை, தாங்கள் கேட்ட சீட் எண்ணிக்கை தரப்படவில்லையானால், அமமுகவுடன் இணைந்துவிடுவோம் என்பதற்கான மறைமுக மிரட்டலா இது? பிரேமலதாவின் இந்த பேச்சு எடப்பாடியாருக்கு அச்சுறுத்தலா? அல்லது அமமுகவுக்கு அச்சாரமா? தெரியவில்லை.. பார்ப்போம்!

    English summary
    DMDK Premalatha says about Sasikala Release
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X